Friday, April 17

ஹரா- பட விமர்சனம்

தமிழ் சினிமாவில் 80 காலகட்டத்தில் பலபடங்களில் வெற்றிகொடிகட்டிய நடிகர்.மோகனை 14 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வெள்ளித்திரை வெளிச்சத்துக்கு கொண்டுவந்திருக்கும் படம் ‘ஹரா’
கதையின் நாயகன் ராம் (மோகன்)மனைவி மற்றும் மகளுடன் மகிழ்ச்சியாக்க வாழ்ந்து கொண்டிருக்க்கும் வேலையில் ஒருநாள் அவரது மகள் நிமிஷா ரயிலில் விழுந்து தற்கொலை செய்துகொள்கிறாள் , இதன்பிறகு இப்ராஹீம் என்று தனது பெயரை மாற்றிக் கொண்டு தனது மகளுடைய தற்கொலைக்குப் பின் மறைந்து இருக்கும் இருக்கும் காரணங்களைத் அறிய முயற்சிக்கிறார். தன் மகளின் மறைவுக்கு நியாயம் தேடும் ஒரு தந்தையின் போராட்டமே மீதிக்கதை.

பாடல்களுக்கும் காதலுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் பலப்படங்களில் தனக்கென தனித்தன்மையுடன் வெற்றிவலம் வந்த வந்த நடிகர் மீண்டும் நடிக்க வருகிறார் எண்ணும்போது அவரது ரசிகர்களுக்கும், தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் அவரை பற்றி ஏற்படுத்திய எதிர்பார்பார்ப்பை தன் நடிப்பின் மூலம் மோகன் பூர்த்தி செய்துவிட்டார் என்றே சொல்லலாம். தமிழ் சினிமாவில் பல இயக்குநர்களை அறிமுகப்படுத்தியவர் தயாரிப்பாளர் சௌத்ரி சார் என்றால் பல புதுமுக இயக்குனர்களின் முதல் படங்களுக்கு வாய்ப்பு கொடுத்தவர் நடிகர் மோகன்தான்,இந்த படத்தில் தான் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்திற்க்கு ஏற்றவகையில் சிறப்பான நடிப்பை அவர் வெளிப்படித்தியுள்ளார் ..இந்த படத்தில் மோகனின் மனைவியாக அனுமோல் நடித்துள்ளார் மேலும் சுரேஷ் மேனன், யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், அனித்ரா நாயர், வனிதா விஜயகுமார், சாருஹாசன் , மனோபாலா, கௌசிக்ராம் ,மைம் கோபி, சாம்ஸ் என பல நடிகர்களும் தத்தம் கதாபாத்திரங்களில் நன்கு நடித்துள்ளார்கள்.

கதைக்கும் காட்சிகளுக்கும் ஏற்ற வண்ணம், படத்துக்கு இசையினை ரஷாந்த் அர்வினும், ஒளிப்பதிவினை பிரகத் முனியசாமி, மனோ பிரபாகரன், மோகன் குமார், விஜய் ஶ்ரீ ஜி போன்றோரும் கொடுத்துள்ளார்கள்.

விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தத்திரைப்படம் நீண்டஇடைவெளிக்குபின் ஒரு வெள்ளிவிழா பட நாயகனை கண்முன்னே வெள்ளித்திரையில் நிறுத்தியுள்ளது பாராட்டக்கூடியது .

எண்பது காலகட்டதிரை ரசிகர்களை மீண்டும் திரையரங்கினை நோக்கி ஈர்க்கும்.

Spread the love