*ப்ளாக் ஹோல், சூனியக்காரி, தேவதை எனக் காமெடியும் மாயாஜாலமும் கலந்த வித்தியாசமான உலகில், பயணிக்கும் கதை ‘டிரோன்ஸ்’.
’டிரோன்ஸ்’ கதையானது ,டிராவிட் செல்வம், அஞ்சலி நாயர் மற்றும் ஆர்.ஜே. தீபக் ஆகியோர்,கல்லூரியில் இருந்து நீக்கம் செய்யப்படுகிறார்கள் பெற்றோருக்குத் தெரியாமல் தங்குவதற்காக ‘பிளாக் ஹோல்’ என்ற அறிவியல் ஆராய்ச்சிக் கூடத்திற்குச் செல்கிறார்கள். அங்கிருந்து வெளியேற முடியாமல் தவிக்கும் அவர்கள், டிரோன் மூலம் வெளி உலகத்தைப் பார்க்கும்போது சித்தி இத்னானியைக் கண்டு காதலில் விழுகின்றனர். ஆனால், அவரது சூனியக்காரிப் பாட்டி தேவதர்ஷினியால் எதிர்பாராத சிக்கல்களில் மாட்டிக்கொள்கிறார்கள்.,இதற்கிடையில், காணாமல் போன மாணவர்களைத் தேடி வரும் காவல்துறை அதிகாரி சினிமாவாலா சதீஷும் சித்தி இத்னானியின் அழகில் மயங்குகிறார். அழகுக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் மர்மம் என்ன? என்பதை நகைச்சுவையும் கற்பனையும் கலந்து சொல்வதே படத்தின் மீதிக்கதை.
கதாநாயகனாக அறிமுகமாகும் டிராவிட் செல்வம், மாறுபட்ட பல எண்ண உணர்வுகளை இயல்பான தனது நடிப்பால் நன்கு வெளிப்படுத்தியுள்ளார் .அதேபோல கதாநாயகியாக நடித்திருக்கும் சித்தி இத்னானி, தனது தோற்றத்திலும் நடிப்பிலும் ரசிகர்களை கவர்கிறார் .மற்றொரு நாயகியாக நடித்திருக்கும் அஞ்சலி நாயரும் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளர் மேலும் குரேஷி, சினிமாவாலா சதீஷ், சசி செல்வராஜ் போன்சர ஏனைய கதாபாத்திரங்களில் நடித்துள்ளவர்களும் அவரவர் பங்களிப்பை படம் முழுவதும் நன்கு வழங்கியுள்ளார்கள்
ஜெயந்த் சேது மாதவனின் ஒளிப்பதிவு கற்பனை உலகத்தைக் காட்சிப்படுத்துவதில் ரசிக்க வைக்கிறது. ஹரி எஸ்.ஆர். இசையில் பாடல்கள் பார்க்கவும் கேட்கவும் ரசிக்கும்படி உள்ளன . பின்னணி இசை காட்சிகளுக்கு மேலும் பலம் சேர்த்துள்ளது .
சிறுவயதில் படித்த கேட்ட அழகி, சூனியக்காரி கதைகளுடன் சயின்ஸ் ஃபிக்ஷன், மாயாஜாலம், பறக்கும் தட்டு போன்ற கற்பனைகளையும் இணைத்து வித்தியாசமான உலகத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் ஆர். ராகவ் மிர்தாத். நாம் ரசித்துப் படிக்கக்கூடிய காமிக்ஸ் புத்தகங்களாக இருந்தாலும் அவற்றில் சில பக்கங்கள் அதிகமாக கதையை நகர்த்தி கொண்டு சென்றால் எப்படி இருக்குமோ ,அதுபோல படத்தின் நீளம் இன்னமும் சற்று குறைக்கப்பட்டு இருந்தால் அது படத்திற்கு மேலும கூடுதல் சிறப்புகளை வழங்கி இருக்கும்.
மொத்தத்தில் , மர்மமான கதாபாத்திரங்கள், மாயாஜாலக் காட்சிகள், விறுவிறுப்பான சம்பவங்கள் எனப் பல அம்சங்களுடன் உருவாகியுள்ள ‘டிரோன்ஸ்’, வழக்கமான திரைப்படங்களிலிருந்து மாறுபட்ட திரையனுபவத்தை ரசிகர்களுக்கு நிச்சயம் வழங்கும் .
