பத்து தலையில ஒத்த தலையாய் நடுவுல screen ல STR இருந்தாலும் . மத்த ஒன்பது தலைகளாக படத்துல நடிச்சவங்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் படத்த தாங்கி இருக்காங்க . .கன்னடத்தில் வெளிவந்த மஃப்ட்டி படத்தின் ரீமேக்காக இந்த பத்து தல இருந்தாலும்,அந்த படத்தின் பிரதிபலிப்பு இல்லாமல், முற்றிலும் வேறுபட்ட ஒரு திரைக்கதையுடன் முத்திரை பதித்துள்ள இயக்குனர் கிருஷ்ணாவுக்கு நிறைய பாராட்டுகளை கொடுக்கலாம் .

தற்போதைய C.M. திடீர்ன்னு காணாமல்போக. CBI . அவரை தேடுகிறார்கள், AGR ஒரு மணற்கொள்ளையன், ரவுடின்னு மக்கள் மனசுல நினைக்குறாங்க . தமிழ் நாடு அரசியல்,ஆட்சி அதிகாரம் யார் என முடிவு எடுக்கும் வல்லமை AGR கிட்ட தான் இருக்கு,அவர் கடலோர கன்னியாகுமரியில் கோலாச்சி செய்கிறார்.
Underground office ராக வேலை செய்யுற கௌதம் கார்த்தி, ஆந்திராவுல இருந்து கன்னியாகுமரி போறாரு . AGR Gangல சேர்றாரு. அவருக்கு நம்பிக்கையானவர்களையும் தாண்டி அவருடைய மனசுல இடம் பிடிக்குறாரு. அவருடைய சாம்ராஜ்யத்தை பார்த்து அசந்து போறாரு. வந்த இடத்துல தன்கூட காலேஜ்ல படிச்ச பவானி சங்கர பாக்குறாரு.

கன்னியாகுமரிக்கு பாராளுமன்ற இடைத்தேர்தல் வருது. தன் சார்பான ஒரு வேட்பாளரை நிறுத்தி AGRயை வீழ்த்தி மணற்கொள்ளை, அரசியல்,ஆட்சிஅதிகாரத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர துணை முதல்வராக இருக்குற கௌதம் வாசுதேவ்மேனன் நினைக்குறாரு. எப்படியாவது AGRக்கு எதிரான ஆதாரத்தை கண்டுபிடிச்சி அவர அரெஸ்ட் பண்ணன்னு வந்து இருக்குற கௌதம் கார்த்தி, இன்னொரு பக்கம் அவரையும், அவருடைய சாம்ராஜ்யத்தையும் அழிக்க நினைக்கும் கௌதம் வாசுதேவ்மேனன். முதல் பாதியில் வில்லனாக பார்க்க பட்ட அவர் பிறகு அதுக்கான காரணம் தெரியும் போது ,second halfல் மக்கள் மனசுல ஹீரோவாக மாறுகிறார்.ஆனா அவர எப்படியாவது ஆதாரத்துடன் கைது பண்ணனும்ன்னு நினைக்கிற CBI, தன் அதிகாரத்தை அவர அழிச்சி நினைக்குற கௌதம் வாசுதேவ்மேனன்.இறுதியில் முதல்வரை கடத்தியது யார்? அவரை கடத்துவதற்க்கு என்ன காரணம்? சிம்புவின் பின்புலம் என்ன? – இதுதான் மீதி திரைக்கதை.
பொதுவா first சீன் தான் ஹீரோ என்ட்ரிஆக இருக்கும். ஆனா இன்டெர்வெல் முன்னாடி சீன்லதான் STRயோட entry ஆக இருக்கறது, அது இந்த படத்துல ஒரு ஸ்பெஷல். AGR ராக STR புதிய பரிமாணத்தில் திரையில் தோன்றி தன் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறார், STR எப்பவும் படத்தின் முழு காட்சிலேயும் வருவார் ,ஆனா முதல் முறையாக அனைவருக்கும் காட்சிகளை பகிர்ந்து இருக்காரு . ஆனாலும் மொத்த கவனத்தையும் ஈர்த்து இருக்காரு .தன் தந்தை வழியில் தங்கை சென்டிமெண்டிலும் மனதில் இடம் பிடிக்கிறார்
STR க்கு பிறகு இந்த படத்தில் தன் முழு திறனை வெளிபடுத்தி திரையுலகில் புதிய அத்தியாயத்தை துவக்கி இருப்பவர் கெளதம் கார்த்திக். ஆக்ஷன் காட்சிகளில் தன்னுடைய தனிப்பட்ட பாணியில் சிறப்பாக நடித்துள்ளார். மேலும் ப்ரியா பவானி ஷங்கர் ,சிம்புவின் தங்கையாக நடித்துள்ள அனு சித்தாரா, அமீராக நடித்துள்ள கலையரசன், சந்தோஷ் பிரதாப், சென்ராயன்,மனுஷ்யபுத்திரன் ஆகிய அனைவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தின் தன்மைக்கேற்ப நன்கு நடித்துள்ளார்கள்.வில்லனாக வரும் கவுதம் மேனன் நடிப்பு பிரமாதமாய் உள்ளது .

கன்னட ‘மஃப்டி’யை தமிழ் சினிமாவுக்கும் STRன் ரசிகர்களுக்கும் ஏற்ற வகையில் ஓபிலி கிருஷ்ணா சிறப்பாக உருவாக்கியுள்ளார் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் பாடல்கள் மற்றும் பின்னணி இசையும் படத்தின் பிரம்மாண்ட வடிவுக்கு பெரிய பக்கபலமாய் உள்ளது, படத்தில் மண்ணஅள்ளுறவன் அம்மா மாற அறுத்தவனுக்கு சமம் .‘நல்லவனா இருக்க கெட்ட முகம் ஒண்ணு தேவப்படுது”, போன்ற வசன வார்த்தைகளின் வீச்சு மிக அதிகம்.
ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.இ.ஞானவேல்ராஜாவும், பென் ஸ்டுடியோஸ் சார்பில் ஜெயந்திலால் கடாவும் தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு ஃபரூக் ஜே பாஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரவீன் கே.எல் படத்தொகுப்பாளராகவும் மிலன் கலை இயக்குநராகவும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர்.
இந்த பத்து தல STR ரசிகர்கள் மட்டுமின்றி எல்லா தரப்பினரும் பார்த்து ரசிக்கும் வகையில் அமைந்துள்ளது.
