Saturday, April 25

Author: admin

 யுவன் ஷங்கர் ராஜா – உலகம் சுற்றும் இசை மேதை

 யுவன் ஷங்கர் ராஜா – உலகம் சுற்றும் இசை மேதை

சினிமா
யுவன் ஷங்கர் ராஜா மீதும் அவரது இசையின் மீதும் ரசிகர்கள் கொண்டுள்ள அன்பிற்கு எல்லையே இல்லை. மலேசியாவில் நடைபெற்ற அவரது இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகள் முன்பதிவு தொடங்கிய 45 நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்ததே இதற்கு சான்று. மலேசியாவில் இதுபோன்ற ஒரு சாதனை நடப்பது இதுவே முதல் முறை. அது மட்டுமின்றி, மலேசியாவில் தொடர்ந்து இரண்டு நாட்கள் இசை நிகழ்ச்சி நடத்திய ஒரே கலைஞர் யுவன் மட்டும் தான். யுவன் மீது ரசிகர்கள் வைத்திருக்கும் பேரன்பை இது காட்டுகிறது. இந்த உற்சாகம் மற்றும் வரவேற்பை பார்த்து, உலகம் முழுவதும் குறைந்தது ஏழு இசை நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு லிட்டில் மேஸ்ட்ரோ அணுகப்பட்டுள்ளார். திரையுலகில் யுவன் 25 ஆண்டுகள் நிறைவு செய்ததைக் கொண்டாடும் வகையில் இந்த இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. யுவன்-25 என்று பெயரிடப்பட்ட இந்த நிகழ்வு கோலாலம்பூரில் உள்ள ஆக்சியாட்டா அரங்க வளாகத்தில் நடத்தப்பட்டது. ...
திரைப்பட இயக்குநர் கவிஞர் ராசி.அழகப்பன் அவர்களின் “தாய்மண்ணின் ஈரம்” (MOISTURE OF MOTHERLAND) என்ற ஆங்கிலக் கவிதை நூல் வெளியிடப்பட்டது.

திரைப்பட இயக்குநர் கவிஞர் ராசி.அழகப்பன் அவர்களின் “தாய்மண்ணின் ஈரம்” (MOISTURE OF MOTHERLAND) என்ற ஆங்கிலக் கவிதை நூல் வெளியிடப்பட்டது.

இலக்கியம், சினிமா
புதுச்சேரி, நேருவீதி இந்தியன் குளம்பியகத்தில் தமிழக அரசு விருதுபெற்ற திரைப்பட இயக்குநர் கவிஞர் ராசி.அழகப்பன் அவர்களின் "தாய்மண்ணின் ஈரம்" (MOISTURE OF MOTHERLAND) என்ற ஆங்கிலக் கவிதை நூல் வெளியிடப்பட்டது. தாகூர் கலைக் கல்லூரி மேனாள் முதல்வர் பேராசிரியர் நா.இளங்கோ அவர்கள் நூலினை வெளியிட புதுச்சேரிக் காவல்துறைக் கண்காணிப்பாளர் வீர.பாலகிருஷ்ணன் முதல் நூலினைப் பெற்றுக் கொண்டார். விழாவின் வரவேற்புரையினை தமிழாசிரியர் சின்ன.சேகரும் நன்றியுரையினை பாவலர் குமாரவேறு அவர்களும் வழங்கினார்கள். பொறிஞர் இரா.தேவதாசு நூல் அறிமுகவுரை ஆற்றினார். பாவலர் தமிழ்நெஞ்சன், பாவலர் சொற்கோ ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நூலாசிரியர் ராசி.அழகப்பன் ஏற்புரை வழங்கினார். நூல் வெளியீட்டில் ஓய்வு பெற்ற தொழிற்சங்க செயலர் புகழேந்தி , கவிஞர் ஞானமோகன் ஆகியோரும் பங்கேற்று சிறப்பித்தனர்...
 ‘என் சென்னை யங் சென்னை’ விருதுகள்! சிறந்த இயக்குநர் சமுத்திரக்கனி… சிறந்த நடிகர் வசந்த் ரவி!

 ‘என் சென்னை யங் சென்னை’ விருதுகள்! சிறந்த இயக்குநர் சமுத்திரக்கனி… சிறந்த நடிகர் வசந்த் ரவி!

சினிமா
‘என் சென்னை யங் சென்னை’ 2022 விருதுகள் அறிவிப்பு Earth & Air மற்றும் The Idea Factory அமைப்புகள் ‘என் சென்னை யங் சென்னை’ என்கிற பெயரில் அறியப்படாத சாதனையாளர்களுக்கு ஆண்டுதோறும் விருதுகள் வழங்கி கவுரவித்து வருகிறது. அந்த வகையில் இந்தாண்டு முதல், சமூகப் பணி விருதுகளோடு, திரையுலகைச் சேர்ந்தவர்களுக்கும் பொழுதுபோக்குப் பிரிவில் இந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. ‘என் சென்னை யங் சென்னை’ விருதுகளுக்காக 13 படங்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டன. இவை பல்வேறு விருது குழுவினரால் அவ்வளவாகக் கண்டுகொள்ளப்படாத படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டின் ‘என் சென்னை யங் சென்னை’ விருது வழங்கும் விழா நிகழ்ச்சி சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தொழிலதிபர் நல்லி குப்புசாமி, ட்ரீம் தமிழ்நாடு ...
வெள்ளித்திரையில் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு விக்ரமின் கோப்ரா  வெளியாகிறது

வெள்ளித்திரையில் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு விக்ரமின் கோப்ரா வெளியாகிறது

சினிமா
ரசிகர்களின் அன்பை அளவிட முடியாது - சீயான் விக்ரம் உருக்கம் இந்திய திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் சீயான் விக்ரம் நடிக்கும் ‘கோப்ரா’ படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டது. இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் தயாராகி, ஆகஸ்ட் 31 ஆம் தேதியன்று வெளியாகவிருக்கும் திரைப்படம் சீயான் விக்ரமின் ‘கோப்ரா’. இந்த படத்தில் சீயான் விக்ரமுக்கு ஜோடியாக ‘கே ஜி எஃப்’ படப்புகழ் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். இவர்களுடன் ஏராளமான முன்னணி நட்சத்திர பட்டாளங்களும் நடித்திருக்கிறார்கள். ‘இசைப்புயல்’ ஏ ஆ ரஹ்மான் இசையமைத்திருக்கும் இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ பட நிறுவனத்தின் சார்பில் பிரபல தயாரிப்பாளர் எஸ். எஸ். லலித்குமார் தயாரித்திருக்கிறார். இந்த படத்தை தமிழகம் முழுவதும் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடுகிறது. ‘கோப்ரா’ படத்தின் பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்...
‘இறைவி’ விற்பனையகம் ஐந்தாம் ஆண்டு விழா

‘இறைவி’ விற்பனையகம் ஐந்தாம் ஆண்டு விழா

செய்திகள்
வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்திச் செய்ய நாள்தோறும் நல்ல விசயங்களைத் தேடித் தேடிக் கற்கிறோம்- ‘இறைவி’ விற்பனையக நிறுவனர் ஜெயஸ்ரீ ராஜேஷ் சென்னை மாநகர மக்களுக்கு மட்டுமல்லாமல், புறநகரில் இருக்கும் பெண்மணிகளுக்கு, அவர்களின் அனைத்து வகையான சுப வைபவங்களுக்குரிய ஆடை அணிகலன் தேவைகளை, மனதிற்கு நிறைவாக பூர்த்தி செய்து வரும் விற்பனையகங்களில் சென்னை வேளச்சேரி பிரதான சாலை, செம்பாக்கம் பகுதியில் இயங்கி வரும் ‘இறைவி’ எனும் விற்பனையகமும் ஒன்று. தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதியின் உடன்பிறந்த சகோதரி திருமதி ஜெயஸ்ரீ ராஜேஷின் நிர்வாகத்தின் கீழ் இயங்கி வரும் 'இறைவி' விற்பனையகம் ஐந்தாண்டுகளை பூர்த்தி செய்திருக்கிறது. இதனை கொண்டாடும் வகையில் இந்நிறுவன வளாகத்தில் பிரம்மாண்டமான விழா ஒன்று நடைபெற்றது. இந்த விழாவில் தொழிலதிபர் பத்மஸ்ரீ நல்லி குப்புசாமி செட்டியார் சி...
கணம் படம் அனைவரையும் திருப்திபடுத்தும் படமாக இருக்கும் – டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு

கணம் படம் அனைவரையும் திருப்திபடுத்தும் படமாக இருக்கும் – டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு

சினிமா
வாழ்க்கையில் ஒவ்வொரு 'கணமும்' நமக்கு முக்கியம் என்பதைக் கூறும் படம். டைம் டிராவல் மற்றும் அம்மா சென்டிமெண்ட் இருக்கிறது. பசங்களுக்கான விஷயங்கள் நிறைய இருக்கிறது. அறிவியல் புனைகதை (Science Fiction) படம் மட்டுமல்ல, அனைத்து விஷயங்களும் இருக்கும். குழந்தைகள் முதல் அனைவருக்குமான படமாக இருக்கும். இப்படத்தின் கதையை கேட்கும்போதே இப்படத்திற்கு செலவுகளும், வேலைகளும் அதிகமாக ஆகும் என்று தோன்றியது. ஆகையால், அதற்கு தகுந்த குழு வேண்டும் என்று நினைத்தோம். மாயா படத்தில் ஆரம்பித்து ஒவ்வொரு கதையையும் ஷரவானந்துக்கு அனுப்பிக் கொண்டே இருப்பேன். கடைசியில் இக்கதையில் நடிக்க ஒப்புக் கொண்டார். இப்படத்தின் தெலுங்கு மொழி பெயர் ‘ஒக்கே ஒக்கா ஜீவிதம்’ (ஒரே ஒரு வாழ்க்கை). மூன்று கதாநாயகர்களுக்குமே மூன்று விதமாக உணர்வுகள் இருக்கின்றது. நமது ஒவ்வொருவரின் வாழ்க்கையில் இரண்டாவது வாய்ப்பு கிடைத்தால் என்ன செய்வோம்? ...
ம.பொ.சி. அவர்களின் படமல்ல ஆனால், அவரைப் போற்றக்கூடிய படமாக இருக்கும் – இயக்குனர் போஸ் வெங்கட்

ம.பொ.சி. அவர்களின் படமல்ல ஆனால், அவரைப் போற்றக்கூடிய படமாக இருக்கும் – இயக்குனர் போஸ் வெங்கட்

சினிமா, செய்திகள்
ஒரு படத்தை பார்க்கத் தூண்டுவது அதன் தலைப்பு தான் என்பதை எனது முதல் படத்தில் உணர்ந்தேன் – இயக்குனர் போஸ் வெங்கட் இயக்குனர் போஸ் வெங்கட் பேசும்போது, பெரும்பாலும் ஒரு திரைப்படத்தின் பூஜை சென்னையில் தான் நடைபெறும். ஆனால், அறந்தாங்கி என்னுடைய பிறந்த இடம், இங்கு பூஜை நடைபெற்றதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். எனது சிறுவயது கனவு நிறைவேறியதற்கு சட்டத்துறை அமைச்சர் மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் இருவருக்கும் நன்றி.. அடுத்து, என் கதையைக் கேட்டு ஒப்புக் கொண்ட என்னுடைய கதாநாயகன், என்னுடைய மாப்பிள்ளை விமலுக்கு நன்றி.கன்னிமாடத்தில் என்னுடன் பணியாற்றிய கதாநாயகி சாயா தேவி இப்படத்தில் நடிக்கிறார்.பருத்தி வீரன் படத்தில் ஒரு கலக்கு கலக்கி தமிழ்நாட்டையேத் திரும்பி பார்க்க வைத்த அன்பு சகோதரர் சரவணன் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகவுள்ளார். சிறுவயதாக இருந்தாலும் இந்த ...
கேப்டன் திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!!

கேப்டன் திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!!

சினிமா
கேப்டன் திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!! Think Studios நிறுவனம் The Show People நிறுவனத்துடன் இணைந்து வழங்கும்* இயக்குநர் சக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடித்திருக்கும் சயின்ஸ் பிக்சன் திரில்லர் திரைப்படம் கேப்டன். டெடி படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு ஆர்யா சக்தி சௌந்தர் ராஜன் கூட்டணியில் இப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வரும் செப்டம்பர் 8 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் இப்படம் வெளியாகவுள்ள நிலையில் இப்படதின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று கோலகலமாக அரங்கேறியது. இவ்விழாவினில் திரையுலக பிரபலங்கள் பலருடன் படக்குழுவினர் கலந்துகொண்டனர். இவ்விழாவினில் ஒளிப்பதிவாளர் யுவா கூறியதாவது.., இயக்குனர் சக்தி எப்பொழுதும் ஒரு புதுவித ஐடியாவுடன் தான் வருவார். அவரின் கற்பனை பிரமிப்பாக இருக்கும். ரசிகர்களுக்கு பிரமிப்பை தரும...
நானி, ஶ்ரீகாந்த் ஒதெலா, SLVC உடைய புதுமையான படைப்பான “தசரா” திரைப்படம் 2023 மார்ச் 30 உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது !!!

நானி, ஶ்ரீகாந்த் ஒதெலா, SLVC உடைய புதுமையான படைப்பான “தசரா” திரைப்படம் 2023 மார்ச் 30 உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது !!!

சினிமா
  தொடர் வெற்றிப்படங்களை தந்து வரும், நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில், முதல் பான் இந்திய திரைப்படமாக உருவாகிறது ‘தசரா’ திரைப்படம். ஶ்ரீ லக்‌ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி இப்படத்தை தயாரிக்கிறார்கள். அறிமுக இயக்குநர் ஶ்ரீகாந்த ஒதெலா இயக்குகிறார். நேச்சுரல் ஸ்டார் நானி, தனது வழக்கமான பாணியிலிருந்து நவ நாகரீக தோற்றத்திலிருந்தும் முற்றிலுமாக மாறி முதல் முறையாக முழுக்க முழுக்க மாறி, ஒரு கிராமிய கேரக்டரில் கரடுமுரடான தோற்றத்தில் நடிக்கிறார். இந்த கேரக்டரில் நடிப்பதற்காக அவர் நிறைய பயிற்சி எடுத்து தன்னை முழுமையாக கிராமத்து மனிதனாக மாற்றிக்கொண்டுள்ளார். இப்படத்தின் அறிவிப்பு வீடியோவில் அவரது தெலுங்கானா பேச்சுவழக்குமொழி அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்தது. படம் முழுக்க அவர் மாஸ் டயலாக்குகளைப் பேசுவதைப் பார்ப்பதே ஒரு விருந்தாக இருக்கும். ஸ்பார்க் ஆஃ...
நடிகர் சங்கம் சார்பில் கேப்டன் விஜயகாந்திற்கு நேரில் வாழ்த்து கூறிய பொருளாளர் நடிகர் கார்த்தி.

நடிகர் சங்கம் சார்பில் கேப்டன் விஜயகாந்திற்கு நேரில் வாழ்த்து கூறிய பொருளாளர் நடிகர் கார்த்தி.

சினிமா, செய்திகள்
தென்னிந்திய நடிகர் சங்கம் முன்னாள் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் 70 வது பிறந்த நாளான இன்று , நடிகர் சங்கம் சார்பில், பொருளாளர் கார்த்தி நேரில் சென்று மலர்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். இவரிடன் சங்க செயற்குழு உறுப்பினர்கள் பிரேம்குமார், ஹேமசந்திரன் ஆகியோர் இருந்தார்கள். நடிகர் விஜயகாந்தைப் பற்றி நடிகர் கார்த்தி கூறியதாவது: விஜயகாந்த் என்றாலே முதலில் நினைவிற்கு வருவது அவருடைய தைரியம் தான். அதேபோல், யார் வந்தாலும் சாப்பிடலாம் என்று சிறு வயதிலிருந்தே கேள்விபட்டிருக்கேன். யாரிடமும் எந்த பாகுபாடும் இல்லாமல் அன்பு காட்டுவது எவ்வளவு பெரிய விஷயம். இப்படி ஒரு மனிதரை அவருடைய பிறந்தநாளில் நேரில் வந்து வாழ்த்துவது தான் அவருக்கு செய்யும் மரியாதையாக இருக்கும். அதிலும் சங்கம் சார்பாக வந்து வாழ்த்தியது நிறைவாக உள்ளது என்றார்....