Saturday, October 17

சினிமா

நடிகர் விஜய் தேவரகொண்டா, இயக்குநர் பூரி ஜெகன்நாத் இணைந்து வழங்கும், பிரம்மாண்ட ஆக்சன் டிராமா ‘JGM’!

நடிகர் விஜய் தேவரகொண்டா, இயக்குநர் பூரி ஜெகன்நாத் இணைந்து வழங்கும், பிரம்மாண்ட ஆக்சன் டிராமா ‘JGM’!

சினிமா
நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் சரித்திரம் படைக்கும் இயக்குனர் பூரி ஜெகன்நாத் ஆகியோர் இணைந்து, உலகெங்கிலும் உள்ள ரசிகர்களின் காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைத்து, மும்பையில் நடந்த ஒரு உற்சாகமான நிகழ்வில், தங்கள் அடுத்த திரைப்படமான “JGM”  படத்தை இன்று அறிவித்தனர். இந்த பிரம்மாண்டமான ஆக்‌ஷன் டிராமா, பன் மொழி இந்திய பொழுதுபோக்கு திரைப்படம், நடிகர்  விஜய் தேவரகொண்டாவை இதுவரை கண்டிராத  பாத்திரத்தில் காண்பிக்கும், இது அவரது திரைப்பயணத்தில் அடுத்த திருப்புமுனையாக இருக்கும்! JGM திரைப்படத்தை சார்மி கவுர், வம்ஷி பைடிப்பள்ளி மற்றும் பூரி ஜெகன்நாத் இணைந்து  தயாரிக்கிறார்கள். திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை இயக்குகிறார்  பூரி ஜெகன்நாத். இந்த ஆக்‌ஷன் என்டர்டெய்னர் படம்,  இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. ரசிகர்களை இருக்கை நுனியில் வைத்திருக்கும், ...
சிபி சத்யராஜ்  நடிக்கும் மாயோன்”யு’ சான்றிதழ்  பெற்றுள்ளது

சிபி சத்யராஜ் நடிக்கும் மாயோன்”யு’ சான்றிதழ் பெற்றுள்ளது

சினிமா
தமிழ் திரை உலகில் வலுவான கதைகளை மையப்படுத்தி சிறந்த திரைப்படங்களை உருவாக்கி வெளியிடுவதில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் அவர்களின் டபுள் மீனிங் புரொடக்சன்ஸ் பட நிறுவனம் முன்னணி நிறுவனமாக வலம் வருகிறது. இந்த நிறுவனம் சார்பில் அடுத்ததாக 'மாயோன்' எனும் புதிய திரைப்படத்தை ரசிகர்களுக்கு வழங்க தயாராக இருக்கிறார்கள். 'மாயோன்' படத்தின் டீசர் வெளியாகி, அதில் இடம்பெற்ற புதிரான புராண இதிகாச கதையால், ரசிகர்களிடம் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதைத்தொடர்ந்து இரண்டு மயக்கும் மெட்டுகளுடனான பாடல்கள் வெளியாகி நல்லதொரு வரவேற்பை பெற்று, படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது. தயாரிப்பு நிறுவனத்தின் முந்தைய தயாரிப்பான சைக்கோ திரைப்படம் ஏ சான்றிதழ் பெற்றிருந்தது, அதிலிருந்து மாறுபட்டு, 'மாயோன்' படம் 'யு' சான்றிதழ் பெற்றுள்ளது. இப்படம் சென்சாரில் எந்த ஒரு காட்சியும் வெட்டப்படாமல் முழுப்...
கன்னியாகுமரியில் தொடங்கிய பாலா-சூர்யா கூட்டணியின் புதிய படம்

கன்னியாகுமரியில் தொடங்கிய பாலா-சூர்யா கூட்டணியின் புதிய படம்

சினிமா
18 ஆண்டுகளுக்குப் பின்னர் பாலா-சூர்யா கூட்டணி இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரியில் இன்று பூஜையுடன் தொடங்கியது. தற்காலிகமாக 'சூர்யா 41' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் அவரது 2டி நிறுவனத்தின் 19 வது பெருமை மிக்க படைப்பாகும். இந்தப் படத்தை 2டி என்டர்டயின்மண்ட் சார்பில் ஜோதிகா மற்றும் சூர்யா தயாரிக்க ராஜசேகர் கற்பூரசுந்தர பாண்டியன் இணைந்து தயாரிக்கிறார். 'நந்தா', 'பிதாமகன்' படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட கதைக்களனில் பாலா உருவாக்கியிருக்கியுள்ள இப்படத்தில் சூர்யா ஏற்றுள்ள பாத்திரம் இதுவரை தமிழ் சினிமா காணாத ஒன்றாகும். சூர்யாவுக்கு ஜோடியாக முதல் முறையாக தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைக்கிறார் டோலிவுட்டின் டாப் ஹீரோயின் கிரித்தி ஷெட்டி. இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார் மமிதா. மிகுந்த பொருட்செலவில் உருவாக்கப்படும் இப்படத்தின் ஒளிப்பதிவை பாலசுப்பிர...
இரு மொழிகளில் உருவாகும், நடிகர் ராம் பொதினேனி நடிக்கும், “தி வாரியர்” திரைப்படம் வரும் ஜூலை 14, பிரமாண்டமாக வெளியாகிறது !

இரு மொழிகளில் உருவாகும், நடிகர் ராம் பொதினேனி நடிக்கும், “தி வாரியர்” திரைப்படம் வரும் ஜூலை 14, பிரமாண்டமாக வெளியாகிறது !

சினிமா
நடிகர் ராம் பொதினேனி நடிப்பில், பிரபல இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில், உருவாகி வரும் “தி வாரியர்” திரைப்படம், வரும் ஜூலை 14 உலகமெங்கும் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகிறது.   கோலிவுட் மற்றும் டோலிவுட் இரண்டு திரைத்துறைகளிலும் பிரபலமான நடிகர் ஆதி பினிசெட்டி, “தி வாரியர்” படத்தில் வில்லனாக நடிக்கிறார், தென்னிந்திய திரையுலகின் இளம் நடிகைகளில் ஒருவரான கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் வெளியீட்டு தேதியை அறிவிப்பதற்காக தயாரிப்பாளர்கள் ஒரு அற்புதமான போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அதில் ராம் பொதினேனி ஒரு ரயில் நிலையத்தின் நடைமேடையில், வெடிபொருட்கள் அடங்கிய பெட்டியின் மீது, கையில் காயத்துடன், அமர்ந்திருக்கிறார். கோபமான முகத்துடன் துப்பாக்கியை வைத்து கொண்டிருக்கிறார், அதே நேரத்தில் குண்டர்கள் கூட்டம் அவரை கண்டு ஓடுவதைக் காணலாம். முன்னதாக RAPO19 என அழைக்கப்...
“வலிமை” 100 மில்லியன் ஸ்ட்ரீமிங்  பார்வை நிமிடங்களை கடந்து, மிகப்பெரிய ஓடிடி ஓப்பனிங்கை பெற்று, சாதனை படைத்துள்ளது.

“வலிமை” 100 மில்லியன் ஸ்ட்ரீமிங்  பார்வை நிமிடங்களை கடந்து, மிகப்பெரிய ஓடிடி ஓப்பனிங்கை பெற்று, சாதனை படைத்துள்ளது.

சினிமா
2022 ஆம் ஆண்டின் மிகப்பெரிய  பிளாக்பஸ்டர் பொழுதுபோக்கு, ஆக்‌ஷன் திரைப்படமான ‘வலிமை’ நேற்று ஜீ5 தளத்தில் வெளியிடப்பட்டது. வெளியான வேகத்தில் 100 மில்லியன் ஸ்ட்ரீமிங் பார்வை நிமிடங்களை பெற்று, ஓடிடி உலகில் மிகப்பெரிய ஓபனிங் சாதனை படைத்துள்ளது. படத்தின் நீக்கப்பட்ட காட்சிகள் ஜீ5 தளத்தில் தற்போது  காண கிடைக்கின்றன. “வலிமை” திரைப்படம், தமிழ், கன்னடம்,தெலுங்கு, இந்தி ஆகிய நான்கு மொழிகளில் வெளியாகியுள்ளது. தமிழ்  ஓடிடி இயங்கு தளங்களின் மறுக்கமுடியாத வெற்றியாளரான ஜீ5, பல ஆண்டுகளாக அனைத்து வகையான கதைகள்  மற்றும் மொழிகளில் எப்போதும் அருமையான திரைப்படங்களையும், அசல் உள்ளடக்கங்களையும் வழங்கி வருகிறது. நடிகர் அஜித் குமார் அவர்களை கௌரவபடுத்தும் வகையில், ‘வலிமை’  திரைப்படம், உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் பிளாக்பஸ்டர் ஆனதை தொடர்ந்து, டிஜிட்டலில்  ஜீ5 தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகவுள்ளதாக அறிவிக்கும்...
‘கே ஜி எஃப் 2’ ட்ரைலர் நாளை வெளியீடு

‘கே ஜி எஃப் 2’ ட்ரைலர் நாளை வெளியீடு

சினிமா
நாளை வெளியாகிறது ‘கே ஜி எஃப் 2’ பட முன்னோட்டம் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் முன்னணி நடிகர் யஷ் நடிப்பில் தயாராகியிருக்கும் 'கே ஜி எஃப் சாப்டர் 2' படத்தின் முன்னோட்டம் நாளை வெளியாகிறது. ஹோம்பாலே பிலிம்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் திரைப்படம் 'கே ஜி எஃப் சாப்டர் 2'. இப்படத்தின் முதல் பாகம் வெளியாகி, 250 கோடி ரூபாய் வசூலித்து இந்திய அளவில் சாதனை படைத்தது. இதனையடுத்து ‘கே ஜி எஃப் 2’ திரைப்படம், எதிர்வரும் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதியன்று வெளியாகிறது. இப்படத்தை, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார்.. இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் தயாராகி வரும் 'கே ஜி எஃப் சாப்டர் 2' படத்தில் கதையின் நாயகனாக ராக் ஸ்டார் யஷ் நடிக்க, அவருக்கு...
விக்ரம் பிரபு நடிப்பில், டாணாக்காரன் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது

விக்ரம் பிரபு நடிப்பில், டாணாக்காரன் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது

சினிமா
விக்ரம் பிரபு, அஞ்சலி நாயர், லால் மற்றும் பலர் நடித்துள்ள டாணாக்காரன் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது இயக்குநர் தமிழ் மற்றும் நடிகர் விக்ரம் பிரபு, நடிகை அஞ்சலி நாயர் மூவரிடமும் கேட்ட கேள்விகளுக்கு.. கேள்வி: இதற்கு முன்னரும் காவலாளியாக, நடித்துள்ளீர்கள் இதை பற்றி என்ன நினைக்கிறீர்கள். விக்ரம் பிரபு: போலீஸ் ஆவதற்கு முன்னால் என்ன செய்ய வேண்டுமோ அதை தான் செய்தேன். இந்த படத்தின் கதையை இயக்குனர் கூறும் போது, உண்மையிலயே இது போன்று நடக்குமா என்ற சந்தேகம் எனக்கு இருந்தது. அவரிடம் இதை உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கினீர்களா என கேட்டேன். பின்னர் தான் அவரே போலீஸில் இருந்துள்ளார் என எனக்கு தெரியவந்தது. படமும் நேர்த்தியாக வந்துள்ளது. மிகவும் ஆழமாக கதையை சொல்லியுள்ளார். படத்தில் இசையமைத்த ஜிப்ரான், கலைஇயக்குனர் ராகவன், கேமராமேன் மாதேஷ் என அனைவரும் இணைந்து ஒரு சிறப்பான அணியாக...
ராஜமௌலி இயக்கத்தில், உருவாகியுள்ள ‘ஆர்ஆர்ஆர்’ படத்தை  சுபாஸ்கரனின் லைக்கா நிறுவனம் நாளை தமிழ்நாட்டில் 550 திரையரங்குகளில் வெளியிடுகிறது.

ராஜமௌலி இயக்கத்தில், உருவாகியுள்ள ‘ஆர்ஆர்ஆர்’ படத்தை சுபாஸ்கரனின் லைக்கா நிறுவனம் நாளை தமிழ்நாட்டில் 550 திரையரங்குகளில் வெளியிடுகிறது.

சினிமா
திரு ராம் சரண் மற்றும் திரு ஜூனியர் என்டிஆர் நடிப்பில், திரு ராஜமௌலி இயக்கத்தில், திரு டிவிவி தானய்யா தயாரித்த 'ஆர்ஆர்ஆர்'-ஐ தமிழகத்தில் 550 திரையரங்குகளில் திரு சுபாஸ்கரனின் லைக்கா நிறுவனம் நாளை வெளியிடுகிறது மிகுந்த எதிர்பார்ப்பிற்கிடையே திரு டிவிவி தானய்யா தயாரிப்பில், பிரம்மாண்ட இயக்குநர் திரு ராஜமௌலி இயக்கத்தில், திரு ராம் சரண் மற்றும் திரு ஜூனியர் என்டிஆர் நடிப்பில் பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள 'ஆர்ஆர்ஆர்' திரைப்படத்தை நாளை (மார்ச் 25-ஆம் தேதி) தமிழ்நாட்டில் 550 அரங்குகளில் திரு சுபாஸ்கரனின் லைக்கா நிறுவனம் வெளியிடுகிறது. தமிழ் (2டி)(3டி), தெலுங்கு (2டி)(3டி)(ஐமாக்ஸ்), ஹிந்தி (2டி)(3டி) ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை லைக்கா நிறுவனம் பெற்றுள்ளது. பிரமாண்ட படங்கள் மூலம் தனக்கென தனியிடம் பிடித்துள்ள லைக்கா, இத்திரைப்படத்தையும் தனக்கே உரிய...
விஜய் ஸ்ரீ இயக்கத்தில் , வெள்ளி விழா நாயகன் மோகனின் ‘ஹரா’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில்  தொடங்கியது.

விஜய் ஸ்ரீ இயக்கத்தில் , வெள்ளி விழா நாயகன் மோகனின் ‘ஹரா’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது.

சினிமா
  ஆக்ஷன் ஹீரோவாக களமிறங்கும் 'வெள்ளிவிழா நாயகன்' மோகன் கோயம்புத்தூர் எஸ் பி மோகன் ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெயஸ்ரீ விஜய் இணைந்து தயாரித்து, விஜய் ஸ்ரீ இயக்கத்தில் உருவாகும் வெள்ளி விழா நாயகன் மோகனின் 'ஹரா' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. இயக்குநர் விஜய் ஸ்ரீ, தயாரிப்பாளர்கள் எஸ்பி மோகன் ராஜ், ஜெயஸ்ரீ விஜய், தொழில்நுட்ப கலைஞர்கள், மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர். இந்த படத்தின் முதல் நாள் படப்பிடிப்பில் சண்டைக்காட்சி படம்பிடிக்கப்பட்டது. இதில் மோகன் உற்சாகமாக கலந்துகொண்டார் . சென்னையில் படப்பிடிப்பு முடிந்தவுடன், கோயம்புத்தூர் மற்றும் ஊட்டியில் படப்பிடிப்பை குழுவினர் தொடருவார்கள். இதுவரை மோகனை பல்வேறு கதாபாத்திரங்களில் பார்த்து ரசித்து மக்கள் கொண்டாடியது போல, 'ஹரா' படத்திலும் அவரது கதாபாத்திரம் மிகவும்...
நடிகர் R.மாதவன், இயக்கத்தில்  “ராக்கெட்ரி – தி நம்பி எஃபெக்ட்” திரைப்படத்தின் டிரெய்லர்  துபாய் எக்ஸ்போ 2022 நிகழ்வில் மிக உயரிய வரவேற்பை பெற்றது

நடிகர் R.மாதவன், இயக்கத்தில்  “ராக்கெட்ரி – தி நம்பி எஃபெக்ட்” திரைப்படத்தின் டிரெய்லர்  துபாய் எக்ஸ்போ 2022 நிகழ்வில் மிக உயரிய வரவேற்பை பெற்றது

சினிமா
 துபாய் எக்ஸ்போ 2022 வில் திரையிடப்பட்ட   நடிகர் R. மாதவன் இயக்குனராக அறிமுகமாகும் “ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்” படத்தின் டிரெய்லர் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த நிகழ்வின் சுவாரசியமான பகுதி என்னவென்றால், பிரமாண்டமான டிரெய்லரைப் பார்த்து பார்வையாளர்கள் அனைவரும் எழுந்து நின்று கைதட்டி தங்கள் பாராட்டுக்களைத் தெரிவித்தனர். சிறப்பு அழைப்பாளர்களுடன் உரையாடுவதற்காக மாண்புமிகு - ராக்கெட் விஞ்ஞானி திரு நம்பி நாராயணன் அவர்கள் மேடை ஏறியதும் அவர்கள் மேலும் உற்சாகமடைந்தனர். இந்த உரையாடல் நிகழ்வின் போது, ராக்கெட் விஞ்ஞானி நம்பி நாராயணனிடம், நடிகர் R.மாதவனிடம் இப்படத்தின் கதையைச் சொல்ல வேண்டும் என்றபோது உங்கள் கருத்து எவ்வாறு இருந்தது என்பது குறித்து கேட்கப்பட்டதற்கு, அவர் கூறியதாவது.., “பொறியியல் துறைசார் அறிவின் சாராம்சத்தைப் புரிந்துகொள்ளக்கூடிய ஒருவரால் என் கதை சொல்லப்பட வேண்டும் எ...