தேசிய அளவில் 1800 திரையரங்குகளில் சமந்தாவின் “யசோதா” டீசர் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது
நடிகை சமந்தா நடிப்பில் உருவாகி வரும் “யசோதா” டீசர் இன்று வெளியாகியுள்ளது
இயக்குநர்கள் ஹரி-ஹரிஷ் கூட்டணி இணைந்து இயக்கும் இப்படத்தினை Sridevi Movies சார்பில் மூத்த தயாரிப்பாளர் சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் பிரமாண்ட பொருட்செலவில் தயாரித்து வருகிறார்.
இப்படத்தில் சமந்தா முதன்மை பாத்திரத்தில் நடிக்க, வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி ஷர்மா, சம்பத் ராஜ் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
‘யசோதா’ படத்தின் பரபரப்பான டீஸர் மிக சுவராஸ்யமாக அமைந்துள்ளது. குழப்பமான சூழ்நிலைகளுக்கு மத்தியில் சமந்தா சாப்பிட முடியாமல், தூங்க முடியாமல், உயிர் பிழைக்க போராடுவதை டீசர் காட்டுகிறது. கர்ப்பிணிப் பெண்ணாக நடிக்கும் அவர், பெண் மருத்துவர் பரிந்துரைத்தும் பார்க்ககூடாத ஒன்றை பார்த்து விடுகிறார். அவரை சுற்றி என்ன தான் நடக்கிறது? அவர் ஏன் வாழப் போராடுகிறார்? அவர் எதை வெளிப்படுத்த பாட...









