” தாவுத் ” திரைப்படத்தில் லிங்கா ,சாரா ஆச்சர்,திலீபன் ,ராதாரவி ,சாய் தீனா,அர்ஜெய் ,ஸாரா மற்றும் பலர் நடித்துள்ளார்கள் ஒளிப்பதிவு – சரத் வளையாபதி மற்றும் பிரேண்டன் சுஷாந்த். இசை – ராக்கேஷ் அம்பிகாபதி.

மும்பையில் இருக்கும் தாவூத் அங்கிருந்தபடியே தமிழ்நாட்டில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வர, அந்த தாவுத்தை கண்டுபிடிக்கும் முயற்சியோடு , அவரால் கடத்தப்பட இருக்கும் போதைப் பொருளையும் மீட்கும் முயற்சியில் காவல்துறை எடுக்கும் முயற்சிக்கு அஜய் தலைமை வகிக்கிறார். பல வருடங்களாக தாவித்துடன் வேலை பார்த்து வரக்கூடிய தீனாவும் மற்றவர்களும் அந்த போதை சரக்கினை கபளீகரம் செய்ய திட்டமிடுகிறார்கள் , இந்த சமயத்தில் தாவூத்தின் சரக்கை பத்திரமாக எடுத்துச் செல்ல , வாடகை கார் டிரைவரான லிங்கா தேர்வு செய்யப்படுகிறார். பணத்துக்காக இந்த வேலையில் இறங்கும் லிங்காவால் சரக்கை தாவூத்திடம் கொண்டு போய் சேர்க்க முடிந்ததா ?இல்லையா ?அந்த தாவூத் யார் என்னும் முடிச்சு அவிழ்க்கப்பட்டதா ? இவைகளை பற்றி எல்லாம் விறுவிறுப்பாக சொல்லக்கூடிய வகையில் தாவுத் படத்தின் மீதிக்கதை பயணிக்கிறது.

படத்தில் தம்பித்துரை என்னும் கதாபாத்திரத்தில் கதையின் நாயகனாக லிங்கா நடித்துள்ளார். தான் ஏற்றுக் கொண்ட கதாபாத்திரத்திற்கு முற்றிலும் பொருந்தும் வகையில் அவரது உடல் மொழி அதை அவர் வெளிப்படுத்தி இருக்கும் விதம் நன்றாக அமைந்திருந்தது .மற்றும் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ள அர்ஜெய், திலீபன், சாய் தீனா, அபிஷேக், ராதாரவி ,சாரா ஆச்சார், சேரன் ராஜ் என அனைவரும் அவரவர் கதாபாத்திரங்களில் நன்கு நடித்துள்ளார்கள்.
சரத் வளையாபதி மற்றும் பிரேண்டன் சுஷாந்த். என்னும் ஒளிப்பதிவாளர்களின் கைவண்ணத்தில் ஆக்சன் காட்சிகள் சிறப்பாக பதிவு செய்யப்பட்டுள்ளன. ராகேஷ் அம்பிகாபதி இசையில் பாடல்களும், பின்னணி இசையும் நன்கு அமைக்கப்பட்டுள்ளது .இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் அறிமுக இயக்குனர் பிரசாந்த் ராமன் .எடுத்துக்கொண்ட கதைக்கு தேவையான வகையில் ,விறுவிறுப்பான காட்சிகளை திரைக்கதையில் இணைத்து, கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான நடிகர்களையும் தேர்வு செய்து நடிக்க வைத்து ,நல்லதொரு ஆக்சன் திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார்.
