விடுதலை திரைப்பட விமர்சனம்
எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவனை அடிப்படையாக கொண்டு விடுதலை திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது, ஆர்.எஸ். இன்போடெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் எல்ராட் குமார் தயாரித்து உள்ள இப்படத்தை பிரபல இயக்குநர் வெற்றிமாறன் இயக்கி இருக்கிறார்.
வெளிநாட்டைச் சேர்ந்த சுரங்க நிறுவனத்துக்கு அருமபுரி மலையின் கனிம வளத்தை அழித்து தொழிற்சாலை அமைக்க அரசு ஒப்புதல் அளிக்கிறது. ஆனால் காடுகளில் உள்ள வளங்களை எடுக்க ‘மக்கள் படை’ என்ற அமைப்பு எதிர்ப்பு தெரிவிக்கிறது.அவர்களை பிடிக்க ’ஆபரேஷன் கோஸ்ட்’ என்ற திட்டம் கையில் எடுக்கப்படுகிறது. இதற்கிடையில் அந்த ஊருக்கு கடைநிலை காவலராக சூரி பணியில் சேர்கிறார் . அங்கு சூரிக்கும் மலைவாழ் பெண்மணியான பவானி ஸ்ரீ க்கும் காதல் ஏற்படுகிறது . அவர் அந்த ஊர் மக்களுக்கு உதவி செய்வதால் உயரதிகாரியாக உள்ள சேத்தனுடன் மோதல் ஏற்படுகிறது. இதன் பின் ராஜீவ் மேனனின் உத்தரவின் படி விசாரணை நடத்த டி...









