ஒயிட் ஸ்கிரீன் புரொடக்ஷன் பட நிறுவனம் சார்பில் வி.ராஜா தயாரித்து, கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘அருவா சண்ட’.

கதையின் நாயகனான ராஜா கபடி விளையாட்டில் கில்லியாக உள்ளார் . அவரது அம்மா சரண்யாவுக்கும் தன் மகன் கபடிவிளையாட்டில் சாதனை படைக்கவேண்டும் என்று மிகவும் ஆசை. அதே ஊரில் இருக்கும் ஆடுகளம் நரேனின் மகள் மாளவிகா மேனன் கபடி பற்றி படம் எடுக்க முயற்சி செய்கிறார், கபடி வீரரான நாயகனும் , மாளவிகா மேனனும் காதல் வயப்படுகிறார்கள் ஆனால், இவர்களது காதலுக்கு சாதி தடையாக வருவதோடு ,நரேன் தன தங்கை மகனுக்கு நாயகியை திருமணம் செய்துவைக்க முடிவுசெய்கிறார்,இறுதியில் அவர்கள் காதல் வெற்றி அடைந்ததா? இல்லையா?, நாயகன் அம்மாவின் கனவு நிறைவேறியதா? இல்லையா? என்பதே ‘அருவா சண்ட’.படத்தின் மீதி கதை

படத்தை தயாரித்திருப்பதோடு, நாயகனாகவும் வி. ராஜா நடித்துள்ளார் கிராமத்து இளைஞனாக புதுமுகம் என்று தெரியாத அளவிற்கு யதார்த்தமாக நடித்திருக்கிறார் ,

நாயகியாக நடித்திருக்கும் மாளவிகா மேனன்,தான் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்திநை உணர்ந்து நடித்துள்ளார் ,நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் சரண்யா பொன்வண்ணன் வழக்கம் போல கிராமத்து அம்மாக்களை பிரதிபலிக்கும் கதாபாத்திரத்தில் நிறைவாக நடித்துள்ளார். மற்றும் நரேன் ,செளந்தர்ராஜா, காதல் சுகுமார், கஞ்சா கருப்பு என ஏனைய நடிகர்களும் தங்களுக்கு வழங்கப்பட்ட கதாபாத்திரங்களில் குறைவின்றி நடித்திருக்கிறார்கள்.
சந்தோஷ் பாண்டியனின் ஒளிப்பதிவும், கவிப்பேரரசு வைரமுத்து (சிட்டு சிட்டு குருவி), இயக்குனர் ஆதிராஜன்( வீர தமிழன் விளையாட்டு மற்றும் அம்மா பாடல் ) பாடல் வரிகளில், தரண்குமாரின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் இயக்குநர் ஆதிராஜனின் கதையோட்டத்துக்கு ஏற்ற பங்களிப்பை வழங்கியுள்ளன
வர்த்தகரீதியான அம்சங்களோடு பொழுதுபோக்குப்படமாக உருவாக்கிருந்தாலும் அதில் ஒரு மெசேஜூம் சொல்லி இந்த படத்தை இயக்குநர் ஆதிராஜன் யாவரும் ரசிக்கும் வண்ணம் நன்கு காட்சிப்படுத்தியுள்ளார் என்றே சொல்லலாம்.
