மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் K.T.குஞ்சுமோனின் #ஜென்டில்மேன்2 படத்திற்கு இசையமைக்கிறார் MMகீரவாணி
தென்னிந்திய மொழிகளில் முன்னணி தயாரிப்பாளராக, பல பிரமாண்ட படைப்புகளை தந்த மெகா தயாரிப்பாளர் 'ஜென்டில்மேன் ' K.T.குஞ்சுமோன். சரத்குமார் முதல் இயக்குநர் ஷங்கர் வரை பல ஜாம்பவான்களை திரையுலகிற்கு தந்தவர். பிரமாண்ட படங்களை தயாரித்தது மட்டுமில்லாமல், திரைப்படங்களை விளம்பரப்படுத்துவதிலும், படத்தின் ஒவ்வொரு நிகழ்வுகளையும் பிரமாண்டமாக நிகழ்த்திக்காட்டியவர். தற்போது மீண்டும் திரைப்பட தயாரிப்பில் இறங்கியுள்ளார்.
#ஜென்டில்மேன்2 படத்திற்கு இசை அமைப்பாளர் யார் என்பதை, ரசிகர்களுக்கு ஒரு போட்டியாக நேற்று அறிவித்திருந்தார். இப்படத்தின் இசையமைப்பாளர் யார் என்பது சரியாக கணிக்கும் ரசிகர்களில் முதல் மூன்று பேருக்கு தங்க காசுகள் பரிசாக அளிக்கப்படும் என்ற செய்தி சோசியல் மீடியா முழுவதும் பரபரப்பானது.
இந்நிலையில் படத்தின் முதல் அறிவிப்பாக படத்தின் இசையமைப்பாளர் குறித்த அறிவிப்பு இன்று அறிவித்துள்ளார்கள்.
உ...









