Wednesday, July 15

அகத்தியா- விமர்சனம்

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் டாக்டர் ஐசரி கே கணேஷ் மற்றும் வேம் இந்தியா சார்பில் அனீஷ் அர்ஜுன் தேவ் இணைந்து தயாரித்து, ஜீவா, அர்ஜுன், ராஷி கண்ணா நடிப்பில் பா. விஜய் இயக்கத்தில் உருவாகிஉள்ள படம் ‘அகத்தியா’ .

கலை இயக்குநரான அகத்தியன் (ஜீவா) பாண்டிச்சேரியில் ஒரு பங்களாவை உருவாக்குகிறார் ஆனால் அந்த படப்பிடிப்பு நின்று போகிறது. அதனால் அவரது உழைப்பில் உருவான செட் அப்படியே வீணாகபோடும் சூழ ஏற்படுகிறது அந்த சமயத்தில் ராஷி கண்ணா ஜீவாவிடம் அதை ஒரு ஸ்கேரி ஹவுஸாக மாற்றலாம் என ஐடியா தருகிறார்.அதன்படி ஸ்கேரி ஹவுஸாக அது மாற்றபட அதன்பின் , அங்கு பல அமானுஷிய செயல்கள் அங்கு நடக்கிறது. அப்போது ஜீவாவிற்கு கிடைக்கும் ஒரு பழைய ரீலில் சித்தார்த்தன் (அர்ஜுன்) என்கிற சித்த மருத்துவர், 1940-ல் நடந்த ஒரு கதையைச் சொல்லத் தொடங்குகிறார். அந்த கதை என்ன, இப்போதைய காலகட்டத்தில் நடக்கும் அமானுஷ்யநிகழ்வுகளுக்கும் அதற்கும் உள்ள தொடர்பு என்ன? என்பதே ‘அகத்தியா’ படத்தின் மீதி கதை.கதையின் நாயகனாக ஜீவா அகத்தியன் என்னும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்அவரை பொருத்தமட்டில் கதாபாத்திரத்துக்கு பொருத்தமான அளவில் நல்ல நடிப்பை .வழங்கியுள்ளார், சித்த மருத்துவராக நடித்துள்ள அர்ஜுன் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில், தன்னுடைய அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி ரசிக்கும்படி நடித்துள்ளார் .மேலும் ராஷி கண்ணா .வழக்கமான நாயகியாக, தன்னுடைய பங்குக்கு குறைவின்றி நடித்துள்ளார் மற்றும் வில்லனாக நடித்துள்ள எட்வர்ட், மிரட்டலான நடிப்பை கொடுத்துள்ளார், இவர்களுடன் மெடில்டா,ரெடின் கிங்ஸ்லி, ராதாரவி, நிழல்கள் ரவி, யோகிபாபு, விடிவி கணேஷ், ரோகிணி, சார்லி எனப் பலரும் பல கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

இந்தப் படத்தின் கலை இயக்குநர் சண்முகம் மற்றும் ஒளிப்பதிவாளர் தீபக் குமார் பதி என்னும் இந்த இருவரின் பங்களிப்பு படத்துக்கு பெரிய பிளஸ் என்று சொல்லலாம் யுவன் ஷங்கர் ராஜாவின் சிறப்பான பின்னணி இசை நன்றாக உள்ளது இந்த ஹாரர் ஃபேண்டஸி கதையினை பா.விஜய் இயக்கியுள்ளார்.

மொத்தத்தில் ஹாரர் – திரில்லர் – காமெடி – ஆக்ஷன்- அனிமேஷன்- ஃபேண்டஸி- இவற்றின் கலவைதான் இந்த ‘அகத்தியா’ .

Spread the love