Friday, December 26

ஆன்மீகம்

நடிகர் ‘பருத்திவீரன்’ சரவணன் கட்டியுள்ள விநாயகர் கோயில் !

நடிகர் ‘பருத்திவீரன்’ சரவணன் கட்டியுள்ள விநாயகர் கோயில் !

ஆன்மீகம், சினிமா
ஒரு காலத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி சில படங்களில் நடித்தவர் சரவணன். மறுபிரவேச வாய்ப்பாக அமைந்த 'பருத்திவீரன்' படத்திற்குப் பிறகு அந்தப் பாத்திரத்தின் வெற்றியால் பெயரே 'பருத்திவீரன்' சரவணன் என்றானது. அதன் பிறகு ஏராளமான படங்களில் நடித்தார்; நடித்தும் வருகிறார். எதிர்மறை மற்றும் குணச்சித்திரப் பாத்திரங்களில் நடித்து வரும் அவர், தனக்கென ஒரு பாதை அமைத்துக் கொண்டு பயணித்து வருகிறார்.   அண்மையில் வெளியான 'சட்டமும் நீதியும்' இணையத் தொடர் சரவணன் வாழ்க்கையில் அமைந்த ஒரு மைல் கல் எனலாம். அந்த அளவுக்குத் தனது பண்பட்ட நடிப்பை அதில் வெளிப்படுத்தி இருந்தார். நடிகர் சரவணன் ஒரு விநாயகர் கோவிலை சேலம் மாவட்டத்தில் ஓமலூர் வட்டம், வட்டக்காடு என்கிற ஊரில் கட்டி இருக்கிறார் . தனது தோட்டத்தில் எழுந்து அருள்பாலிக்கும் விநாயகராக அதை வணங்கி வந்தவர், தற்போது அதற்காக ஓர் ஆலயம் கட்டி இருக்கிறார். ...
ஸ்ரீ பவன் கல்யாண் திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.

ஸ்ரீ பவன் கல்யாண் திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.

ஆன்மீகம்
தென்னிந்தியா முழுவதும் உள்ள சாஷ்ட சண்முக க்ஷேத்திர யாத்திரையின் ஒரு பகுதியாக, திருச்செந்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலில் துணை முதல்வர் ஸ்ரீ பவன் கல்யாண் வியாழக்கிழமை தரிசனம் செய்தார்.ஸ்ரீ பவன் கல்யாண் அவர்களுடன், அவரது மகன் ஸ்ரீ அகிரா நந்தன் மற்றும் TTD குழு உறுப்பினர் ஸ்ரீ ஆனந்த் சாய் ஆகியோரும் உடனிருந்தனர். கோயில் அறங்காவலர் குழு தலைவர் ஸ்ரீ ஆர்.ஆறுமுருகன் தக்கர், கோவில் இணை கமிஷனர் ஸ்ரீ ஞான ஷைலரன் மற்றும் கோயில் அர்ச்சகர்கள் பவன் கல்யாணுக்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளித்தனர். பின்னர், பாரம்பரிய முறைப்படி கோயிலுக்குள் நுழைந்தார். ஸ்கந்த புராணத்தின் படி, கடலுக்குள் மறைந்திருந்த சூரபத்மன் என்ற அரக்கனைக் கொல்ல சுப்பிரமணிய பகவான் இந்தக் கரைக்கு வந்தார்.அரக்கனைக் கொன்ற பின்பு, அவர் வெற்றி பெற்ற இந்த இடத்தில் எழுந்தருளியுள்ளார் என பண்டைய நூல்களில் குறிப்பிடப்பட...
இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் பாதயாத்திரை செல்லும் முருக பக்தர்களுக்குகானா பாடல்.

இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் பாதயாத்திரை செல்லும் முருக பக்தர்களுக்குகானா பாடல்.

ஆன்மீகம்
திரைப்பட இயக்குநர் மோகன் G அவர்களின் உருவாக்கத்தில், அல்ருபியான் இசையில், மோகன்ராஜ் B வரிகளில், MLR கார்த்திகேயன் அவர்களின் குரலில், #பாதயாத்திரை என்ற தலைப்பில் தயாராகியுள்ள "அரோகரா முருகா" என்ற பாடலை சிவ குரு, திருவாசக சித்தர் ஐயா சிவ தாமோதரன் அவர்கள் வெளியிட்டார். தைப்பூசத்தை முன்னிட்டு பழனி முருகரை வணங்க பாதயாத்திரை செல்லும் முருக பக்தர்களுக்கு சமர்ப்பணமாக இந்த பாடல் உருவாகியுள்ளது.. ஏற்கனவே சிவனுக்கு, சிவ சிவாயம் என்ற பாடலும், தற்போது முருகனிடம் பாதயாத்திரை என்ற பாடலும் மேலும் பல பக்தி பாடல்கள் தொடர்ந்து எனது உருவாக்கத்தில் வெளியாகும் என மோகன் ஜி தெரிவித்துள்ளார். ▶️https://youtu.be/TteND-677rU...
 இசையமைப்பாளர் வித்யாசகர், முதல் முறையாக இசையமைத்த, ஆன்மிக ஆல்பம், “அஷ்ட ஐயப்ப அவதாரம்”

 இசையமைப்பாளர் வித்யாசகர், முதல் முறையாக இசையமைத்த, ஆன்மிக ஆல்பம், “அஷ்ட ஐயப்ப அவதாரம்”

ஆன்மீகம், சினிமா
ஶ்ரீ ஐயப்பன் அறம் சேவா லிமிடட் முரளிகிருஷ்ணன் சிங்கப்பூர் தயாரிப்பில், சரிகமா நிறுவனம் வழங்கும், இசையமைப்பாளர் வித்யா சாகர் இசையில், “அஷ்ட ஐயப்ப அவதாரம்” ஆன்மிக ஆல்பம் !! தென்னிந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான வித்யாசகர், முதன்முறையாக ஆன்மிக பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். ஐயப்ப சாமியின் புகழ் பாடும் வகையில் உருவாகியுள்ள, “அஷ்ட ஐயப்ப அவதாரம்” ஆல்பத்தை, இந்தியாவின் முன்னணி இசை நிறுவனமான சரிகமா நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஶ்ரீ ஐயப்பன் அறம் சேவா லிமிடட் சார்பில், முரளிகிருஷ்ணன் சிங்கப்பூர் இந்த ஆல்பத்தை தயாரித்துள்ளார். தென்னிந்திய சினிமாவில் 225 க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து புகழ்பெற்றவர், இசையமைப்பாளர் வித்யாசாகர். முன்னணி நட்சத்திரங்களின் வெற்றிப்பாடல்கள் முதல், காலத்தால் அழியாத பல அற்புதமான மெலடி பாடல்களைத் தந்து, மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த வித்யாசாகர், முதன் மு...
சுஷோபனம் அகாடமி ஆஃப் கிளாசிக்கல் ஆர்ட்ஸ் (SACA) மூலமாக பூலோக வைகுண்டம்- அரங்கனின் ஸ்ரீரங்கம்  நாட்டிய நாடகம்  சென்னையில் நடைபெற்றது.

சுஷோபனம் அகாடமி ஆஃப் கிளாசிக்கல் ஆர்ட்ஸ் (SACA) மூலமாக பூலோக வைகுண்டம்- அரங்கனின் ஸ்ரீரங்கம் நாட்டிய நாடகம் சென்னையில் நடைபெற்றது.

ஆன்மீகம்
ஸ்ரீரங்கத்தின் ஸ்தல புராண நாட்டிய நாடக நிகழ்வு சென்னை தி நகர் கிருஷ்ணகான சபாவில் சுஷோபனம் அகாடமி ஆஃப் கிளாசிக்கல் ஆர்ட்ஸ் (SACA) மூலமாக பூலோக வைகுண்டம்- அரங்கனின் ஸ்ரீரங்கம் என்ற தலைப்பில் ஸ்ரீரங்க ஸ்தல புராணத்தை கருப்பொருளாகக் கொண்டு நாட்டிய நாடகம் நடைபெற்றது. திரைப்பட நடிகை, நடனக் கலைஞர் டாக்டர் சோபனாவின் மாணவியான சீதாலட்சுமி விஜய் அவர்கள் தனது மாணவிகளுடன் இந்த நாட்டிய நாடகத்தை உருவாக்கி மேடை ஏற்றினார். திரைப்பட நடிகர் ஒய்.ஜி.மகேந்திரா தலைமை ஏற்க, நடனக் கலைஞர் உமா சத்தியநாராயணா சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இந்த நிகழ்வு ஆகஸ்ட் 31 (நேற்று) தி.நகர் கிருஷ்ணகான சபாவில் 10வது முறையாக அரங்கேறியது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அரங்கம் நிறைந்த மக்களுடன் விழா நடைபெற்றது. நமது அடையாளத்தை நமது கலாச்சாரத்தை, அனைவரையும் ஈர்க்கும் விதமாக, அற்புதமான நாடகமாக, அனைத்து மக்களுக்கும் பிடிக...
விஜய்  கட்டியிருக்கின்ற  கோவிலுக்கு சென்று  ராகவா லாரன்ஸ்  சாய் பாபாவை  தரிசனம் செய்தார்

விஜய் கட்டியிருக்கின்ற கோவிலுக்கு சென்று ராகவா லாரன்ஸ் சாய் பாபாவை தரிசனம் செய்தார்

ஆன்மீகம்
அனைவருக்கும் வணக்கம்... நண்பன் விஜய் கொரடூரில் புதியதாக கட்டியிருக்கின்ற சாய் பாபா கோவிலுக்கு அவரது தாயாருடன் இன்று சென்றேன். நான் ராகவேந்திரர் கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்யும்பொழுது அவர் கோவிலுக்கு வந்ததோடு மட்டுமல்லாமல் பாடலையும் பாடி வாழ்த்தினார். இன்று நான் இந்த கோவிலுக்கு வந்திருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நண்பன் விஜய்கு எனது மனபூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். கோவிலுக்குள் சென்றவுடன் தூய தெய்வீகமான அதிர்வுகள் ஏற்பட்டதை உணர்ந்தேன். அனைவரும் இந்த கோவிலுக்கு சென்று சாய்பாபாவை தரிசிக்கிமாறு கேட்டுக்கொள்கிறேன். அன்புடன் ராகவா லாரன்ஸ்....
தமிழின் முதல் சினிமாடிக் ஐயப்பன் பாடல் “ஆருயிர் ஐயப்பா” ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

தமிழின் முதல் சினிமாடிக் ஐயப்பன் பாடல் “ஆருயிர் ஐயப்பா” ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

ஆன்மீகம், சினிமா
தமிழில் எத்தனையோ ஐயப்பன் பற்றிய பக்திப் பாடல்கள் வந்துள்ளன.‌ ஆனால் முதல் முறையாக மிகப் பிரமாண்டமான முறையில் காட்சிப்படுத்தப்பட்டு முதல் சினிமாடிக் ஐயப்பன் பாடலாக உருவாக்கப்பட்டுள்ளது ஆருயிர் ஐயப்பா ஆல்பம் பாடல். இந்த பாடலை ஸ்ரீ விஷ்ணு தயாரித்து இயக்கியுள்ளதோடு நடித்தும் இருக்கிறார். மேலும் இவருடன் இணைந்து வசந்த் பாடலை எழுதியுள்ளார். போடா போடி, பாரிஜாதம் உள்ளிட்ட படங்களுக்கு இசை அமைத்துள்ள இசை அமைப்பாளர் தரண் இந்த பாடலுக்கு இசை அமைத்துள்ளார். விஜய் டிவி சூப்பர் சிங்கர் புகழ் சாம் விஷால் மற்றும் முத்துச்சிற்பி இருவரும் பாடியுள்ளதோடு நடித்தும் உள்ளனர். பிரம்மாண்டமாக செட் அமைக்கப்பட்டு ஏராளமான குழந்தைகள் மற்றும் நடனக் கலைஞர்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த பாடலுக்கு நடன இயக்குனர் அசோக்ராஜா நடனம் அமைத்துள்ளார். ஐயப்பனின் புகழ் பாடும் இந்த ஆருயிர் ஐயப்பா ஆல்பம் பாடலின் ஃபர்ஸ்ட் ல...
நடிகர் ஸ்ரீராம் கலந்துகொண்ட ஸ்ரீராமநவமி விழா.

நடிகர் ஸ்ரீராம் கலந்துகொண்ட ஸ்ரீராமநவமி விழா.

ஆன்மீகம், சினிமா
ஸ்ரீ ராம நவமி விழாவை முன்னிட்டு சென்னை புறநகர் பகுதியான ஆவடியில் அமைந்திருக்கும் அருள்மிகு துவாரகமாயி லட்சுமி சாய்பாபா ஆலயத்தில், பாபாவின் பிறந்த நாளை கொண்டாடும் வகையில் 1008 சுமங்கலி பெண்களுக்கு வஸ்திரம் வழங்கும் வைபவம் நடைபெற்றது. இந்த சுப விழாவில் 'பசங்க', 'கோலிசோடா' படப் புகழ் நடிகர் ஸ்ரீராம் மற்றும் நடிகர் பாண்டி ரவி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சுமங்கலி பெண்களுக்கு வஸ்திரம் வழங்கி கௌரவித்தனர். இவ்விழாவில் நடிகர் ஸ்ரீராம் பேசுகையில், '' எங்களுடைய வீட்டில் ஒன்றரை அடி உயர சாய்பாபா சிலை ஒன்று உள்ளது. என்னுடைய பெற்றோர்கள் அதற்கு ஆரத்தி காட்டும் பொழுது, காண்பதற்கு வித்தியாசமாக இருக்கும். நான் அதை ஆவலுடன் பார்த்துக்கொண்டே இருப்பேன். தற்போது வளர்ந்து நடிகனான பிறகும் இன்றும் எங்களுடைய வீட்டில் சாய்பாபா சிலைக்கு பூஜையும், பிரார்த்தனையும் நடைபெறுகிறது. வாழ்க்கையில் பல அற்பு...
குறைகளற்ற வாழ்வு தரும் குறுங்காலீஸ்வரர் கோவில்

குறைகளற்ற வாழ்வு தரும் குறுங்காலீஸ்வரர் கோவில்

ஆன்மீகம்
குறைகளற்ற வாழ்வு தரும் குறுங்காலீஸ்வரர் கோவில்,கோயம்பேடு- சென்னை சுமார் 1,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான திருத்தலமான குறுங்காலீஸ்வரர் கோவில் சென்னை கோயம்பேட்டில் அமைந்துள்ளது இந்த திருக்கோவிலின் வரலாற்றுக்கதைகள் முன்னோரு காலத்தில் சோழ மன்னன் ஒருவன், இந்த பகுதியை தேரில் பவனி சென்றவாறு கடந்து போனபோது அந்த தேரின் சக்கரம் லிங்கத்தின் மீது ஏறி, குருதி வெளிப்பட்டதை கண்டு அதிர்ச்சியுற்ற மன்னன் அங்கு பூமிக்கடியில் லிங்கம் இருந்ததைக் கண்டு,அதனை வணங்கி அங்கு கோவிலும் எழுப்பினான். மன்னரின் தேர்ச்சக்கரம் ஏறியதால் அந்த லிங்கத்தின் திருமேனி குறைந்து குறுகிய வடிவில் காணப்பட்டது ஆகவே இங்கு சிவன் குறுகியவடிவில் காட்சி தருவதால் அவருக்கு “குறுங்காலீஸ்வரர்’ என்ற திருப்பெயர் உண்டானது. “ இராமாயணகாலத்தில் வால்மீகி முனிவரின் ஆசிரமத்தில் லவன் - குசன் என்ற தன் குழந்தைகளுடன் சீதை இந்த பகுத...
நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை

நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை

ஆன்மீகம்
சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமாகிய திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோயில் தலம் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும்.உலகப்புகழ்பெற்ற இத்தலத்தின் மூலவர் அருணாசலேசுவரர் என்றும், அம்பிகை உண்ணாமுலையாள் என்றும் அழைக்கப்படுகிறார்கள் . நினைத்தாலே முக்தி தரும் இந்த தலம் பற்றிய புராணம் யாதெனில் ,நான்முகனுக்கும் திருமாலுக்கும் தங்களுக்குள் யார் பெரியவர் என வாக்குவாதம் ஏற்பட , இடையில் நெருப்புப் பிழம்பு தோன்ற நம்மில் யார் இதன் அடியையும் முடியையும் கண்டறிகிறாரோ அவரே நம்மில் பெரியவர் என உரைத்தனர். அதன் அடியைக் காண, திருமால் வராக வடிவெடுத்து நிலத்தினைக் குடைந்து சென்று பல காலம் பயணம் செய்தும் அடியைக் காண இயலாமல் திரும்ப, அன்னம் வடிவமெடுத்து முடியைக் காணச்சென்ற நான்முகன் , வானிலிருந்து கீழே வரும் தாழம்பூவிடம் நீ எங்கிருந்து வருகிறாய் என கேட்க அதற்கு அது நான் சிவனாரின் தலையிலிருந்து...