*காமன்வெல்த் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற வீரர் ராஜா முத்துப்பாண்டியை நேரில் அழைத்து வாழ்த்திய நடிகை சிம்ரன்*
*காமன்வெல்த் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற வீரர் ராஜா முத்துப்பாண்டியை நேரில் அழைத்து வாழ்த்திய நடிகை சிம்ரன்*
காமன்வெல்த் போட்டியில் ஆண்கள் 65 கிலோ எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவுக்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்த தமிழகத்தைச் சேர்ந்த பளுதூக்கும் வீரர் ராஜா முத்துப்பாண்டியை நடிகை சிம்ரன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
இந்தச் சந்திப்பின்போது, ராஜா முத்துப்பாண்டி தனது காமன்வெல்த் வெள்ளிப் பதக்கத்தை சிம்ரனிடம் பெருமையுடன் காண்பித்தார். அவரது கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சியைப் பாராட்டிய சிம்ரன், இந்தச் சாதனை ஒரு தொடக்கம் மட்டுமே என்றும், எதிர்காலத்தில் மேலும் பல உயரங்களை அடைய வேண்டும் என்றும் வாழ்த்தினார்.
மேலும், “இந்த வெற்றியின் மூலம் நீங்கள் ஏற்கனவே இந்தியாவுக்கும் நமது தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளீர்கள். குறிப்பாக, நமது தமிழ...









