மனோஜ் பாஜ்பாய் நடிப்பில், ZEE5 தளத்தின் ஒரிஜினல் திரைப்படமான சிர்ஃப் ஏக் பண்டா காஃபி ஹை (Sirf Ek Bandaa Kaafi Hai) இன் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது !!
மனோஜ் பாஜ்பாய் நடிப்பில், ZEE5 தளத்தின் ஒரிஜினல் திரைப்படமான சிர்ஃப் ஏக் பண்டா காஃபி ஹை (Sirf Ek Bandaa Kaafi Hai) இன் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது !! வினோத் பானுஷாலி, Zee Studios மற்றும் சுபர்ன் S வர்மாவின் அதிரடியான கோர்ட் டிராமா மே 23 அன்று ZEE5 இல் திரையிடப்படவுள்ளது.
இந்தியாவின் முன்னணி OTT தளமான ZEE5, அதன் சமீபத்திய நேரடி-டிஜிட்டல் ஒரிஜினல் திரைப்படமான ‘சிர்ஃப் ஏக் பண்டா காஃபி ஹை’ இன் டிரெய்லரை வெளியிட்டுள்ளது. உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில், அபூர்வ் சிங் கார்க்கி இயக்கத்தில், கோர்ட் டிராமாவாக உருவாகியுள்ள ‘சிர்ஃப் ஏக் பந்தா காஃபி ஹை’, படத்தில் வழக்கறிஞராக மனோஜ் பாஜ்பாய், P.C சோலங்கி எனும் பாத்திரத்தில் நடித்துள்ளார். இது ஒரு சாதாரண மனிதனின் கதை - ஒரு உயர் நீதிமன்ற வழக்கறிஞர், நாட்டில் மிகப்பெரிய அந்தஸ்து கொண்ட மனிதனுக்கு எதிராக ஒரு அசாதாரண வழக்கில் தனியாகப் போராடுகிறா...









