Friday, December 6

பழம்பெரும் பன்முக திரை வித்தகருக்கு பாராட்டு வழங்கிய பஞ்சு அருணாசலம் -80 விழா

மறைந்த தயாரிப்பாளர். இயக்குனர். பாடலாசிரியர் கதை வசன கர்த்தா என திரை துறையில் பன்முக வித்தகராய் முத்திரை பதித்த  பஞ்சு அருணாச்சலம் அய்யா  அவர்கள், ஆறிலிருந்து அறுபது வரை,கல்யாணராமன்,எங்கேயோ கேட்ட குரல்,ஆனந்த ராகம்,ஜப்பானில் கல்யாண ராமன், குரு சிஷ்யன் ,மைக்கேல் மதன காமராஜன், ராசுக்குட்டி ,வீரா உட்பட பல வெற்றிப்படங்களை தயாரித்தவர் மேலும் மணமகளே வா, புதுப்பாட்டு உட்பட பல படங்களை இயக்கியவர் அதோடு அன்று முதல் இன்று வரை பிரபலமான அன்னக்கிளி பட பாடல்கள் உட்பட பல புகழ் பெற்ற தமிழ் திரைப்பாடல்களை தந்தவர் என்பது குறிப்படத்தக்கது. அப்படிபட்ட என்றைக்கும் பசுமை மாறா படைப்புகளை தமிழ் திரைஉலகிற்க்கு தந்த பஞ்சு அருணாச்சலம் அய்யா அவர்களின் திரைத்துறையின் 80ஆண்டு கால சாதனையை கெளரவிக்கும் வகையில் BLACKSHEEP Organaization & P.A.ART PRODUCTIONS பஞ்சுவின் மகன் பஞ்சு சுப்புவும் இணைந்து நடத்திய பஞ்சு அருணாசலம் 80-வது ஆண்டு விழாவில் இயக்குனர்கள் பாரதிராஜா, R. K செல்வமணி தயாரிப்பாளர்கள் Kalaipuli S தாணு ,சத்யஜோதி தியாகராஜன், T. சிவா மற்றும் திரையுலக பிரபலங்கள் பூச்சி முருகன், கங்கைஅமரன்,மதுரை அன்பு,தனஞ்செயன் ,ரவி கொட்டாராகரா,பன்னீர் செல்வம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

இந்த விழாவில் கலந்துகொண்ட இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்கள் ,பேசும்போது பஞ்சு அவர்கள் தன் பெயருக்கு ஏற்ற வகையில் மென்மையான மனிதர் என்று குறிப்பிட்டுள்ளார் மேலும் கங்கைஅமரன் அவர்கள் பேசும் போது தான் ,இளையராஜா மற்றும் அவர்களது குடும்பத்தார்கள் திரைத்துறைக்கு வர பிள்ளையார் சுழி போட்டவர் பஞ்சு அவர்கள் என்று கூறினார் திரு பூச்சி முருகன் அவர்கள் பேசும்போது பஞ்சு அவர்களின் பாடல்களை பற்றி குறிப்பிட்டு பேசுகையில் இன்றைக்கும் திருமணவீடுகளில் ஒலிக்கும் மணமகளே வா பாடல், பஞ்சு அவர்கள் எழுதிய பாடல் என்று புகழ்ந்து பேசினார், .BLACKSHEEP-You Tube Channel வழங்கும் ‘ PRESS GREET ‘ பஞ்சு அருணாசலம் -80 விழாவில் பல ஆண்டுகளாக ஊடகத்துறையில் சினிமா பற்றிய செய்திகளை தங்களது எழுத்துக்களால் ஏராளமான மக்களுக்கு கொண்டு சேர்த்து, தங்களது கலைப்பயணத்தை தொடர்ந்து சிறப்பித்து வரும் மூத்த பத்திரிகையாளர்கள் திரு தேவி மணி ‘ கயல் ‘ தேவராஜ் , தினகரன் ஜெயச்சந்திரன்,கலைப்பூங்கா ராவணன்,ஆகியோர் கெளரவப்படுத்தப்பட்டார்கள்

தமிழ் சினிமாவில் பலருக்கும் முகவரி தந்த அந்த கலைவித்தகரின் புகழ், தமிழ் சினிமாவின் கானங்களிலும், கலைப்படைப்புகளிலும் என்றைக்கும் நிலைத்து நிற்க்கும்.

Spread the love