Wednesday, December 31

’சுழல் 2’ – விமர்சனம்

முதல் சீசனை போலவே இரண்டாவது சீசனும், ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பான திரைக்கதையுடன் பயணித்து ரசிகர்களை கவரும் வண்ணம்  ‘சுழல் – தி வோர்டெக்ஸ் – சீசன் 2’வும் உள்ளது .

முதல் சீசனின் முக்கியக் கதாபாத்திரங்களாக இடம் பெற்றவர்களான காவல் உதவி ஆய்வாளர் சர்க்கரை (கதிர்) மற்றும் நந்தினியும் (ஐஸ்வர்யா ராஜேஷ்) இந்த சீசனிலும் மீண்டும் இடம் பெற்றுள்ளனர்.முதல் பாகத்தின் முடிவில் நந்தினி சிறைக்குச் செல்வதோடு தொடர் முடிந்தது.இரண்டாவது சீசனில் வழக்கறிஞரும், சமூக ஆர்வலருமான செல்லப்பா(லால்), அவரது வீட்டில் சுட்டுக் கொலை செய்யப்படுகிறார். அந்த கொலை வழக்கினை சப்-இன்ஸ்பெக்டர் கதிர், காவல் நிலைய ஆய்வாளர் சரவணனுடன் இணைந்து விசாரிக்க ஆரம்பிக்கிறார் கொலை பற்றி எந்தவிதமான தகவலும் கிடைக்காக சூழலில் , வெவ்வேறு காவல் நிலையங்களில் லாலை கொலை செய்ததாக சில இளம் பெண்கள் சரண் அடைகிறார்கள், அந்த பெண்கள் ஒரே கொலை வழக்கில் சரணடைந்தாலும், எதற்காக அவர்கள் கொலை செய்தார்கள் ? இதன் பின்னணியில் உள்ள மர்ம முடிச்சுகள் என்ன ?அதை கதிர் எப்படி கண்டுபிடிக்கிறார் ? ஐஸ்வர்யா ராஜேஷின் நிலை என்ன என்னும் பல வினாக்களுக்கு விடை தருகிறது சுழல் சீசன் 2.

இந்த வெப்சீரிஸில், முதல் சீசனில் நடித்த கதிர் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் மீண்டும் முக்கிய கதாபாத்திரங்களில் நன்கு நடித்துள்ளனர். அவர்களுடன் லால், சரவணன், கவுரி கிஷன் (முத்து), சம்யுக்தா விஷ்வநாதன் (நாச்சி), மோனிஷா பிளெஸ்ஸி (முப்பி), ரினி (காந்தாரி), ஸ்ரீஷா (வீரா), அபிராமி போஸ் (சென்பகம்), நிகிலா சங்கர் (சந்தனம்), கலைவாணி பாஸ்கர் (உலகு) ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் மஞ்சிமா மோகன் மற்றும் கயல் சந்திரன் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் இயல்பான நடிப்பை வெளிபடித்தியுள்ளார்கள்.

முதல் சீசனை போலவே இரண்டாவது சீசனும், ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பான திரைக்கதையுடன் பயணித்து ரசிகர்களை கவரும் வண்ணம் உள்ளது .முதல் சீசனை போல சிறு தெய்வ வழிபாடு,திருவிழா என்ற அம்சங்கள் இடம்பெற்று இருந்ததை போலவே , இரண்டாவது சீசனிலும் அஷ்ட காளி அம்மன் திருவிழா கதையோடு பயணிக்கிறது , அத்துடன் அஷ்ட காளிகளை பிரதிபலித்தும் வண்ணமாக 8 இளம் பெண்கள்  வடிவகப்படுத்தப்பட்டுள்ளார்கள், மேலும்  அந்த திருவிழா, கதையில் முக்கியமான தொரு அம்சமாகவே இடம் பெற்றுள்ளது.

‘சுழல்’ இணையத் தொடரை பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக கொடுத்த புஷ்கர் & காயத்ரி குழுவினர், ‘சுழல் 2’-வையும் முதல் பாகத்தின் தொடர்ச்சியான கதையினை கொண்டு சென்றிருப்பதோடு, ஆர்வம் ஊட்டும் வகையிலான திரைக்காட்சிகளோடு, தொடரின் 8 பகுதிகளையும் ரசிக்கும் படி அமைத்துள்ளார்கள். இயக்குனர்கள் பிரம்மா மற்றும் சர்ஜுன்.கே.எம் இருவரும் புஷ்கர் மற்றும் காயத்ரியோடு பயணித்து, சிறப்பான படைப்பாக இந்த சூழல் 2-வை உருவாக்கியுள்ளார்கள். இவர்களுக்கு பக்கபலமாய் .சாம் சி.எஸ்ஸின் பின்னணி இசையும்,  ஆபிரகாம் ஜோசப்பின் தரமான ஒளிப்பதிவும் , ரிச்சர்ட் கெவினின் படத்தொகுப்பும் உறுதுணையாக அமைந்துள்ளது.

மொத்தத்தில், ‘சுழல் 2’ சஸ்பென்ஸ் திரில்லர் ரசிகர்களுக்கு நிறைவானதொரு திரைவிருந்தாக அமையும்.

Spread the love