#கிக் படத்திற்காக முதன்முறையாக சொந்தக் குரலில் பாடினார் நடிகர் சந்தானம்.
பிரபல கன்னட இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் படம் கிக். இவருடன் தன்யா ஹோப், ராகினி திவேதி மற்றும் பலர் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு அர்ஜுன் ஜன்யா இசையமைக்கிறார். இப்படத்தின் முதல் பாடலுக்கான விளம்பர வீடியோ இன்று வெளியாகியுள்ளது. அதில் "சாட்டர்டே இஸ் கம்மிங்கு..." (Saturday is cominguu) என்று ஆரம்பிக்கும் பாடலை முதல் முறையாக நடிகர் சந்தானம் சொந்தக் குரலில் பாடியிருக்கிறார். இப்பாடலை கவிஞர் விவேகா எழுதியிருக்கிறார். இப்பாடலின் முழு வரிகளுக்கான வீடியோ அக்டோபர் 10ஆம் தேதி மாலை 06.03 மணிக்கு வெளியாகவுள்ளது.எல்லா துயரத்தையும் மறந்து சிரிச்சு, சந்தோஷமா பொழுது போக்குற படம், சந்தானத்தின் "கிக்".
நமக்கு இருக்கிற கஷ்டம், துக்கம், வறுமை, ஏழ்மை, சோகம்னு எல்லா துயரத்தையும் மறந்து சிரிச்சு, சந்தோஷமா பொழுது போகணும்.. அப்படி நினைத்து வந்தது தான் இந்த 'கிக்' படம்.பல ஹிட் படங்க...









