Sunday, April 20

இன்வெஸ்டிகேட்டிவ் த்ரில்லராக உருவாகும் “திவ்யா”

நியான் ஸீ ஃபிலிம்ஸ் ஸ்ரீஜேஷ் வல்சன் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் சனீஷ் சுகுமாரன் இயக்கத்தில் இன்வெஷ்டிகேட்டிவ் த்ரில்லராக உருவாகி வருகிறது, “திவ்யா”.

தமிழில் இன்வெஷ்டிகேஷன் த்ரில்லர் படங்கள் நிறைய எண்ணிக்கையில் வருவதில்லை. இன்வெஷ்டிகேட்டிவ் த்ரில்லர் வகைப்படங்கள், தொடக்கம் முதல் இறுதி வரை நம்மை பரபரப்பாகவே வைத்திருக்கும்.

அப்படி ஆரம்பம் முதல் கடைசி வரை படம் பார்ப்பவர்களை பரபரப்பாக வைத்திருக்கும் இன்வெஷ்டிகேட்டிவ் த்ரில்லர் தான் திவ்யா.

புதுப்புது இடங்களுக்குப் போகவேண்டும், இதுவரை சந்திக்காத மனிதர்களுடன் பழக வேண்டும்… என்று தன்னந்தனியாகவே சுதந்திரப் பறவையாக சுற்றித்திரியும் இளம்பெண் திவ்யா.

திவ்யாவும் அவளது நண்பனும் இதுவரை பார்க்காத ஒரு இடத்திற்கு பயணம் செய்கிறார்கள். அறிமுகமில்லாத இடம், அறிமுகமில்லாத மனிதர்கள்… எதிர்பாராத ஒரு சம்பவம்…
அது எந்த இடம்.. அது என்ன சம்பவம்… அந்த சம்பவத்தில் என்ன நடந்தது என்பது தான், “திவ்யா”வின் கதை.

சாஸ்வி பாலா, மிதுன், சம்பத் ராம், மேத்யூ வர்க்கீஸ், பிரவின், அகில் கிருஷ்ணஜித் முருகன் ஆகியோர் நடிப்பில், விபின் ராஜ் ஒளிப்பதிவு செய்ய, ரெஜிமோன் இசையமைப்பில் பாடல்கள், மற்றும் வசனத்தை முருகன் மந்திரம் எழுதி இருக்கிறார்.

வழக்கமான பாணியில் இல்லாது, மிக வித்தியாசமான திரைக்கதையுடன் உருவாகியுள்ள திவ்யா திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடந்துகொண்டிருக்கிறது. விரைவில் “திவ்யா” படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெயிலர் வெளியாக இருக்கிறது.

 

 

Spread the love