Friday, November 27

‘சிக்னல் அட் 11.30’ – திரைப்பட விமர்சனம்

**நள்ளிரவு நேரத்தில் காணாமல் போகும் ஒரு பெண்… சாலையோரத்தில் தனியாக நிற்கும் அவரது இருசக்கர வாகனம்… அதன் பின்னணியில் ஒளிந்திருக்கும் மர்மம் என்ன?** மர்மமும் திகிலும் இணையும் கதைக்களத்துடன் உருவாகியிருக்கிறது ‘சிக்னல் அட் 11.30’.

ஒருநாள் இரவு வேலை முடிந்து வீட்டிற்குத் திரும்பிக்கொண்டிருக்கும் பவ்யா த்ரிகாவை, அடையாளம் தெரியாத சிலர் இருசக்கர வாகனத்தில் பின்தொடர்கின்றனர். அப்போது அந்த வழியாக காரில் வரும் தொழிலதிபரான சந்தோஷ் பிரதாப், சாலையோரத்தில் பவ்யாவின் வாகனம் மட்டும் தனியாக நிற்பதைக் கண்டு அவரை தேடுகிறார் மறுபுறம், தனது மகள் காணாமல் போனதால் அவரது தந்தை ஜெயப்பிரகாஷ் காவல் நிலையத்தில் புகார் அளிக்கிறார். இதையடுத்து காவல்துறையினரும் பவ்யாவைத் தேடும் பணியில் இறங்குகின்றனர். அந்த இரவில் உண்மையில் என்ன நடந்தது? பவ்யாவைத் துரத்தியவர்கள் யார்? அவர் உயிருடன் இருக்கிறாரா? இந்த மர்மத்தின் பின்னணியில் இருக்கும் உண்மை என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

மையக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சந்தோஷ் பிரதாப், கதையின் சூழலுக்கு ஏற்ப தனது நடிப்பை அளவாக வெளிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக, மர்மமான சம்பவங்களை எதிர்கொள்ளும் தருணங்களில் கதாபாத்திரத்தின் மனநிலையை இயல்பாகப் பிரதிபலித்திருக்கிறார்.பவ்யா த்ரிகா மற்றும் புஜிதா பொன்னாடா இருவரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களின் தன்மைக்கு ஏற்ற வகையில் நடித்திருக்கிறார்கள். ஜெயப்பிரகாஷ் மற்றும் முனீஷ்காந்த் ஆகியோரின் பங்களிப்பும் கதையோட்டத்திற்கு இயல்பான வலுசேர்க்கிறது.

ஒளிப்பதிவாளர் ராஜா பட்டாச்சார்ஜி, கதையின் மர்மத் தன்மைக்கு ஏற்ற காட்சிகளை நேர்த்தியான கோணங்களில் படமாக்கியிருக்கிறார். இரவு நேரக் காட்சிகளும், கதாபாத்திரங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் தருணங்களும் ஒளிப்பதிவில் கவனம் பெறுகின்றன.இசையமைப்பாளர் இமானின் பின்னணி இசை, கதையின் பரபரப்பையும் ,உணர்வுகளையும் பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது. பாடல்களும் கேட்பதற்கு இனிமையாக இடம் பெற்றுள்ளன.

காதலையும் மர்மம் நிறைந்த திரில்லர் களத்தையும் இணைத்து இப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் மலர்விழி நடேசன். கதையின் ஓட்டத்திற்கு ஏற்ற நடிகர்களையும் திறமையான தொழில்நுட்பக் கலைஞர்களையும் ஒருங்கிணைத்து, திரையில் கதையின் உணர்வுகளையும், மர்மத்தையும் வெளிப்படுத்த முயற்சித்திருக்கிறார். ஒளிப்பதிவு, இசை உள்ளிட்ட தொழில்நுட்ப அம்சங்களையும் கதையின் தேவைக்கேற்ப பயன்படுத்தியிருப்பது படத்தின் உருவாக்கத்திற்கு மேலும் உறுதுணையாக அமைந்துள்ளது.

ஒரு பெண்ணின் திடீர் மாயம்… அதற்கான விடையைத் தேடும் விசாரணை… ஒவ்வொரு தடயத்திற்குப் பின்னாலும் காத்திருக்கும் மர்மம்! என எண் அனைத்து திரில்லர் அம்சங்களும் இணைந்து உருவாகியிருக்கிறது ‘சிக்னல் அட் 11.30’.

Spread the love