Thursday, April 16

‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி’- விமர்சனம்

அன்விதா (அனுஷ்கா) தனது அம்மாவுடன் லண்டனில் வசித்து வருகிறார். உடல்நிலை பாதிக்கப்பட்ட அவரது அம்மாவின் ஆசைப்படி, இருவரும் இந்தியாவுக்கு வருகிறார்கள்.பிறகு அவரின் அம்மாவும் இறந்துவிட , திருமணமே செய்யாமலேயே குழந்தைப் பெற்றுக் கொள்ள விரும்பும் அன்விதா,அதற்காக டோனரைத் தேடும்போது , அவருக்கு சித்து (நவீன்) உடன் அறிமுகம் ஏற்படுகிறது ,சித்துவிக்கு அன்விதா மேல் காதல் ஏற்படுகிறது இறுதியில் அன்விதாவின் விருப்பமா? இல்லை சித்துவின் காதலா ? எது கை கூடியது என்பதுதான் ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி’ படத்தின் மீதிக்கதையாகும்.

அன்விதா என்னும் செஃப் கதாபாத்திரத்தில் அனுஷ்கா நடித்துள்ளார், காட்சிகளுக்கு ஏற்ற உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தி அவர் நன்கு நடித்துள்ளார். கதையின் நாயகனாய் நவீன், சித்து என்னும் ஸ்டாண்டப் காமெடியன் கதாபாத்திரத்தில் படம் முழுவதும் சிறப்பாக நடித்து ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்க்கிறார்.

எடுத்துக்கொண்ட கதைக்கு ஏற்ற வகையில் சிறந்த காட்சிகளை கொண்டு, காதலும், நகைசுவையும் கலந்த படமாக  அறிமுக இயக்குநர் மகேஷ் பாபு இந்த படத்தை நன்கு உருவாக்கியுள்ளார், அவருக்கு படத்தின் இசையமைப்பாளர் ரதனும், ஒளிப்பதிவாளர் நீரவ் ஷாவும் படத்தொகுப்பாளர் எடிட்டர் கோத்தகிரி வெங்கடேஷ்வர ராவும் உறுதுணையாக அமைந்துள்ளார்கள்.

காதல் ,காமெடி, சென்டிமென்ட்ஸ் என் அனைத்தும் கலந்த இந்த படம் பக்கா முழு நீள பொழுது போக்கு படம்.

Spread the love