Thursday, October 22

சினிமா

 *கே.டி.குஞ்சுமோனின் “ஜென்டில்ன்மேன்2”பிரம்மாண்ட படத்தின் ஒளிப்பதிவாளராக அஜயன் வின்சென்ட் அறிவிப்பு !!!*

 *கே.டி.குஞ்சுமோனின் “ஜென்டில்ன்மேன்2”பிரம்மாண்ட படத்தின் ஒளிப்பதிவாளராக அஜயன் வின்சென்ட் அறிவிப்பு !!!*

சினிமா
மெகா தயாரிப்பாளரான கே. டி. குஞ்சுமோன் தயாரிப்பில் உருவாகும் பிரம்மாண்ட படம் 'ஜென்டில்மேன்2 ' . ஏற்கனவே இதன் இசை அமைப்பாளராக பாகுபலி புகழ் மரகதமணி ( எம்.எம்.கீரவாணி ) , இரண்டு கதாநாயகிகளாக நயந்தாரா சக்கரவர்த்தி, ப்ரியா லால் அறிவிக்கப்பட்டனர். மக்களை வியப்பில் ஆழ்த்திய பிரமாண்ட படைப்பாக ''ஜெண்டில்மேன்' படத்தின் மூலம் டைரக்டர் ஷங்கர், இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இருவரையும் உலகம் புகழ செய்தார்,கே.டி.குஞ்சுமோன். அதே போல் இப்போது, 'ஜென்டில்மேன்2 ' டைரக்டராக 'ஆஹா கல்யாணம்' புகழ் ஏ.கோகுல் கிருஷ்ணா பெயரை அறிவித்ததும் டிரண்டிங் ஆனது. படத்தின் பின்னணியில் உள்ள தொழில்நுட்ப கலைஞர்களும் அனுபவமிக்க பிரபலங்களாக இருக்கும் என்றும் கூறியிருந்தார், தயாரிப்பாளர் *கே.டி.குஞ்சுமோன். இப்போது அஜயன் வின்சென்டை ஒளிப்பதிவாளராக அறிவித்துள்ளார் கே.டி.குஞ்சுமோன்.'ஜென்டில்மேன்' படத்தில் புது இயக்குனருக்கு உற...
‘மாமனிதன்’ பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு

‘மாமனிதன்’ பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு

சினிமா
யுவன்சங்கர் ராஜாவின் YSR FILMS தயாரிப்பில், இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, நடிகை காயத்ரி இணைந்து நடித்துள்ள படம் மாமனிதன். இளையராஜா, யுவன்சங்கர் ராஜா இணைந்து இப்படத்திற்கு இசையமைத்துள்ளனர். குடும்ப டிரமா திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம் ஜூன் 24 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. Studio 9 சார்பில் RK சுரேஷ் இப்படத்தை வெளியிடுகிறார். இந்நிலையில் இப்படத்தின் பத்திரிக்கை ஊடக சந்திப்பு இன்று படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வினில் விநியோகஸ்தர், நடிகர் RK சுரேஷ் கூறியதாவது.. வாழ்வியலை பற்றி படமாக எடுக்கும் இயக்குனர்கள் குறைவாக உள்ளனர். அவர்களில் ஒருவர் சீனுராமசாமி. தர்மதுரையின் சாயலில் இல்லாமல் ஒரு புது அனுபவமாக இந்த படம் இருக்கும். இது எல்லோருடைய வாழ்கையிலும் அவர்கள் ரிலேட் செய்துகொள்ளும் படமாக இருக்கும். இந்த படத்தை தய...
திரையுலக பிரபலங்களின் பாராட்டு மழையில் நனையும் ‘சுழல் தி வோர்டெக்ஸ்’

திரையுலக பிரபலங்களின் பாராட்டு மழையில் நனையும் ‘சுழல் தி வோர்டெக்ஸ்’

சினிமா
ராணா டகுபதி, ஹன்சிகா மோத்வானி, எஸ். ஜே. சூர்யா ஆகியோர் வியந்து பாராட்டிய 'சுழல் தி வோர்டெக்ஸ்' ஜுன் 17 ஆம் தேதி வெளியான அமேசான் பிரைம் வீடியோவின் முதல் ஒரிஜினல் தமிழ் தொடரான சுழல் தி வோர்டெக்ஸ் எனும் வலைதளத் தொடரினை தென்னக நட்சத்திரமான ராணா டகுபதி, நடிகை ஹன்சிகா மோத்வானி, இயக்குநரும், நடிகருமான எஸ் ஜே சூர்யா ஆகியோர் கண்டு ரசித்து தங்களது விமர்சனத்தையும் எண்ணங்களையும் சமூக வலைதள பக்கத்தில் உற்சாகமான சுட்டுரைகளாக எழுதி ரசிகர்களுடனும், பார்வையாளர்களுடனும் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக ‘பாகுபலி’ புகழ் நடிகர் ராணா டகுபதி தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில், '' சுழல் தி வோர்டெக்ஸ்= குழுவினருக்கு என்னுடைய அன்பான வாழ்த்துக்கள். நீண்ட நாட்களுக்குப் பிறகு என்னுடைய அன்பான தோழி ஸ்ரேயா ரெட்டி அவர்களை திரையில் பார்க்கிறேன். அவருக்கும், சுழல் தி வோர்டெக்ஸ் தொடரை உருவாக்கிய புஷ்க...
இன்வெஸ்டிகேட்டிவ் த்ரில்லராக உருவாகும் “திவ்யா”

இன்வெஸ்டிகேட்டிவ் த்ரில்லராக உருவாகும் “திவ்யா”

சினிமா
நியான் ஸீ ஃபிலிம்ஸ் ஸ்ரீஜேஷ் வல்சன் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் சனீஷ் சுகுமாரன் இயக்கத்தில் இன்வெஷ்டிகேட்டிவ் த்ரில்லராக உருவாகி வருகிறது, “திவ்யா”. தமிழில் இன்வெஷ்டிகேஷன் த்ரில்லர் படங்கள் நிறைய எண்ணிக்கையில் வருவதில்லை. இன்வெஷ்டிகேட்டிவ் த்ரில்லர் வகைப்படங்கள், தொடக்கம் முதல் இறுதி வரை நம்மை பரபரப்பாகவே வைத்திருக்கும். அப்படி ஆரம்பம் முதல் கடைசி வரை படம் பார்ப்பவர்களை பரபரப்பாக வைத்திருக்கும் இன்வெஷ்டிகேட்டிவ் த்ரில்லர் தான் திவ்யா. புதுப்புது இடங்களுக்குப் போகவேண்டும், இதுவரை சந்திக்காத மனிதர்களுடன் பழக வேண்டும்… என்று தன்னந்தனியாகவே சுதந்திரப் பறவையாக சுற்றித்திரியும் இளம்பெண் திவ்யா. திவ்யாவும் அவளது நண்பனும் இதுவரை பார்க்காத ஒரு இடத்திற்கு பயணம் செய்கிறார்கள். அறிமுகமில்லாத இடம், அறிமுகமில்லாத மனிதர்கள்… எதிர்பாராத ஒரு சம்பவம்… அது எந்த இடம்.. அது என்ன சம்பவம்… ...
ஏ1 புரொடக்சன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் ஜான்சன்.கே தயாரித்து இயக்க, யோகிபாபு நாயகனாக நடிக்கும் படம் “மெடிக்கல் மிராக்கல்”

ஏ1 புரொடக்சன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் ஜான்சன்.கே தயாரித்து இயக்க, யோகிபாபு நாயகனாக நடிக்கும் படம் “மெடிக்கல் மிராக்கல்”

சினிமா
திரில்லர், காதல், குடும்ப படம் என ஒவ்வொரு வகை படங்களையும், ஒரு தரப்பினர் ரசிப்பார்கள் ஆனால், காமெடி படங்களை அனைத்து ரசிகர்களும் கொண்டாடுவார்கள். காமெடி படங்கள் மனதிற்கு முழுமையான நிம்மதியை தரும், ஆனால் முழுமையாக அனைவரும் ரசிக்கும்படி, வாய்விட்டு சிரிக்கும்படி காமெடி படங்கள் தருவதென்பது எளிதல்ல, அந்த வகையில் தமிழ் திரையுலகில் பெரும் வெற்றியை குவித்த, அனைவராலும் கொண்டாடப்பட்ட, காமெடி படங்களான "ஏ1, பாரீஸ் ஜெயராஜ்", படங்களை தந்த இயக்குநர் ஜான்சன்.கே, தனது அடுத்த படத்தை துவங்கியுள்ளார். இந்த புதிய திரைப்படத்திற்கு “மெடிக்கல் மிராக்கல்” என்று பெயர் வைத்து இருக்கிறார்கள். முழுக்க முழுக்க காமெடி ஜானரில், அனைவரும் ரசிக்கும் வகையில் இப்படம் உருவாக இருக்கிறது. இப்படத்தை எழுதி இயக்குவதோடு, ஏ1 புரோடக்சன்ஸ் மூலம் தயாரிப்பாளராகவும் அறிமுகமாகிறார் இயக்குநர் ஜான்சன்.கே. இப்படத்தில் நாயகனாக தமிழ் சின...
திரையுலக பிரபலங்களுக்காக பிரத்யேகமாக திரையிடப்பட்ட ‘சுழல் தி வோர்டெக்ஸ் ‘

திரையுலக பிரபலங்களுக்காக பிரத்யேகமாக திரையிடப்பட்ட ‘சுழல் தி வோர்டெக்ஸ் ‘

சினிமா
அமேசான் பிரைம் வீடியோவின் ஒரிஜினல் தமிழ் தொடரான 'சுழல் தி வோர்டெக்ஸ்' எனும் வலைதள தொடர், இதனை உருவாக்கிய புஷ்கர் & காயத்ரி, தங்களுடைய திரையுலக நண்பர்களுக்காக பிரத்யேகமாக சென்னையில் திரையிட்டனர். இன்றைய தேதி இந்தியா முழுவதும் மட்டுமல்லாமல் உலகளவில் பெருமளவில் எதிர்பார்க்கப்படும் வலைதளத் தொடர், அமேசான் பிரைம் வீடியோ ஒரிஜினல் தொடரான 'சுழல் தி வோர்டெக்ஸ்'. இந்த தொடர் ஜூன் மாதம் 17ஆம் தேதியன்று வெளியாவதால், தயாரிப்பாளர்களும், பார்வையாளர்களும் உற்சாகத்தில் உள்ளனர். மேலும் இந்த தொடருக்கான பிரத்யேக திரையிடலை, இதனை உருவாக்கிய புஷ்கர் மற்றும் காயத்ரி அவர்களுடைய தொழில்துறை நண்பர்களுக்காக மேற்கொண்டனர். இந்த நிகழ்வில் ஆர். பார்த்திபன், ஸ்ரேயா ரெட்டி, கதிர், நிவேதிதா சதிஷ், தொடரின் இயக்குநர்களான பிரம்மா மற்றும் அனுசரண் ஆகியோருடன் விஜய் சேதுபதி, எஸ். ஜே. சூர்யா, ஹன்சிகா மோத்வானி, நிவேதா பெத...
“வீட்ல விசேஷம் உணர்வுகளும் சந்தோஷமும் நிறைந்த  ஒரு முழுமையான குடும்ப பொழுதுபோக்கு படமாக இருக்கும்” – ஆர்.ஜே.பாலாஜி

“வீட்ல விசேஷம் உணர்வுகளும் சந்தோஷமும் நிறைந்த  ஒரு முழுமையான குடும்ப பொழுதுபோக்கு படமாக இருக்கும்” – ஆர்.ஜே.பாலாஜி

சினிமா
குடும்பங்களையும் நண்பர்களையும் திரையரங்குகளில் ஒன்றிணைப்பதில் குடும்ப பொழுதுபோக்கு படங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. Zee Studios & Bayview Projects LLP சார்பில் போனி கபூர்   Romeo Pictures உடன் இணைந்து தயாரித்துள்ள ஆர்ஜே பாலாஜியின் "வீட்ல விசேஷம்" திரைப்படம் இந்த வகை படங்களுக்கு  புத்துயிர் தருவதாக இருக்கும். இத்திரைப்படம், ஜூன் 17, 2022 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. நடிகரும், இயக்குநருமான ஆர்ஜே பாலாஜி படம் பற்றி  கூறுகையில்.., 'பதாய் ஹோ' இந்தி திரையுலகில் மிகப்பெரிய வெற்றிப்படமாக போற்றப்படுகிறது, மேலும் அதன் பொழுதுபோக்கு அம்சங்களுக்காக அப்படம் அனைத்து தரப்பு பார்வையாளர்களிடையேயும் அமோக வரவேற்பைப் பெற்றது. நாங்கள் அதன் ரீமேக்கில் வேலை செய்யத் தொடங்கியபோது, அதை ரீமேக் செய்யாமல், நமது மக்களின் உணர்வுகளை பிரதிபலிப்பது போல், இங்குள்ளவர்களுக்கு  ஏற்றவாறு செய்ய நின...
தமிழக திரைத்துறையில் முன்னோடிகளாக மக்களால் இன்றும் நினைக்கப்படும் மாபெரும் கலைமேதைகளுக்கு இயக்குனர் சீனுராமசாமி மலர் மரியாதை செய்தார்.

தமிழக திரைத்துறையில் முன்னோடிகளாக மக்களால் இன்றும் நினைக்கப்படும் மாபெரும் கலைமேதைகளுக்கு இயக்குனர் சீனுராமசாமி மலர் மரியாதை செய்தார்.

சினிமா
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி காயத்திரி குரு சோமசுந்தரம் நடித்து யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் முதன் முறையாக இளையராஜா யுவன் சங்கர் ராஜா இசையில் சீனு ராமசாமி எழுதி இயக்கும் மாமனிதன் திரைப்படம் வரும் ஜூன் 24 திரைக்கு வருகிறது. இப்படத்தை நடிகர் தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் தனது ஸ்டுடியோ நைன் நிறுவனம் மூலம் வெளியிடுகிறார். இந்த தருணத்தில் தமிழக திரைத்துறையில் முன்னோடிகளாக மக்களால் இன்றும் நினைக்கப்படும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்,நடிகர் திலகம் சிவாஜி கணேசன்,முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு இயக்குனர் சீனுராமசாமி மலர் மரியாதை செய்தார். அவர் இதுபற்றி கூறும் போது"இந்த தமிழ்ச்சினிமாவின் மாமனிதர்கள் எனக்குள் உண்டாக்கிய கலை உணர்வுக்கு நன்றி கூறும் விதமாக என் அன்பை மலர்களாக சமர்ப்பித்தேன்" என்றார்.  ...
வீட்ல விசேஷம் திரைப்படம் நீண்ட நாட்களுக்குப் பிறகு குடும்பமாக பார்வையாளர்களை மீண்டும் திரையரங்குகளுக்கு கொண்டு வரும் என்று என்னால் உறுதியாக கூறமுடியும். – நடிகர் சத்யராஜ்

வீட்ல விசேஷம் திரைப்படம் நீண்ட நாட்களுக்குப் பிறகு குடும்பமாக பார்வையாளர்களை மீண்டும் திரையரங்குகளுக்கு கொண்டு வரும் என்று என்னால் உறுதியாக கூறமுடியும். – நடிகர் சத்யராஜ்

சினிமா
இந்தியத் திரையுலகில் மிகவும் பிரபலமான பன்முக திறமை வாய்ந்த நடிகர்களில் ஒருவரான நடிகர் சத்யராஜ் நடிப்பில், ஜூன் 17, 2022 அன்று வரவிருக்கும் திரைப்படமான ‘வீட்ல விசேஷம்’ வெளியீட்டில் அவர் மிகவும் உற்சாகமாக இருக்கிறார். படம் குறித்து நடிகர் சத்யராஜ் கூறியதாவது.., இந்த ரீமேக் உருவாகும் முன்பே, பதாய் ஹோ திரைப்படத்தை நான் ஏற்கனவே பார்த்துவிட்டேன், அதன் உள்ளடக்கம் மற்றும் அவர்கள் அதை வழங்கிய விதம் ஆகியவற்றால் நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன். ஆனால், ரீமேக்குக்காக RJ பாலாஜி என்னை அணுகியபோது, அந்த கதாபாத்திரத்தை முழுமையாக என்னால் வெளிப்படுத்த முடியுமா என்று என் மனம் சற்று தயக்கம் கொண்டது. ஏனென்றால், பார்வையாளர்கள் என்னை மென்மையான, முரட்டுத்தனமான மற்றும் கடினமான பாத்திரங்களில் பார்த்திருக்கிறார்கள், ஆனால் இந்தப்படம் அத்தகைய கதாபாத்திரத்தில் இல்லை. ‘பாவம் மூஞ்சி’ சத்யராஜை (அப்பாவி ) கொண்டு வர வேண்...
 “வள்ளி மயில்” திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழா !

 “வள்ளி மயில்” திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழா !

சினிமா
நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தாய் சரவணன் தயாரிப்பில் இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி, பாரதிராஜா, சத்யராஜ் நடிக்கும் புதிய திரைப்படம் "வள்ளிமயில்". 80களின் நாடகக்கலை பின்னணியில் உருவாகும் இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியீட்டு விழா இன்று படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இவ்விழாவினில் வசனகர்த்தா பாஸ்கர் சக்தி கூறியதாவது.., குறுகிய காலத்தில் கணிசமான படங்களை கொடுத்து, வெற்றியை கண்டவர் சுசீந்திரன். எனது நாவலை படித்துவிட்டு, அதை அழகர்சாமியின் குதிரை என்ற படமாக மாற்றினார். வள்ளி மயில் திரைக்கதையை வெகுநாட்களாக பேசிகொண்டிருந்தோம். கடுமையான உழைப்பில் உருவான கதை ‘ வள்ளி மயில்’. இந்த திரைப்படம் திரைத்துறையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இது உங்களுக்கு நிச்சயம் பிடித்தபடமாக இருக்கும். ஆடை வடிவமைப்பாளர் ராதிகா கூறியதாவது....