Wednesday, June 17

சினிமா

 புத்தாண்டில் இசைஞானி இளையராஜாவை சந்தித்து ஆசி பெற்ற சாமானியன் குழு

 புத்தாண்டில் இசைஞானி இளையராஜாவை சந்தித்து ஆசி பெற்ற சாமானியன் குழு

சினிமா
எண்பது, தொண்ணூறுகளில் மக்கள் நாயகன் என எளிய மக்களின் முகமாக அறியப்பட்டவர் நடிகர் ராமராஜன். தொடர்ந்து வெள்ளி விழாப்படங்களை கொடுத்த பெருமை இவருக்கு மட்டுமே உண்டு. இவரது வெற்றியின் பின்னணியில் தூணாக இருந்து அவரது படங்களுக்கு காலத்தால் அழியாத இனிமையான பாடல்களை கொடுத்தவர் இசைஞானி இளையராஜா. தற்போது இவர்கள் இருவரும் 23 வருடங்களுக்கு பிறகு ‘சாமானியன்’ என்கிற படத்தின் மூலம் மீண்டும் கைகோர்த்துள்ளனர். இப்படி ஒரு அபூர்வ கூட்டணியை மீண்டும் இணைத்து படம் இயக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார் இயக்குநர் R.ராகேஷ். இவர் இதற்கு முன்னதாக தம்பிக்கோட்டை, மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன ஆகிய படங்களை இயக்கியவர். இந்த படத்தை எட்செட்ரா என்டர்டெய்ன்மென்ட் சார்பில் V.மதியழகன் தயாரித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தநிலையில் புத்தாண்டை முன்னிட்டு தயாரிப்...
 பிரைம் வீடியோ ஷாஹித் கபூர் மற்றும் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிப்பில் உருவான மிகவும் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட ராஜ் & டிகேயின் ஃபார்ஸி, கிரைம் த்ரில்லர் திரைப்படத்தை பிப்ரவரி 10 ஆம் தேதி வெளியிடுகிறது

 பிரைம் வீடியோ ஷாஹித் கபூர் மற்றும் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிப்பில் உருவான மிகவும் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட ராஜ் & டிகேயின் ஃபார்ஸி, கிரைம் த்ரில்லர் திரைப்படத்தை பிப்ரவரி 10 ஆம் தேதி வெளியிடுகிறது

சினிமா
பிரைம் வீடியோ ஷாஹித் கபூர் மற்றும் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிப்பில் உருவான மிகவும் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட ராஜ் & டிகேயின் ஃபார்ஸி, கிரைம் த்ரில்லர் திரைப்படத்தை பிப்ரவரி 10 ஆம் தேதி வெளியிடுகிறது ராஜ் மற்றும் டிகே உருவாக்கிய இந்த, க்ரைம் த்ரில்லர் ஷாஹித் கபூர் மற்றும் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் டிஜிட்டல் அறிமுகமாக அமைகிறது .மேலும் இந்தத் தொடரில் கே கே மேனன், ராஷி கண்ணா, அமோல் பலேகர், ரெஜினா காசண்ட்ரா மற்றும் புவன் அரோரா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றுகின்றனர் , மற்றும் இது பிப்ரவரி 10 முதல் இந்தியாவிலும் 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்கள் முழுவதும் ஸ்ட்ரீம் செய்யப்பட உள்ளது. வரம்புகள் இல்லாத வகையில் புத்தம் புதிய, மற்றும் தனித்துவமான திரைப்படங்கள், டிவி ஒளிபரப்புக்கள், ஸ்டாண்ட் அப் நகைச்சுவை, அமேசான் ஒரிஜினல்கள் , விளம்பரங்கள் இல்லாத அமேசான் பிரை...
இயக்குநர் ஜெகன் திறமையானவர்; பிகினிங் படத்தை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறேன்! – இயக்குநர் லிங்குசாமி

இயக்குநர் ஜெகன் திறமையானவர்; பிகினிங் படத்தை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறேன்! – இயக்குநர் லிங்குசாமி

சினிமா
திருப்பதி பிரதர்ஸ் சார்பில் இயக்குநர் லிங்குசாமி வெளியிடும் படம் #பிகினிங். ஆசியாவின் பிளவு திரையில் எடுக்கப்பட்ட திரைப்படம். இப்படத்தை அறிமுக இயக்குநர் ஜெகன் விஜயா இயக்க, வினோத் கிஷன், கௌரி மற்றும் பலர் நடித்திருக்கிருக்கிறார்கள். அப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் படக்குழுவினர் பேசியதாவது: இயக்குநர் லிங்குசாமி பேசும்போது, இப்படத்தில் பணியாற்றிய ஒவ்வொருவரும் அதாவது, ஒளிப்பதிவாளர் இந்த லென்ஸை உபயோகப்படுத்தினேன் என்றார், கலை இயக்குநர் புதியதாக ஒன்றை பயன்படுத்தினோம் என்றார். அது தான் புதியதாக படம் எடுப்பவர்களுக்கு கிடைக்க வேண்டிய அனுபவம். ஆனந்தம் படம் எடுத்தபோது என்ன உணர்ந்தேனோ, அதை இந்த படத்திலும் உணர்கிறேன். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த படத்தை வெளியிடுவதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். மிக சவாலாக இந்த படத்தை எடுத்திருக்கிறார்கள் என்பது நன்றாக தெரிகிறது. மிகவும் திறமையான இயக்...
“கட்டில்” திரைப்பட சிங்கிள் டிராக் வெளியீடு !!!

“கட்டில்” திரைப்பட சிங்கிள் டிராக் வெளியீடு !!!

சினிமா
Maple Leafs Productions தயாரிப்பில், பிரபல எடிட்டர் B.லெனின் கதை, திரைக்கதையில், EV கணேஷ்பாபு, இயக்கி தயாரித்து கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் “கட்டில்”. இப்படத்தின் முதல் சிங்கிள் டிராக் பாடல் வெளியீட்டு விழா இன்று பிரபலங்கள் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இயக்குநர் நடிகர் EV கணேஷ் பாபு பேசியதாவது… நானும் பத்திரிக்கையாளனாக இருந்து வந்தவன் தான். 2023ல் முதல் பத்திரிகையாளர் சந்திப்பில் நான் கலந்துகொள்வது மகிழ்ச்சி. நான் இங்கு இன்று இந்த மேடையில் இருக்க முக்கிய காரணம் எடிட்டர் லெனின் அவர்கள் தான் அவரது ஊக்கத்தில் தான் இந்த திரைப்படம் நடந்தது. செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்கள் இந்த நிகழ்விற்கு வந்து வாழ்த்துவது மிக மகிழ்ச்சி. ஶ்ரீகாந்த் தேவா இப்படத்தில் அருமையான இசையைத் தந்துள்ளார். சித் ஶ்ரீராம் மிக அரிதாக தேர்ந்தெடுத்து பாடல்கள் பாடுகி...
ஜான்வி கபூரின் சமீபத்திய வெளியீடான ‘மிலி’ ஓடிடி சார்ட்டில் நம்பர் 1 இடத்தில் இருக்கிறது

ஜான்வி கபூரின் சமீபத்திய வெளியீடான ‘மிலி’ ஓடிடி சார்ட்டில் நம்பர் 1 இடத்தில் இருக்கிறது

சினிமா
சினிமாத்துறையில் ஒருவர் தரும் கடின உழைப்பு என்றும் வீண் போகாது என்பதற்கு உதாரணமாக நடிகை ஜான்வி கபூரின் உழைப்பும் அவரது சமீபத்திய திரைப்படங்களின் தேர்வும் இருக்கிறது என பாராட்டுகள் குவிந்து வருகிறது. சவாலான கதாபாத்திரங்கள் மற்றும் திரைக்கதையில் நடிப்பதற்கு ஜான்வி கபூர் எப்போதும் தயங்கியதும்  கிடையாது, அதுபோன்ற படங்களை அவர் தவிர்த்ததும் கிடையாது. அந்த வகையில் அவர் தற்போது, தன்னுடைய சமீபத்திய படமான ‘மிலி’யில் மீண்டும் தனது திறமையை நிரூபித்து இருக்கிறார். சர்வைவல் ட்ராமாவாக நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் வெளியாகிய ‘மிலி’ கதை பார்வையாளர்களையும் சினிமா ஆர்வலர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் ஜான்வி கபூரின் திறமையான நடிப்புக்கும் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. பார்வையாளர்கள் மற்றும் சினிமா ஆர்வலர்களிடம் இருந்து கிடைத்து வரும் நேர்மறையான வரவேற்பைத் தொடர்ந்து ‘மிலி’ திரைப்படம் இந்தியன் ஓடி...
‘அருவா சண்ட’.-விமர்சனம்

‘அருவா சண்ட’.-விமர்சனம்

சினிமா
ஒயிட் ஸ்கிரீன் புரொடக்ஷன் பட நிறுவனம் சார்பில் வி.ராஜா தயாரித்து, கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘அருவா சண்ட’. கதையின் நாயகனான ராஜா கபடி விளையாட்டில் கில்லியாக உள்ளார் . அவரது அம்மா சரண்யாவுக்கும் தன் மகன் கபடிவிளையாட்டில் சாதனை படைக்கவேண்டும் என்று மிகவும் ஆசை. அதே ஊரில் இருக்கும் ஆடுகளம் நரேனின் மகள் மாளவிகா மேனன் கபடி பற்றி படம் எடுக்க முயற்சி செய்கிறார், கபடி வீரரான நாயகனும் , மாளவிகா மேனனும் காதல் வயப்படுகிறார்கள் ஆனால், இவர்களது காதலுக்கு சாதி தடையாக வருவதோடு ,நரேன் தன தங்கை மகனுக்கு நாயகியை திருமணம் செய்துவைக்க முடிவுசெய்கிறார்,இறுதியில் அவர்கள் காதல் வெற்றி அடைந்ததா? இல்லையா?, நாயகன் அம்மாவின் கனவு நிறைவேறியதா? இல்லையா? என்பதே ‘அருவா சண்ட’.படத்தின் மீதி கதை படத்தை தயாரித்திருப்பதோடு, நாயகனாகவும் வி. ராஜா நடித்துள்ளார் கிராமத்து இளைஞனாக புதுமுகம் என்று தெரியாத அளவிற்கு யதார்...
” பரிவர்த்தனை ” படத்தின் மூலம் வெள்ளி திரைக்கு வரும் சின்னத்திரை நட்சத்திரங்கள்.

” பரிவர்த்தனை ” படத்தின் மூலம் வெள்ளி திரைக்கு வரும் சின்னத்திரை நட்சத்திரங்கள்.

சினிமா
M S V புரொடக்ஷன்ஸ் என்ற புதிய பட நிறுவனம் சார்பில் பொறி. செந்திவேல் கதை, வசனம் எழுதி தயாரித்துள்ள படத்திற்கு " பரிவர்த்தனை " என்று வித்தியாசமாக பெயர் வைத்துள்ளனர். வெத்து வேட்டு, தி பெட் ஆகிய படங்களை தொடர்ந்து எஸ்.மணிபாரதி திரைக்கதை எழுதி இந்த படத்தை இயக்கியிருக்கிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நம்ம வீட்டு பொண்ணு தொடரின் நாயகன் சுர்ஜித் இந்த படத்தின் நாயகனாகவும், ஈரமான ரோஜாவே தொடரில் நாயகியாக நடித்து வரும் சுவாதி இந்த படத்தின் நாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கன்னத்தில் முத்தமிட்டால் தொடரில் நடித்துள்ள ராஜேஸ்வரி மற்றும் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா தொடரின் வில்லன் பாரதி மோகன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களோடு இளம் வயது நாயகர்களாக விக்ரம் ஆனந்த், மாஸ்டர் விதுன் மற்றும் இளம் வயது நா...
திரைப்படத்துறையில் மூவாயிரம் கோடி முதலீடு செய்யும் ஹோம்பாலே பிலிம்ஸ்

திரைப்படத்துறையில் மூவாயிரம் கோடி முதலீடு செய்யும் ஹோம்பாலே பிலிம்ஸ்

சினிமா
‘கேஜிஎஃப் 1’, ‘கே ஜி எஃப் 2’, ‘காந்தாரா’ போன்ற பிரம்மாண்டமான பட்ஜெட் படங்களை தயாரித்து, பான் இந்திய படைப்பாக அளித்து, ரசிகர்களின் மனதில் இடம்பிடித்திருக்கும் தயாரிப்பு நிறுவனமான ஹோம்பாலே பிலிம்ஸ் சார்பில் அதன் உரிமையாளரான தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர், பார்வையாளர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்து, எதிர்கால திட்டம் குறித்த அறிவிப்பையும் வெளியிட்டிருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது.... “ ஹோம்பலே ஃபிலிம்ஸ் சார்பாக, எனது மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன், மேலும் எங்கள் மீது அசைக்க முடியாத அன்பையும், ஆதரவையும் பொழியும் உங்கள் அனைவரையும் பாராட்டுகிறேன். கடந்த ஆண்டு எங்களுக்கு சிறந்த ஆண்டாகவும், நிறைவானதாகவும் இருந்தது- இது உங்கள் அன்பு மற்றும் ஆதரவினால் மட்டுமே சாத்தியமானது. அதற்காக மீண்டும் ஒரு மு...
ஒலிம்பியா மூவிஸ் S. அம்பேத் குமார் வழங்கும் கணேஷ் K பாபு இயக்கத்தில் கவின்- அபர்ணா தாஸ் நடிக்கும் ‘டாடா’ படத்தை உலகம் முழுவதும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடுகிறது

ஒலிம்பியா மூவிஸ் S. அம்பேத் குமார் வழங்கும் கணேஷ் K பாபு இயக்கத்தில் கவின்- அபர்ணா தாஸ் நடிக்கும் ‘டாடா’ படத்தை உலகம் முழுவதும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடுகிறது

சினிமா
ஒலிம்பியா மூவிஸ் S. அம்பேத் குமார் வழங்கும் கணேஷ் K பாபு இயக்கத்தில் கவின்- அபர்ணா தாஸ் நடிக்கும் 'டாடா' படத்தை உலகம் முழுவதும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடுகிறது நடிகர் கவின் நடிப்பில் உருவாகியுள்ள 'டாடா' திரைப்படம், அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் படத்தின் முதல் பார்வை மற்றும் வெளியாகியுள்ள பாடல்கள் இந்த எதிர்பார்ப்பை இன்னும் அதிகமாக்கியுள்ளது. படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்சன் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் தற்போது படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக தயாராக உள்ளது. இந்த நிலையில், படத்தினை உலகம் முழுவதும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிட இருப்பதாக படக்குழு அறிவித்து இருக்கிறது. அழகான ரொமாண்டிக் எண்டர்டெயினர் படமான 'டாடா' சென்னை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. கணேஷ் K பாபு எழுதி இயக்கி இருக...
நாக சைதன்யா மற்றும் வெங்கட்பிரபுவின் ‘கஸ்டடி’ படத்தின் க்ளிம்ப்ஸ் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகிறது

நாக சைதன்யா மற்றும் வெங்கட்பிரபுவின் ‘கஸ்டடி’ படத்தின் க்ளிம்ப்ஸ் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகிறது

சினிமா
இளமையும் திறமையும் மிக்க நடிகர் நாக சைதன்யா தற்போது பிளாக்பஸ்டர் வெற்றி இயக்குநரான வெங்கட்பிரபுவின் ஆக்‌ஷன் த்ரில்லர் படமான 'கஸ்டடி'யில் நடித்து வருகிறார். கிரீத்தி ஷெட்டி படத்தின் கதாநாயகியாக நடிக்கிறார். இரண்டு மொழிகளில் வெளியாக இருக்கும் இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது. சமீபத்தில் வெளியான இந்தத் திரைப்படத்தின் முதல் பார்வை ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. சிவாவின் அதிரடி ஆக்‌ஷன் உலகை அறிமுகப்படுத்தும் விதமாக படத்தின் க்ளிம்ப்ஸை புது வருட பரிசாக பார்வையாளர்களுக்கு படக்குழு வெளியிட்டுள்ளது. நாகசைதன்யாவின் பயமில்லாத ஆக்‌ஷன் தோற்றம் மற்றும் படத்தின் சில விஷூவல்களையும் படக்குழு அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது வெளியாகியுள்ள க்ளிம்ப்ஸில் வசனங்கள் ஏதும் இல்லை என்றாலும் இந்த ஆக்‌ஷன் பேக்ட் டீசர் புராஜெக்ட்டின் தரத்தை காட்டுகிறது. இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ...