Saturday, March 15

தமிழக திரைத்துறையில் முன்னோடிகளாக மக்களால் இன்றும் நினைக்கப்படும் மாபெரும் கலைமேதைகளுக்கு இயக்குனர் சீனுராமசாமி மலர் மரியாதை செய்தார்.

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி காயத்திரி குரு சோமசுந்தரம் நடித்து யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் முதன் முறையாக இளையராஜா யுவன் சங்கர் ராஜா இசையில் சீனு ராமசாமி எழுதி இயக்கும் மாமனிதன் திரைப்படம் வரும் ஜூன் 24 திரைக்கு வருகிறது. இப்படத்தை நடிகர் தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் தனது ஸ்டுடியோ நைன் நிறுவனம் மூலம் வெளியிடுகிறார்.

இந்த தருணத்தில் தமிழக திரைத்துறையில் முன்னோடிகளாக மக்களால் இன்றும் நினைக்கப்படும்
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்,நடிகர் திலகம் சிவாஜி கணேசன்,முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு இயக்குனர் சீனுராமசாமி மலர் மரியாதை செய்தார்.

அவர் இதுபற்றி கூறும் போது”இந்த தமிழ்ச்சினிமாவின் மாமனிதர்கள் எனக்குள் உண்டாக்கிய கலை உணர்வுக்கு நன்றி கூறும் விதமாக என் அன்பை மலர்களாக சமர்ப்பித்தேன்”
என்றார்.

 

Spread the love