மில்லியன் ஸ்டுடியோ படத்தைத் தயாரிப்பில் குகன் சென்னியப்பன் இயக்கத்தில் வெளிவந்துள்ள வெப்பன் படத்தில் சத்யராஜ், வசந்த் ரவி, ராஜீவ் மேனன், தான்யா ஹோப், மற்றும் பலர் நடித்துள்ளனர்.
வசந்த் ரவி, யூடியூபர் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலராகஉள்ளார் . ப்ளாக் சொசைட்டி என்னும் ரகசியக் குழுமத்தை நடத்த வருபவர் ராஜீவ் மேனன்.சேனலுக்கான கண்டெண்டினை தேடி தேனிக்கு அக்னி(வசந்த் ரவி) செல்கிறார் இந்த சூழ்நிலையில் தங்களுடைய ப்ளாக் சொசைட்டியின் நபர்களுக்கு அச்சுறுத்தலாக ஒரு சூப்பர் ஹியூமன் தான் உள்ளார் என்பதைக் கண்டுபிடிக்க ராஜீவ் மேனன் நபர்களும் அங்கு வருகிறார்கள் . இவர்கள் அந்த சூப்பர் ஹியூமன் யார் என்று கண்டுபிடித்தார்களா?, காட்டுக்குள் வாழ்க்கை நடத்தி வரும் சத்தியராஜ் யார் ?இது போன்ற பல வினாக்களுகான விடையினை எமோஷன்ஸ், அதிரடி ஆக்ஷன் காட்சிகள் கொண்ட திரைக்கதையின் கலவையில் தரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது இந்த படம் .
சத்யராஜ் முதன்மை கதாபாத்திரத்தில் இந்த படத்தில் நடித்துள்ளார் ஏற்றுக்கொள்ளும் எந்தவொரு கதாபாத்திரத்துக்கும் தக்கதொரு நடிப்பினை சிறப்பாக வெளிப்படுத்தும் அவர், இந்த படத்திலும் சூப்பர் மேனாக நிறைவான நடிப்பை.வெளிபடித்தியுள்ளார். இளம் நடிகர் வசந்த் ரவி இந்த படத்தில் தன்னுடைய கதாபாத்திரத்துக்கு வலு சேர்க்கும் வண்ணம் நன்கு நடித்துள்ளார் .மேலும் குறிப்பிட்டு சொல்லக்கூடிய வகையில் ஒளிப்பதிவாளரும் நடிகருமான ராஜீவ் மேனன் தனது சிறப்பான நடிப்பை வெளிபடித்தியுள்ளார். மற்றும் தான்யா ஹோப், ராஜீவ் பிள்ளை, யாஷிகா ஆனந்த், மைம் கோபி, என சக கலைஞர்களும் படத்தின் பல கதாபாத்திரங்களில் தங்களுடைய நிறைவான நடிப்பை கொடுத்துள்ளார்கள்.
அறிவியல் புனைக்கதை ஆக்ஷன் திரில்லர் ஜானரில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ’வெப்பன்’ திரைப்படத்தை குகன் சென்னியப்பன் எழுதி இயக்கியுள்ளார் அவர் புதிய கதைக்களத்தில் விறுவிறுப்பான காட்சிகளுடன் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான நடிகர்களை தேர்வு செய்து நன்கு படத்தினை உருவாக்கியுள்ளார்.
ஆக்ஷன் திரில்லர் ஜானர் படங்களுக்கு இசையும் ஒளிப்பதிவும் மிகவும் முக்கியமானது, இந்த படத்துக்கு சிறப்பான இசையினை ஜிப்ரானும் ,நேர்த்தியான ஒளிப்பதிவை பிரபு ராகவும் தந்துள்ளார்கள். படத்தொகுப்பாளர் கோபி கிருஷ்ணா மற்றும் கலை இயக்குநர் சுபேந்தர் போன்றோரின் பணி பாராட்டக்கூடியது. .
தமிழ் சினிமாவுக்கு அரிதான சயின்ஸ் பிக்சன் படத்தினை கொடுத்துள்ள படக்குழுவின் முயற்சியினை பாராட்ட படத்தை தவறாமல் பார்க்கலாம்.