போலீஸ் ஃபேமிலி- திரைவிமர்சனம்
லாக்கப் மரணங்களை பற்றி பேசும் கிரைம் திரில்லர் ஜானலில் உருவாகியுள்ள படம்.
காவல்துறையின் வாகன பரிசோதனையின் போது இருசக்கர வாகனத்தில் போதை பொருள் கொண்டு செல்லும் இளைஞனை காவல் நிலையத்திற்கு கொண்டு போய் முறைப்படி விசாரிக்கிறார்கள். அப்பொழுதுதான் விசாரணை வளையத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ள அந்த இளைஞன் பிரபல தாதா (பருத்தி வீரன் சரவணன் ) ஒருவரின் மகன் என்பது தெரிய வருகிறது.அதனை அறிந்த பிறகு காவல் அதிகாரிகள் மயக்க நிலையில் உள்ள அந்த இளைஞனை ஊருக்கு வெளியே விட்டு விட்டு வந்து விடுகிறார்கள். ஆனால் மறுநாள் அந்த இளைஞன் கொலை செய்யப்பட்டு கிடக்கிறான் .தன்மகனை காவல்துறையினர் தான் கொலை செய்து விட்டார்கள் என்று கருதும் தாதா அதற்கு காரணமான காவல் துறை அதிகாரியினரின் குடும்பத்தினரின் பழி தீர்க்க முடிவு செய்கிறார். இந்த நிலையில் உண்மையிலேயே அந்த இளைஞனை கொலை செய்தது யார்? எதற்காக அந்த இளைஞன் கொலை செய்யப்பட்டான...









