Saturday, June 15

ரெட் சாண்டல் வுட்-விமர்சனம்

கதையின் நாயகனான பிரபா(வெற்றி) ஒரு குத்து சண்டை வீரர் இவருடைய நண்பர் கர்ணன் ( கபாலி விஸ்வந்த்). தன்னுடைய நண்பன் கர்ணன் ஆந்திராவில் இருப்பதை அறிந்து அவரைத் தேடிச் செல்கிறார் பிரபா . கர்ணன், செம்மரங்களைக் கடத்தும் கூட்டத்திடம் கர்ணன் சிக்கியிருப்பதை அறிந்து அங்கிருந்து நண்பனை மீட்க திட்டமிடுகிறார் பிரபா.இறுதியில் அவர் தன் நண்பன் கர்ணனை அந்த கும்பலிடமிருந்து மீட்க முடிந்ததா ? என்பதே ‘ரெட் சாண்டல் வுட்’படத்தின் மீதி கதையாகும்.

கதையின் நாயகனாக பிரபா என்னும் கதாபாத்திரத்தில் வெற்றி இயல்பாக நடித்துள்ளார், அவரது நண்பனாக நடித்துள்ள கபாலி விஸ்வநாத் ஏற்று கொண்ட கதாபாத்திரத்துக்கு தேவையான அளவில் நன்கு நடித்துள்ளார் மற்றும் சிறப்புத் தேடுதல் படை காவல் அதிகாரி ராமையாவாக நடித்துள்ள கணேஷ் வெங்கட்ராமன்,அசத்தலான வில்லனாக கேஜிஎப் ராம் ,மாரிமுத்து ,எம்எஸ் பாஸ்கர், தியா மயூரி போன்றோரும் தங்களது பாத்திரத்தின் தன்மைக்கு ஏற்ப திறம்பட நடித்துள்ளார்கள்.

வறுமையில் உலலும் மக்கள் தங்களது வாழ்வாதாரத்துக்கு போராடும் வாழ்வியலை உணர்வுப்பூர்வமாக பதிவு செய்திருக்கிறார் இயக்குனர் குரு ராமானுஜம்.

ஒளிப்பதிவாளர் சுரேஷ் பாலா காட்சிகளை சிறப்பாக  படமாக்கி உள்ளார் , அதே போலே சாம் சி.எஸ்ஸின் பின்னணி இசையும் காட்சிகளுக்கு பலம் சேர்க்கும் வகையில் இருந்தது.சிறப்பான ஒலி அமைப்புகளை ஆஸ்கார் நாயகன் ரெசுல் பூக்குட்டியும் நன்கு அமைத்துள்ளார்.


செம்மரங்களைக் கடத்தும் கூட்டத்திடம் சிக்கிக்கொள்ளும் இளைஞர்களின் வாழ்வியல் போராட்ட வலிகளை மீண்டும் பதிவு செய்துள்ள படம்.

Spread the love