Tuesday, September 1

இலக்கியம்

தமிழ் மீது கொண்ட பற்று காரணமாக திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ள வங்காளத்தை பூர்வீகமாக கொண்ட சென்னையில் வசிக்கும் வருமான வரித்துறை அதிகாரி

தமிழ் மீது கொண்ட பற்று காரணமாக திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ள வங்காளத்தை பூர்வீகமாக கொண்ட சென்னையில் வசிக்கும் வருமான வரித்துறை அதிகாரி

இலக்கியம், செய்திகள்
தமிழ் மொழியின் மேல் கொண்ட தீராத பற்றினால் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார் வங்காளத்தை பூர்வீகமாக கொண்ட எஸ் பி சக்ரபோர்த்தி என்கிற சோமன்.சக்ரபோர்த்தியின் பெற்றோர் மேற்கு வங்காளத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு குடியேறினர். சென்னையில் பிறந்து, அயன்புரத்தில் வளர்ந்த இவர், வருமான வரித்துறையில் இணை ஆணையராக பணியாற்றி வருகிறார். திருக்குறள் மொழிபெயர்ப்பில் தனக்கு ஏற்பட்ட ஆர்வத்தை குறித்து பேசிய சக்ரபோர்த்தி, "சிறு வயது முதலே தமிழ் மொழி மீது எனக்கு தீவிர பற்று ஏற்பட்டது. பள்ளி பருவத்தில் திருக்குறளில் உள்ள மனப்பாடச் செய்யுள் எனது ஆர்வத்தை மேலும் தூண்டியது. பின்னர் திருக்குறளின் மொழிப் பெயர்ப்புகளைப் படிக்கும்போது, திருக்குறளை மிகவும் எளிமையாக ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. சிலர் இன்னுமொரு மொழிபெயர்ப்பு எதற்கு என்றும் ஐயம் எழுப்பினர். ஆனால், தமிழ் மொழிப் பற்...
பாரதி நீ மட்டும் எப்படி மகாகவி? -பிருந்தா சாரதி

பாரதி நீ மட்டும் எப்படி மகாகவி? -பிருந்தா சாரதி

இலக்கியம்
பாரதி நீ மட்டும் எப்படி மகாகவி? * பிருந்தா சாரதி * இறந்து நூறு ஆண்டுகள் ஆன பிறகும் மறக்க முடியாத மகாகவி நீ. ஏனெனில் அன்று மரித்தது வெறும் தேகம்தான் இன்றும் சுடர்கிறது எழுத்தில் நீ வளர்த்த யாகம்தான். இன்றைய தமிழின் முகம் நீ நவீனத் தமிழின் அகம் நீ. எத்தனை ஆண்டுகள் ஆனபோதும் யாரும் மறுக்க முடியாத மகாகவி நீ. பாட்டரசனே உன் மீசையின் ரசிகன் நான் அது தமிழுக்கு முளைத்த மீசை தமிழன்னையே முறுக்கிவிட்ட மீசை. மகன் மீசை முறுக்குவதைப் பார்த்து தாயே மகிழ்ந்தாள் அப்போது. முண்டாசுக் கவிஞனே உன் தலப்பாக்கட்டு தமிழுக்கு நீ சூட்டிய மகுடம் அல்லவா? நீ அணிந்த கோட்டு உன்னைத் தாக்கிய வறுமைக்கு நீ வைத்த வேட்டல்லவா? நீ கையில் ஏந்திய தடி உன் பேனாவின் பிறிதொரு வடிவம் அல்லவா? அன்னைத் தமிழுக்கு ஆயிரமாயிரம் ஆண்டு வரலாறு அதில் ஆயிரம் ஆயிரம் புலவர்கள் அவர்களில் நீ மட்டும்...
 கபிலன் வைரமுத்து எழுதிய “ஆகோள்” இயக்குநர் பாரதிராஜா வெளியிட்டார்

 கபிலன் வைரமுத்து எழுதிய “ஆகோள்” இயக்குநர் பாரதிராஜா வெளியிட்டார்

இலக்கியம், சினிமா
ஆங்கிலேயரின் குற்ற இனச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்ட புனைவு எழுத்தாளரும் பாடலாசிரியருமான கபிலன்வைரமுத்துவின் புதிய நாவலை இயக்குநர் பாரதிராஜா சென்னையில் வெளியிட்டார். ஆகோள் என்று பெயரிடப்பட்ட நாவல் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் குற்ற இனச் சட்டம் குறித்து ஒரு நவீன அணுகுமுறையை முன் வைக்கிறது. இந்த நாவல் நிகழ்கால தொழில்நுட்ப உலகின் பெருந்தரவு கொள்ளையை மையமாக வைத்து எழுதப்பட்டிருக்கிறது. 1920 ஆம் ஆண்டு கை ரேகை சட்டத்திற்கு எதிராக பெருங்காமநல்லூரில் நிகழ்ந்த போராட்டம் நாவலின் ஒரு முக்கிய பகுதியாக இடம் பெற்றிருக்கிறது. இயக்குநர் பாரதிராஜா நூலை அறிமுகம் செய்யும் சிறப்பு காணொளி ஒன்று வெளியிடப்பட்டிருக்கிறது. ஆகோள் குறித்து கபிலன்வைரமுத்து கூறுகையில்: சங்க காலத்தில் சிற்றரசுகளுக்கு இடையே நிகழ்ந்த போர்களில் எதிராளிகளின் ஆடு மாடுகளை களவாடி வரும் செயலுக்கு ஆகோள் என்று பெயர். இது களவுச் செயலாகவு...
பிரபல தமிழ் நடிகை விஜே ரம்யா சுப்ரமணியத்தின் Stop Weighting என்ற முதல் புத்தகத்தை பென்குயின் வெளியிடுகிறது

பிரபல தமிழ் நடிகை விஜே ரம்யா சுப்ரமணியத்தின் Stop Weighting என்ற முதல் புத்தகத்தை பென்குயின் வெளியிடுகிறது

இலக்கியம்
தொகுப்பாளரும், நடிகையுமான ரம்யா சுப்ரமணியத்தின் முதல் புத்தகமான Stop Weighting: A Guidebook for a Fitter, Healthier You என்ற புத்தகத்தை பென்குயின் ரேண்டம் ஹவுஸ் இந்தியா பப்ளிஷ் செய்கிறது என்பதை இங்கு பெருமையுடன் பகிர்ந்து கொள்கிறது. இந்தப் புத்தகம் உங்கள் வாழ்க்கை இன்றும் வரும் காலத்திலும் ஆரோக்கியமான வாழ்க்கையை நீங்கள் வழிநடத்த உதவும். இன்று புகழ்பெற்ற இன்ஃபுளூயன்சராக வலம் வரக்கூடிய ரம்யா ஒருகாலத்தில் உடல் பருமன் காரணமாக உடல் கேலிக்கு ஆளாக்கப்பட்டார். இதனால், எல்லாரையும் போலவே உடல் இளைக்க வேண்டும் என்று எண்ணி தன் பயணத்தை ஆரம்பித்தார். பலவிதமான டயட், ஜிம்மில் தீவிரமான வொர்க்கவுட்ஸ் மற்றும் தாழ்வு மனப்பான்மை போன்றவை ரம்யாவை ஒரு தசாப்தமாக பாதித்து இருந்தது. இதற்கிடையில், ரம்யா தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும் புகழ் வெளிச்சத்திற்கு வந்தார். ஆனால், இந்த புகழ் வெளிச்சமும் அவரை மீண்டும் இ...
எழுத்தாளரும், பாடலாசிரியருமான கபிலன்வைரமுத்து  தன் புதிய நாவலை வித்தியாசமாக அறிமுகப்படுத்தியுள்ளார்

எழுத்தாளரும், பாடலாசிரியருமான கபிலன்வைரமுத்து தன் புதிய நாவலை வித்தியாசமாக அறிமுகப்படுத்தியுள்ளார்

இலக்கியம்
எழுத்தாளரும் பாடலாசிரியருமான கபிலன்வைரமுத்து தான் எழுதியிருக்கும் புதிய நாவலை அறிமுகப்படுத்தும் விதமாக புத்தகத்தின் பின் அட்டைப் படத்தை தன் முக நூலில் பகிர்ந்திருக்கிறார். இது குறித்து அவர் செய்திருக்கும் பதிவு இது: நிழலுடைமை நிலம் யாருடையதோ அதிகாரம் அவர்களுடையது என்பது வரலாறு. அது நிலவெளி எதார்த்தம். நிழல்வெளியாக இருக்கும் இணையவெளி நவீன நிலவுடைமைச் சமூகமாக தன்னைக் கட்டமைத்துவருகிறது. Digital Feudalism என்று ஆங்கில அறிஞர்கள் அழைக்கும் நிழலுடைமை ஆதிக்கத்திற்குநம் தரவுகளின் பரிமாற்றமே எரிபொருளாக இருக்கிறது. வெளிவரவிருக்கும் என் நாவல்நிழலுடைமைத்துவம் குறித்த ஒரு மாய வேடிக்கை. ஒரு புத்தகத்தை அதன் தலைப்பில் இருந்தும் அட்டைப் படத்தில் இருந்தும் அறிமுகம் செய்வதுவழக்கம். என் புத்தகத்தின் பின் அட்டையாக அமைந்திருக்கும் இந்த ஓவியத்தில் இருந்து என்அறிமுகத்தைத் தொடங்குகிறேன். நண்பர் ஹாசிப்...
கவிஞர் வைரமுத்துவின் கள்ளிக்காட்ட இதிகாசம் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல் துபாய் சர்வதேச மாநாட்டில் வெளியிடப்படுகிறது

கவிஞர் வைரமுத்துவின் கள்ளிக்காட்ட இதிகாசம் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல் துபாய் சர்வதேச மாநாட்டில் வெளியிடப்படுகிறது

இலக்கியம்
கவிஞர் வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம் சாகித்ய அகாடமி விருது பெற்ற நாவலாகும். 23 மொழிகளில் சாகித்ய அகாடமி அதை மொழிபெயர்த்து வருகிறது. இந்தி - உருது -மலையாளம் - கன்னடம் ஆகிய மொழிகளைத் தொடர்ந்து இப்போது ஆங்கில மொழிபெயர்ப்பு வெளிவந்திருக்கிறது; கீதா சுப்ரமணியம் மொழிபெயர்த்திருக்கிறார். துபாயில் நவம்பர் 9, புதன்கிழமை அட்லாண்டிஸ் ஹோட்டலில் நடைபெறும் ‘ரைஸ்’ மாநாட்டில் ‘தி சாகா ஆஃப் தி காக்டஸ் லேண்ட்’ என்ற கள்ளிக்காட்டு இதிகாசத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல் வெளியிடப்படுகிறது. உலகத் தொழில் முனைவோர் பங்குபெறும் இந்த மாநாட்டில், கவிஞர் வைரமுத்து நூலை வெளியிட 32நாடுகளின் பிரதிநிதிகள் பெற்றுக்கொள்கிறார்கள். மாநாட்டின் தலைவர் தொழிலதிபர் சிவகுமார், ரைஸ் அமைப்பின் நிறுவனத் தலைவர் அருட்தந்தை ஜெகத் கஸ்பர், துணைத் தலைவர்கள் ஆல்பிரட் பெர்க்மென்ஸ், ஜோஸ் மைக்கேல் ராபின், சாகுல் ஹமீது, பஷீர் கான...
திரைப்பட இயக்குனர் எழுத்தாளர் ராசி அழகப்பன் அவர்களின் “சந்திப்பில் கிடைத்த சிகரங்கள்” நூல் வெளியீட்டு விழா

திரைப்பட இயக்குனர் எழுத்தாளர் ராசி அழகப்பன் அவர்களின் “சந்திப்பில் கிடைத்த சிகரங்கள்” நூல் வெளியீட்டு விழா

இலக்கியம்
கவிப்பேரரசு வைரமுத்து அவர்களை நிறுவனர் மற்றும் தலைவராகக் கொண்டு செயல்பட்டு வரும் வெற்றித் தமிழர் பேரவையின் புதுச்சேரிப் பிரிவின் சார்பாக (04-11-2022) அன்று வெள்ளிக் கிழமை மாலை புதுவைத் தமிழ் சங்க அரங்கத்தில் திரைப்பட இயக்குனர் எழுத்தாளர் ராசி அழகப்பன் அவர்களின் “சந்திப்பில் கிடைத்த சிகரங்கள்” நூல் வெளியீட்டு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. புதுச்சேரி, வெற்றித் தமிழர் பேரவையின் அமைப்பாளர் தீந்தமிழ்த் தென்றல் தி.கோவிந்தராசு அவர்களின் வரவேற்புரையோடு நிகழ்ச்சி தொடங்கியது. புதுச்சேரி அரசின் மேனாள் சட்டப்பேரவைத் தலைவர் தகைமிகு வே..பொ. சிவக்கொழுந்து அவர்கள் இந்நிகழ்ச்சிக்குத் தலைமை ஏற்று தலைமையுரை ஆற்றினார். எழுத்தாளர் ராசி அழகப்பனின் சந்திப்பில் கிடைத்த சிகரங்கள் நூலினைப் புதுச்சேரி அரசின் மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர் தகைமிகு க.லட்சுமி நாராயணன் அவர்கள் வெளியிட்டுச் சிறப்புரை வழங்கி...
அகிலனின் நூற்றாண்டு விழாவை நூறு இடங்களிலாவது கொண்டாட வேண்டும் * பிருந்தா சாரதி

அகிலனின் நூற்றாண்டு விழாவை நூறு இடங்களிலாவது கொண்டாட வேண்டும் * பிருந்தா சாரதி

இலக்கியம்
நவம்பர் 5, சென்னை சாகித்திய அகாடமியும் சென்னை லயோலா கல்லூரி தமிழ்த் துறையும் இணைந்து எழுத்தாளர் அகிலனின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நவம்பர் 4, 5 மழைக்கு ஊடாகவும் தேதிகளில் சிறப்பாக நடத்தின. அகிலனின் நாவல்கள், சிறுகதைகள் , கட்டுரைகள் மற்றும் அவரது பன்முகப் படைப்புகள் குறித்துப் பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்கு நிகழ்த்தப்பட்டது. 'திரையில் அகிலனின் நாவல்கள்' அமர்வில் கலந்து கொண்டு கட்டுரை வாசிக்கும் முன்பு சிறிய உரை ஒன்றை நிகழ்த்தினேன். அது வருமாறு: "ஓர் எழுத்தாளன் என்பவன் வாசக மனங்களில் கனவுகளை விதைக்கிறவன். அதுவும் பெருந்திரளான மக்களால் வாசிக்கப்படும் ஓர் எழுத்தாளனால் பகிர்ந்துகொள்ளப்படும் கருத்துக்கள் சமூக மனதில் ஆழமாக விதைக்கப்பட்டு பெரும் விளைச்சலை வழங்குகின்றன . இங்கே நேற்று பேசிய எழுத்தாளர் திலகவதி அவர்கள் தான் மாணவப் பருவத்தில் படித்த அகிலனுடைய பெண் கதாபாத்திரங்கள் ...
இயக்குனர் சீனு ராமசாமிக்கு இன்ப அதிர்ச்சி தந்த முதல்வர் ஸ்டாலின் கடிதம்

இயக்குனர் சீனு ராமசாமிக்கு இன்ப அதிர்ச்சி தந்த முதல்வர் ஸ்டாலின் கடிதம்

இலக்கியம், சினிமா
இயக்குனர் சீனு ராமசாமிக்கு இன்ப அதிர்ச்சி தந்த முதல்வர் ஸ்டாலின் கடிதம் அனைவருக்கும் அன்பான வணக்கம் எழுதுவது சீனு ராமசாமி எனக்கு ஆச்சர்ய பரிசு தர இது நாள்வரை நான் எழுதிய கவிதைகள் அத்துணையும் சேகரித்து எனக்குத் தெரியாமல் நூலாக்கி 'சொல்வதற்கு சொற்கள் தேவையில்லை' என அந்நூலுக்கு என் கவிதையையே தலைப்பிட்டு பிறந்தநாள் பரிசாக மனைவி தர்ஷணாவும் மகள்களும் தந்தனர். இந்நூலுக்கு வாழ்த்துமடல் மாண்புமிகு நம் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஒரு கணவனுக்கு ஆச்சர்யமூட்டும் பரிசு தருவதற்காக ஒரு மனைவி தொகுத்த கவிதை தொகுப்பிற்கு ஊக்கமளித்து பாராட்டி ஒரு கடிதம் தந்து வாழ்த்திய உங்கள் உயர்ந்த உள்ளம் பற்றி நினைப்பதா? அல்லது என் போன்ற கலைஞர்களுக்கு நீங்கள் தரும் இதயப்பூர்வமான அன்பை எண்ணி நெகிழ்வதா எனத் தெரியவில்லை அய்யா? என்னால் இதை முதலில் நம்ப முடியவில்லை. முதல்வரின் கனிந்த ...
டிஸ்கவரி புக் பேலஸில் ஜெயகாந்தன் குடில் திறப்பு விழா

டிஸ்கவரி புக் பேலஸில் ஜெயகாந்தன் குடில் திறப்பு விழா

இலக்கியம், செய்திகள்
சென்னை கே.கே.நகர் முனுசாமி சாலையில் அமைந்துள்ள டிஸ்கவரி புக் பேலஸின் ஒரு அங்கமாக ஜெயகாந்தன் குடிலை பிரபல ஒளிப்பதிவாளர் பி சி ஶ்ரீராம், பிரபல எடிட்டர் லெனின், இந்தோ ரஷ்ய வர்த்தக சபையின் பி. தங்கப்பன், கவிஞர் இந்திரன் மற்றும் மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் ஆகியோர் கலந்து கொண்டு நேற்று திறந்து வைத்தனர். மிக சிறப்பாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பலதரப்பட்ட எழுத்தாளர்கள், இயக்குநர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்....