“தி வாரியர்” திரைப்படத்தில் நடிகர் ஆதியின் கலக்கலான ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !
“தி வாரியர்” திரைப்படத்த்தில் நடிகர் ஆதி, குரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார், பயமுறுத்தும் கலக்கலான ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !
நடிகர் ராம் பொதியேனி நடிக்கு “தி வாரியர்” ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கு திரையுலகின் இளம் நடிகர் முதன்முறையாக பிரபல இயக்குனர் N லிங்குசாமியுடன் ஜோடி சேர்ந்துள்ளார், மேலும் இந்த படம், இருமொழிகளில் தயாராவதுடன், கோலிவுட்டில் ராமின் அறிமுக படமாகும்.
இப்படத்தில் நடிகர் ஆதி பினுஷெட்டி இதுவரை பார்த்திராத வலுவான வில்லன் வேடத்தில் நடிக்கின்றார். இன்று, மகா சிவராத்திரி அன்று, “தி வாரியர்” படத்தின் குழுவினர் ஆதியின் ஃபர்ஸ்ட் லுக் தோற்றத்தை வெளியிட்டுள்ளனர்.
நடிகர் ஆதி, குரு என்ற கதாபாத்திரத்தில் தீய செயல்களுக்கே தலைவனாக இருக்கும் ஒரு மிரட்டலான பாத்திரத்தில் நடிக்கிறார். அவரது கடுமையான தோற்றம் மற்றும் மிரட்டும் லுக் படத்தின் மீதான எ...









