பழம்பெரும் பன்முக திரை வித்தகருக்கு பாராட்டு வழங்கிய பஞ்சு அருணாசலம் -80 விழா
மறைந்த தயாரிப்பாளர். இயக்குனர். பாடலாசிரியர் கதை வசன கர்த்தா என திரை துறையில் பன்முக வித்தகராய் முத்திரை பதித்த பஞ்சு அருணாச்சலம் அய்யா அவர்கள், ஆறிலிருந்து அறுபது வரை,கல்யாணராமன்,எங்கேயோ கேட்ட குரல்,ஆனந்த ராகம்,ஜப்பானில் கல்யாண ராமன், குரு சிஷ்யன் ,மைக்கேல் மதன காமராஜன், ராசுக்குட்டி ,வீரா உட்பட பல வெற்றிப்படங்களை தயாரித்தவர் மேலும் மணமகளே வா, புதுப்பாட்டு உட்பட பல படங்களை இயக்கியவர் அதோடு அன்று முதல் இன்று வரை பிரபலமான அன்னக்கிளி பட பாடல்கள் உட்பட பல புகழ் பெற்ற தமிழ் திரைப்பாடல்களை தந்தவர் என்பது குறிப்படத்தக்கது. அப்படிபட்ட என்றைக்கும் பசுமை மாறா படைப்புகளை தமிழ் திரைஉலகிற்க்கு தந்த பஞ்சு அருணாச்சலம் அய்யா அவர்களின் திரைத்துறையின் 80ஆண்டு கால சாதனையை கெளரவிக்கும் வகையில் BLACKSHEEP Organaization & P.A.ART PRODUCTIONS பஞ்சுவின் மகன் பஞ்சு சுப்புவும் இணைந்து நடத்திய பஞ்சு அருணாசலம்...









