Sunday, February 16

தண்டுபாளையம் -விமர்சனம்

தண்டுபாளையம் படத்தில்  சோனியா அகர்வால், வனிதா விஜயகுமார்,டைகர் வெங்கட் ,பிர்லா போஸ்,சூப்பர் குட் சுப்ரமணி, சுமா ரங்கநாத்,பூஜாகாந்தி,முமைத்கான் உட்பட பலரும் நடித்துள்ளார்கள் கதை-திரைக்கதை-வசனம்-பாடல்-தயாரிப்பு-டைகர் வெங்கட்,இயக்கம் – கே.டி நாயக்-டைகர் வெங்கட்,தயாரிப்பு நிறுவனம் : வெங்கட் மூவிஸ், நடனம் – பாபா பாஸ்கர்,மக்கள் தொடர்பு – வெங்கட்

சுமா ரங்கநாத்தின் குழு மக்களை அல்லல்படுத்தி பணம் மற்றும் பொருட்களைப் பறித்து வர, அவர்களை பிடிக்க வருகிறார் டைகர் வெங்கட் என்னும் சிறப்பு அதிகாரி. அவரால் அந்த கும்பலை  பிடிக்கமுடிந்ததா? இதன் பின்புலம் என்ன?இதுவே படத்தின் கதை.

இந்த படத்தில் சோனியா அகர்வால், வனிதா விஜயகுமார், சுமா ரங்கநாத், பூஜாகாந்தி என பலரும் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் அதனுடைய தன்மைக்கு ஏற்ற வண்ணம் குறைகாணமுடியாத நடிப்பை நிறைவாக கொடுத்துள்ளார்கள் , குறிப்பாக டைகர் வெங்கட் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்திலும்.மற்றும் பிர்லா போஸ், சூப்பர் குட் சுப்பிரமணி போன்றவர்களும் நன்கு நடித்துள்ளார்கள்

நேர்த்தியான காட்சிகளின் பின்புலத்தில் ஒளிப்பதிவாளர்.இளங்கோவனும், இசை அமைப்பாளர் ஜித்தின் கே.ரோஷனும் இயக்குனருக்கு உறுதுணையாக இருந்துள்ளார்கள்..ஆக்ஷன் கதையினை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட திரைக்கதையில் காட்சிகள் மிகவும் விறுவிறுப்பாக உள்ள வகையில் இயக்குனர்கள் டைகர் வெங்கட், கே.டிநாயக் படத்தை நன்கு இயக்கியுள்ளார்கள்.

Spread the love