ஆனந்தராஜ், சம்யுக்தா, தீபா, சசிலயா, முனிஷ்காந்த் மற்றும் பலர் நடிக்க ஏ. எஸ். முகுந்தன் இயக்கியுள்ள திரைப்படம் மெட்ராஸ் மாஃபியா கம்பெனி
பூங்காவனம் (ஆனந்த்ராஜ் )என்னும் பெயருடைய பிரபலமான தாதா, நகரின் அனைத்து பகுதியிலும் ரௌடி ஏஜெண்ட்களை வைத்துக்கொண்டு தனக்கு வரும் குற்ற செயல்களை செய்து வருகிறார் இப்படி பல குற்ற செயல்களை ஆனந்தராஜ் செய்து வந்தாலும் அவர் மீது எந்தவிதமான குற்ற பதிவு இருப்பதே இல்லை. .ஆனால் அவரை எந்த வகையிலாவது கைது செய்து விட வேண்டும் என்ற முனைப்புடன் இருக்கும் காவல்துறை அதிகாரியாக சம்யுக்தா இருக்கிறார், இது மட்டுமின்றி தொழில் போட்டி காரணமாக அவர் எப்படியாவது தீர்த்து கட்டி விட வேண்டும் என்று சிலர் வியூகம் வகுக்கிறார்கள், ஒருபக்கம் ஆனந்த ராஜை கைது செய்துவிட வேண்டும் என்று முனைப்புடன் இருக்கும் சம்யுக்தாவால் அவரை கைது செய்ய முடிந்ததா ?மறுபக்கம் தன்னுடைய தொழில் போட்டியாளர்களிடமிருந்து தன்னை ஆனந்தராஜ் எப்படி காப்பாற்றிக் கொண்டார் ?இதன் பிறகு நடந்தது என்ன ?என்பதுதான் மெட்ராஸ் மாஃபியா படத்தினுடைய மீதி கதை.
தமிழ் திரையுலகில் வில்லனாக அறிமுகமாகி தன்னுடைய மிரட்டலான நடிப்பின் மூலம் பல படங்களில் வில்லனாக தனது திரைப்பயணத்தினை தொடர்ந்து அதன் பின்பு கதாநாயகனாகவும் சில படங்களில் நடித்து ,பின் காமெடி கலந்த வில்லன் கதாபாத்திரங்களில் பல படங்களில் சிறப்பாக வெளிப்படுத்தி வரும் நடிகர் ஆனந்தராஜ் இந்த திரைப்படத்தில் பூங்காவனம் என்னும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வில்லத்தனமும் நகைச்சுவையும் கலந்த கதாபாத்திரத்தில் தனக்கே உரிய பாணியில் சிறப்பான நடிப்பை அவர் இந்த படத்தில் கொடுத்திருக்கிறார்.

காவல்துறை அதிகாரியாக சம்யுக்தா நடித்துள்ளார் ,இவர் தான் ஏற்றுள்ள கதாபாத்திரத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் அவரது நடிப்பு,ஆக்சன் காட்சிகளில் சிறப்பாக அமைந்துள்ளது. ஆனந்தராஜின் மனைவிகளாக தீபா ஷங்கரும், சசிலயாவும் நடித்துள்ளார்கள். மேலும் கொண்டித்தோப்பு வரதன் கதாபாத்திரத்தில் முனீஸ்காந்த் ,ஆராத்யா என பிறரும் அவரவர் கதாபாத்திரங்களில் குறைவில்லாத நடிப்பை நிறைவாக கொடுத்துள்ளார்கள். ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கேற்றபடி பொருத்தமான பங்களிப்பை வழங்கி உள்ளது. ஒளிப்பதிவாளர் அசோக் ராஜா ,இயக்குனரின் கதையை ஓட்டத்திற்கு தக்கபடி இணக்கமாக காட்சிகளை நன்கு பதிவு செய்துள்ளார்.இயக்குனர் ஏ .எஸ் .முகுந்தன் இந்த படத்தை இயக்கியுள்ளார். ஆக்சன்,நகைச்சுவை, சென்டிமென்ட் என ஒரு ஜனரஞ்சகமான படத்திற்கு தேவையான அத்தனை அம்சங்களையும் ஒரு சேர கலந்து, படம் பார்க்க வரும் ரசிகர்களுக்கு ஒரு சிறப்பான பொழுதுபோக்கு அம்சத்தை கொடுக்கும் வகையில் இந்த படத்தை உருவாக்கி இருக்கிறார்.
மொத்தத்தில் மெட்ராஸ் மாஃபியா கம்பெனி ஜாலியான டைம்பாஸ் பொழுதுபோக்கு படம்.
