Saturday, April 25

Author: admin

பெரும் பட்ஜெட்டில் உருவாகியுள்ள பிரம்மாஸ்திரா பாகம் 1 முதல் பாகம்  5 இந்திய மொழிகளில் 09.09.2022 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

பெரும் பட்ஜெட்டில் உருவாகியுள்ள பிரம்மாஸ்திரா பாகம் 1 முதல் பாகம் 5 இந்திய மொழிகளில் 09.09.2022 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

சினிமா
Fox Star Studios, Dharma Productions, Prime Focus மற்றும் Starlight Pictures இணைந்து வழங்க, அயன் முகர்ஜி இயக்கத்தில் ரன்பீர் கபூர், ஆலியா பட், அமிதாப் பச்சன், நாகார்ஜுனா முக்கிய பாத்திரங்களில் நடிப்பில் இந்தியாவின் பிரமாண்ட படைப்பாக பெரும் பட்ஜெட்டில் உருவாகியுள்ள திரைப்படம் பிரம்மாஸ்திரா பாகம் 1. மூன்று பாகங்களாக உருவாகும் இப்படத்தின் முதல் பாகம் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய 5 இந்திய மொழிகளில் 09.09.2022 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தினை தென்னிந்திய மொழிகளில் பிரபல இயக்குநர் ராஜமௌலி வெளியிடுகிறார். படத்தின் வெளியீட்டை ஒட்டி நடிகர் ரன்பீர்கபூர், நாகர்ஜூனா, ராஜமௌலி ஆகியோர் சென்னையில் பிரமாண்ட விழாவில் பத்திரிக்கை ஊடக நண்பர்களை சந்தித்தனர்.ரன்பீர் கபூர் கூறியதாவது.., பிரமாஸ்திரம் திரைப்படத்தை உங்கள் முன் எடுத்து வருவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். க...
கோவை ஜிஆர்டி கல்லூரியில் சீயான் விக்ரமின் ‘கோப்ரா’ கொண்டாட்டம்

கோவை ஜிஆர்டி கல்லூரியில் சீயான் விக்ரமின் ‘கோப்ரா’ கொண்டாட்டம்

சினிமா
‘கோப்ரா’ சயின்ஸ் ஃபிக்சன் திரைப்படம்= சீயான் விக்ரம் திருச்சி, மதுரையைத் தொடர்ந்து கோவை ஜிஆர்டி கல்லூரி வளாகத்திலும், கோவை மாநகரின் நவீன அடையாளமான ப்ரோஸோன் வணிக வளாகத்திலும் சீயான் விக்ரமின் ‘கோப்ரா’ கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட சீயான் விக்ரம்,“கோப்ரா திரைப்படம், சைக்கலாஜிக்கல் திரில்லர், எமோஷனல் டிராமா, சயின்ஸ் ஃபிக்சன், ஹை ஆக்டேன் ஆக்சன் ஃபிலிம் என எல்லாம் கலந்த மாஸ் எண்டர்டெய்னர் திரைப்படம்’ என தெரிவித்தார். இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சீயான் விக்ரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் கோப்ரா. செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ் லலித்குமார் தயாரித்திருக்கும் இந்த திரைப்படம் ஆகஸ்ட் 31 ஆம் தேதி முதல் வெளியாகிறது. தமிழகமெங்கும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடும் இந்த திரைப்படத்தை மேலும் பிரபலப்படுத்துவதற்காக சீயான் விக்...
“சூர்யா 42” இன்று சென்னையில் இனிதே துவங்கியது !!!

“சூர்யா 42” இன்று சென்னையில் இனிதே துவங்கியது !!!

சினிமா
Studio Green K.E. ஞானவேல் ராஜா உடன்  UV Creations வம்சி-பிரமோத் இணைந்து வழங்கும் , 'சிறுத்தை' சிவா இயக்கத்தில்,  நடிகர் சூர்யா நடிக்கும்  பிரமாண்ட படைப்பான "சூர்யா 42"படத்தின் படப்பிடிப்பு இன்று  lavish hotel செட் அமைக்கப்பட்டு, அங்கு  பூஜையுடன்  இனிதே துவங்கியது!! நடிகர் சூர்யாவின் புதிய திரைப்படத்திற்கு தற்காலிகமாக ‘சூர்யா 42’ என்று பெயரிடப்பட்டுள்ளது, இயக்குநர் சிவா இயக்கும் இப்படத்தினை Studio Green K.E. ஞானவேல் ராஜா உடன்  UV Creations  வம்சி-பிரமோத் தயாரிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு எளிமையான பூஜையுடன்  இனிதே துவங்கியது. நடிகர் சூர்யா நடிப்பில் 'சூரரைப் போற்று, ஜெய் பீம்' & 'எதற்கும் துணிந்தவன்' உட்பட சமீபத்தில் வெளியாகிய அனைத்து திரைப்படங்களும் பிரமாண்ட வெற்றியை பெற்றுள்ளது மகத்தான தொடர் வெற்றிகளின்  மூலம் 'ஸ்டார்' மற்றும் 'நடிகர்' ஆகிய இரு களங்களிலும் தன்னை நிலைநிறு...
மதுரையில் சீயான் விக்ரமின் “கோப்ரா” குழுவின் கொண்டாட்டம்

மதுரையில் சீயான் விக்ரமின் “கோப்ரா” குழுவின் கொண்டாட்டம்

சினிமா
‘சீயான்’ விக்ரம் நடிப்பில் Seven Screen Studio சார்பில் S லலித்குமார் தயாரிப்பில் இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள திரைப்படம் ‘கோப்ரா’. சயின்ஸ்பிக்சன் கதையில் பிரமாண்டமான படைப்பாக உருவாகியுள்ள இப்படம் ஆகஸ்ட் 31 உலகமெங்கும் திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறது. ரெட் ஜெயண்ட் மூவிஸ் தமிழகமெங்கும் இப்படத்தை வெளியிடுகிறது. இப்படத்தின் வெளியீட்டை ஒட்டி படக்குழுவினர் இன்று மதுரை அமெரிக்கன் கல்லூரியில் ரசிகர்களை சந்தித்தனர். கோலகலமாக ரசிக்ரகளின் ஆராவராத்துடன் இச்சந்திப்பு இனிதே நடந்தேறியது. இவ்விழாவினில் நடிகை மீனாட்சி பேசியதாவது… இப்படத்தில் நான் ஒரு பாத்திரத்தில் நடித்துள்ளேன். இந்தப்படத்தின் புரமோசனை இன்று தான் துவங்கினோம். மதுரையில் உங்களுடன் அதை துவங்கியது மிகுந்த மகிழ்ச்சி. ஆகஸ்ட் 31 உலகமெங்கும் திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறது விக்ரம் சாருக்காக எல்லோரும் படம் பார்ப்பீர்கள் ...
பிரபல நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் நாயகனாகும் புதிய திரைப்படம் “யதா ராஜா ததா ப்ரஜா” இனிதே ஆரம்பமானது !!

பிரபல நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் நாயகனாகும் புதிய திரைப்படம் “யதா ராஜா ததா ப்ரஜா” இனிதே ஆரம்பமானது !!

சினிமா
'சினிமா பண்டி' புகழ் விகாஸ் மற்றொரு நாயகனாகவும், ஸ்ரஸ்டி வர்மா கதாநாயகியாகவும் நடிக்கும் இந்தப் படத்தை ஸ்ரீனிவாஸ் விட்டலா இயக்குகிறார். Om Movie Creations & Sri Krishna Movie Creations பேனர்களின் கீழ் ஸ்ரீனிவாஸ் விட்டலா மற்றும் ஹரேஷ் படேல் இந்த திரைப்படத்தை தயாரிக்கின்றனர். ஹீரோ ஷர்வானந்த் கிளாப் அடிக்க, சல்மான் கானின் மருமகன் ஆயுஷ் ஷர்மா ஒளிப்பதிவு செய்ய, இயக்குனர் கருணாகுமார் முதல் காட்சியை இயக்கினார். இந்த விழாவில் இயக்குநர் - தயாரிப்பாளர் ஸ்ரீனிவாஸ் விட்டலா பேசுகையில், "கதை, திரைக்கதை, வசனம் எழுதுவது மட்டுமின்றி, ஹரேஷ் படேலுடன் இணைந்து இந்தப் படத்தை நான் தயாரிக்கிறேன். கதையை முடித்த பிறகு ஒரு முக்கிய கதாபாத்திரத்தைத் தேடும் முயற்சியில் இருந்தோம், அந்த நேரத்தில் ஜானி மாஸ்டருடன் பழகினேன். மாஸ்டர் அவருக்கென ஸ்கிரிப்ட்களைக் கேட்டுக் கொண்டிருந்தார். 20 நிமிடங்களில் நான் சொன்ன ...
இயக்குநர் தருண் பாஸ்கர் தாஸ்யம், விஜி சைன்மா கூட்டணியின் பான்-இந்திய திரைப்படமான ‘கீடா கோலா’ பிரமாண்ட பூஜையுடன் துவங்கியது.

இயக்குநர் தருண் பாஸ்கர் தாஸ்யம், விஜி சைன்மா கூட்டணியின் பான்-இந்திய திரைப்படமான ‘கீடா கோலா’ பிரமாண்ட பூஜையுடன் துவங்கியது.

சினிமா
கோலாகலமாக துவங்கிய ’பெல்லி சூப்புலு’ இயக்குநரின் புதிய க்ரைம் த்ரில்லர் இளம் மற்றும் திறமையான இயக்குனர் தருண் பாஸ்கர் தாஸ்யம் இயக்கிய ’பெல்லிசூப்புலு’ மற்றும் ’ஈ நாகராணி ஏமைந்தி’ ஆகிய இரண்டுபடங்களும் தடபுடல் வெற்றியைப் பெற்றன.இவ்விரு படங்களையும் விமர்சகர்கள் தலையில் தூக்கி வைத்துக்கொண்டாடிய நிலையில் பாக்ஸ் ஆபிஸ் வசூலும் குவிந்தது. அவ்வகையான யூத் ஃபுல் என்டர்டெய்னர் படங்களை எடுப்பதில் கில்லாடி என்று பெயர் எடுத்த இயக்குநர் தருண் பாஸ்கர் தாஸ்யம், இம்முறை தனது டிராக்கை மாற்றிக்கொண்டு புதிய க்ரைம் காமெடி படமான ‘கீதா கோலா’வை பார்வையாளர்களுக்குக் கொண்டு வரவிருக்கிறார். விஜி சைன்மா பேனரில் புரொடக்ஷன் நம்பர் 1 ஆக வெளிவரவிருக்கும் இந்தப் படத்தின் துவக்க விழா இன்று செவ்வாயன்று நடைபெற்றது. இந்த துவக்க விழாவில் தயாரிப்பாளர் சுரேஷ் பாபு, ஹீரோக்கள் சித்தார்த், தேஜா சஜ்ஜா, நந்து மற்றும் பல இ...
திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் நடந்த ’கோப்ரா’ திரைப்பட ரசிகர்கள் சந்திப்பு விழா !

திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் நடந்த ’கோப்ரா’ திரைப்பட ரசிகர்கள் சந்திப்பு விழா !

சினிமா
செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ சார்பில் லலித்குமார் தயாரிப்பில் ‘சீயான்’ விக்ரம் கதையின் நாயகனாக நடிக்க இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள படம் ‘கோப்ரா’. இயக்குநர் கே. எஸ். ரவிக்குமார், ஆனந்த்ராஜ், ரோபோ சங்கர், நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி, மீனாட்சி கோவிந்தராஜன், மிருணாளினி ரவி, நடிகர் ரோஷன் மேத்யூ, கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் ஆகியோர் இப்படத்தில் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் ‘இசைப்புயல்’ ஏ. ஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஆகஸ்ட் 31 உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் இப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் வெளியிடுகிறது.இப்படத்தின் முன்வெளியீட்டை ஒட்டி படக்குழுவினர் திருச்சி செண்ட்ஜோசப் கல்லூரியில் ரசிகர்களுடன் கலந்துரையாடினர். இவ்விழாவினில் நடிகை மீனாட்சி பேசியதாவது… விக்ரம் சார் பொறுத்தவரை ஒவ்வொரு படத்திலும் அவரது முழு உழைப்பை தரு...
அதிரடி மாஸ் வில்லனாக நடிகர் விஷ்,  “லைகர்”  மூலம் ரசிகர்களை மகிழ்விக்க இந்த வாரம் வெள்ளித்திரையில் வருகிறார்.!!!

அதிரடி மாஸ் வில்லனாக நடிகர் விஷ்,  “லைகர்”  மூலம் ரசிகர்களை மகிழ்விக்க இந்த வாரம் வெள்ளித்திரையில் வருகிறார்.!!!

சினிமா
திரையில் கண்டிராத அதிரடி மாஸ் வில்லனாக நடிகர் விஷ்,  “லைகர்”  மூலம் ரசிகர்களை மகிழ்விக்க இந்த வாரம் வெள்ளித்திரையில் வருகிறார்.!!! இந்த வாரம் எல்லோருக்கும், கடந்து போகும் சாதாரணமான வாரமாக இருக்கலாம், ஆனால் திரை ஆர்வலர்களுக்கும் லைகர் குழுவிற்கும் இது அப்படியானதல்ல. இந்த ஆண்டின் மிக முக்கியமான வாரம். ஆம் இந்த வாரம் இந்தியாவின் மிக முக்கிய படைப்பான லைகர் வெள்ளித்திரையில் வெளியாகிறது. இந்தியா முழுதும் இதயங்களை கொள்ளை கொண்டிருக்கும் நாயகன் விஜய் தேவரகொண்டாவின் படம் என்பது மட்டுமல்ல, இந்தப்படம் மூலம் இதுவரை திரையில் கண்டிராத அதிரடியான மாஸ்  வில்லனாக நடிகர் விஷ் வெள்ளித்திரையை கலக்கவுள்ளார். 12 வருட போராட்டங்களுக்கு பிறகு நடிகனாக இந்த இடத்தை அடைவது நடிகர் விஷ் அவர்களுக்கு அத்தனை எளிதானதாக இல்லை. மாடலாக துவங்கி, துணை இயக்குநராக வேலை பார்த்து  Puri Connects எனும் பெருமை மிகு நிறுவனத்...
‘தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் : தி ரிங்ஸ் ஆஃப் பவர்’ தொடரின் பிரத்யேக காட்சிக்காக ஒன்றுதிரண்ட பாலிவுட் நட்சத்திரங்கள்

‘தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் : தி ரிங்ஸ் ஆஃப் பவர்’ தொடரின் பிரத்யேக காட்சிக்காக ஒன்றுதிரண்ட பாலிவுட் நட்சத்திரங்கள்

சினிமா
‘தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்: தி ரிங்ஸ் ஆஃப் பவர்’ தொடரின் ஆசிய பசிபிக் பிராந்திய பிரீமியர் மும்பையில் நடைபெற்றது. இதில் பார்வையாளர்களுடன் பாலிவுட் திரையுலகின் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். ‘தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்: தி ரிங்ஸ் ஆஃப் பவர்’ தொடரின் பிரத்யேக காட்சிக்கு முன்னர் நடைபெற்ற சிவப்பு கம்பள வரவேற்பில் பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்கள் ஹிருத்திக் ரோஷன், தமன்னா, கபீர் கான், நிகில் அத்வானி உள்ளிட்ட பலர், தொடரின் தயாரிப்பாளரான ஜே டி பெயின் உடன் கலந்து கொண்டு அனைவரது கவனத்தையும் கவர்ந்தனர். ‘த லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்: ரிங்ஸ் ஆஃப் பவர்’ அமேசான் ப்ரைம் வீடியோவில் செப்டம்பர் இரண்டாம் தேதி இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய இந்திய மொழிகளுடன், ஆங்கிலம் உள்ளிட்ட பல சர்வதேச மொழிகளிலும் வெளியாகிறது. உலகளாவிய பார்வையாளர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் சாகசமும், க...
குணச்சித்திர நடிகை ‘பருத்திவீரன் ‘ சுஜாதாவுக்கு ‘மினி ஆச்சி’ என்ற பட்டம் சென்னையில் நடந்த விழாவில் வழங்கப்பட்டுள்ளது.

குணச்சித்திர நடிகை ‘பருத்திவீரன் ‘ சுஜாதாவுக்கு ‘மினி ஆச்சி’ என்ற பட்டம் சென்னையில் நடந்த விழாவில் வழங்கப்பட்டுள்ளது.

சினிமா
மினி ஆச்சி ஆன 'பருத்திவீரன் 'சுஜாதா! குணச்சித்திர நடிகை 'பருத்திவீரன் ' சுஜாதாவுக்கு 'மினி ஆச்சி' என்ற பட்டம் சென்னையில் நடந்த விழாவில் வழங்கப்பட்டுள்ளது. கமல் இயக்கிய ' விருமாண்டி' படத்தின் மூலம் குணச்சித்திர நடிகையாக அறிமுகமான சுஜாதா அதன்பிறகு வந்த 'பருத்திவீரன்' படத்தின் மூலம் பரவலான அடையாளத்தைப் பெற்று, 'பருத்தி வீரன்' சுஜாதா என்று அழைக்கப்படும் அளவிற்குப் புகழ் பெற்றார். அதற்குப் பிறகு ஏறக்குறைய அனைத்து கதாநாயகர்களின் படங்களிலும் நடித்து 90-வது படத்தைக் கடந்து 100 -ஐ நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார் சுஜாதா.இவர் நடித்து அண்மையில் வெளிவந்துள்ள படம் 'ஆனந்தம் விளையாடும் வீடு'. இப்போது  'கோலிசோடா 1.5 ' மற்றும் பெயரிடப்படாத புதிய ஐந்து படங்களிலும் நடித்து வருகிறார். இவருக்கு அண்மையில் தமிழ்நாடு நவ் என்ற அமைப்பு கோல்டன் கார்பெட் அவார்டு என்ற விருதை அளித்தது. இதற்கான விழாவில்...