உத்சவ் 2026 விழாவில் ‘தேவி ரத்னா’ விருதால் கௌரவிக்கப்பட்ட ரவி மோகன்; ரசிகர்களைக் கவர்ந்த கெனீஷாவின் அதிரடி இசை நிகழ்ச்சி :
பாலக்காடு நகரம், பக்தி, கலாச்சாரம், சினிமா மற்றும் இசை ஆகிய அனைத்தும் இணைந்த ஒரு பிரம்மாண்ட கொண்டாட்டத்தை கண்டது. புகழ்பெற்ற பல்லாஸனா பழையகாவு ஸ்ரீ மீன்குளத்தி பகவதி அம்மன் கோவிலில் நடைபெற்ற “உத்சவ் 2026” விழாவின் முக்கிய அம்சமாக, நடிகர் ரவி மோகன் அவர்களுக்கு பெருமைக்குரிய நான்காவது தேவி ரத்னா விருது வழங்கப்பட்டது. இதனுடன், பாடகி கெனீஷா வழங்கிய நேரடி இசை நிகழ்ச்சியும் விழாவை மேலும் சிறப்பித்தது.
பல்லாஸனா பழையகாவு ஸ்ரீ பகவதி அம்மன் தேவஸ்தானம் நிறுவியுள்ள இந்தத் தேவி ரத்னா விருது, கலை, கலாச்சாரம் மற்றும் சமூக வாழ்க்கையில் சிறப்பான பங்களிப்பு செய்தவர்களுக்கு வழங்கப்படும் உயரிய கௌரவமாகும். இந்த ஆண்டு, பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் அவர் வெளிப்படுத்திய சிறப்பான நடிப்பு, தமிழ் சினிமாவிற்கான அவரது முக்கிய பங்களிப்பு மற்றும் ரசிகர்களிடையே பெற்றிருக்கும் பேராதரவை முன்னிட்டு ரவி மோகன் தேர்வு செய...









