Monday, April 27

Author: admin

Dream House நிறுவனம் தயாரிப்பில்,  மிரள வைக்கும் புதுமையான ஹாரர் திரில்லர் திரைப்படம், இனிதே துவங்கியது !

Dream House நிறுவனம் தயாரிப்பில்,  மிரள வைக்கும் புதுமையான ஹாரர் திரில்லர் திரைப்படம், இனிதே துவங்கியது !

சினிமா
Dream House நிறுவன தயாரிப்பில், N. ஹாரூன் இயக்கத்தில் ஸ்ம்ருதி வெங்கட், சோனியா அகர்வால் முதன்மை பாத்திரங்களில் நடிக்கும் ஹாரர் திரைப்படம், படக்குழுவினர் கலந்து கொள்ள, எளிமையான பூஜையுடன் இன்று இனிதே துவங்கியது. நிஜத்தில் நம் கண் முன் நடக்கும் பல அமானுஷ்யமான சம்பவங்களுக்கு, உண்மையில் ஏன் எப்படி நடக்கிறது என்பதற்கான பதில்கள் நம்மிடம் இல்லை. அப்படி நடந்த சில சம்பவங்களின் பாதிப்பில் இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. வழக்கமான ஹாரர் காமெடியாக இல்லாமல், நம்மை மிரள வைக்கும் மிரட்டலான ஹாரர் திரைப்படமாக இப்படம் உருவாக உள்ளது. நடிகைகள் ஸ்ம்ருதி வெங்கட், சோனியா அகர்வால் முதன்மை பாத்திரங்களில் நடிக்கும் இப்படத்தில் நாயகன் பாத்திரத்தில் ரோஷன் நடிக்கிறார். இசையமைப்பாளர் சித்தார்த் விபின், இயக்குனர் சுப்பிரமணியம் சிவா இருவரும் மாறுபட்ட முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின...
நாஞ்சில் பி.சி.அன்பழகன் தயாரித்து இயக்கும் படம், “உயிர்த் துளி”.

நாஞ்சில் பி.சி.அன்பழகன் தயாரித்து இயக்கும் படம், “உயிர்த் துளி”.

சினிமா
காமராசு, அய்யா வழி, நதிகள் நனைவதில்லை படங்களுக்குப் பிறகு, நாஞ்சில் பி.சி.அன்பழகன் தயாரித்து இயக்கும் படம், "உயிர்த் துளி".கதாநாயகி இல்லாமல் , கதையே நாயகனாக கொண்ட உயிரோட்ட சம்பவங்களின் தொகுப்பே உயிர்த் துளி.கொடைக்கானலில் நடந்த சம்பவத்தை, கொடைக்கானலிலேயே ஒரே கட்டமாக படப்பிடிப்பை நடத்தி முடிக்கயிருக்கிறார்கள். எடிட்டிங் லெனின், ஒளிப்பதிவு கார்த்திக் ராஜா, ஸ்டண்ட் கனல் கண்ணன், இசை ஜாட்ரிக்ஸ், நடனம் ராதிகா, ஆர்ட் பாலமுருகன், டிசைன் மேக்ஸ், இணை இயக்கம் செல்வம் அய்யம் பெருமாள், தயாரிப்பு நிர்வாகம் விஜயமுருகன், யூனிட் காவ்ய லட்சுமி, மக்கள் தொடர்பு கோவிந்தராஜ். நடிகர் சிங்கமுத்து மகன் கார்த்திக், எஸ்.ஏ.சந்திர சேகர், வாகை சந்திர சேகர், சரவணன், கஸ்தூரி, கோமல் ஷர்மா, சீதா, ரோஷன், காவியா, நித்யமது, கலை, கவிதா ஸ்ரீ, பிரியதர்ஷினி, எலிசபெத், சிங்கமுத்து, மதன்பாப், ரவிமரியா, ரோபோ சங்கர், மதுரை ...
 புத்தாண்டில் இசைஞானி இளையராஜாவை சந்தித்து ஆசி பெற்ற சாமானியன் குழு

 புத்தாண்டில் இசைஞானி இளையராஜாவை சந்தித்து ஆசி பெற்ற சாமானியன் குழு

சினிமா
எண்பது, தொண்ணூறுகளில் மக்கள் நாயகன் என எளிய மக்களின் முகமாக அறியப்பட்டவர் நடிகர் ராமராஜன். தொடர்ந்து வெள்ளி விழாப்படங்களை கொடுத்த பெருமை இவருக்கு மட்டுமே உண்டு. இவரது வெற்றியின் பின்னணியில் தூணாக இருந்து அவரது படங்களுக்கு காலத்தால் அழியாத இனிமையான பாடல்களை கொடுத்தவர் இசைஞானி இளையராஜா. தற்போது இவர்கள் இருவரும் 23 வருடங்களுக்கு பிறகு ‘சாமானியன்’ என்கிற படத்தின் மூலம் மீண்டும் கைகோர்த்துள்ளனர். இப்படி ஒரு அபூர்வ கூட்டணியை மீண்டும் இணைத்து படம் இயக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார் இயக்குநர் R.ராகேஷ். இவர் இதற்கு முன்னதாக தம்பிக்கோட்டை, மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன ஆகிய படங்களை இயக்கியவர். இந்த படத்தை எட்செட்ரா என்டர்டெய்ன்மென்ட் சார்பில் V.மதியழகன் தயாரித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தநிலையில் புத்தாண்டை முன்னிட்டு தயாரிப்...
தமிழ் மீது கொண்ட பற்று காரணமாக திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ள வங்காளத்தை பூர்வீகமாக கொண்ட சென்னையில் வசிக்கும் வருமான வரித்துறை அதிகாரி

தமிழ் மீது கொண்ட பற்று காரணமாக திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ள வங்காளத்தை பூர்வீகமாக கொண்ட சென்னையில் வசிக்கும் வருமான வரித்துறை அதிகாரி

இலக்கியம், செய்திகள்
தமிழ் மொழியின் மேல் கொண்ட தீராத பற்றினால் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார் வங்காளத்தை பூர்வீகமாக கொண்ட எஸ் பி சக்ரபோர்த்தி என்கிற சோமன்.சக்ரபோர்த்தியின் பெற்றோர் மேற்கு வங்காளத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு குடியேறினர். சென்னையில் பிறந்து, அயன்புரத்தில் வளர்ந்த இவர், வருமான வரித்துறையில் இணை ஆணையராக பணியாற்றி வருகிறார். திருக்குறள் மொழிபெயர்ப்பில் தனக்கு ஏற்பட்ட ஆர்வத்தை குறித்து பேசிய சக்ரபோர்த்தி, "சிறு வயது முதலே தமிழ் மொழி மீது எனக்கு தீவிர பற்று ஏற்பட்டது. பள்ளி பருவத்தில் திருக்குறளில் உள்ள மனப்பாடச் செய்யுள் எனது ஆர்வத்தை மேலும் தூண்டியது. பின்னர் திருக்குறளின் மொழிப் பெயர்ப்புகளைப் படிக்கும்போது, திருக்குறளை மிகவும் எளிமையாக ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. சிலர் இன்னுமொரு மொழிபெயர்ப்பு எதற்கு என்றும் ஐயம் எழுப்பினர். ஆனால், தமிழ் மொழிப் பற்...
 பிரைம் வீடியோ ஷாஹித் கபூர் மற்றும் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிப்பில் உருவான மிகவும் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட ராஜ் & டிகேயின் ஃபார்ஸி, கிரைம் த்ரில்லர் திரைப்படத்தை பிப்ரவரி 10 ஆம் தேதி வெளியிடுகிறது

 பிரைம் வீடியோ ஷாஹித் கபூர் மற்றும் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிப்பில் உருவான மிகவும் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட ராஜ் & டிகேயின் ஃபார்ஸி, கிரைம் த்ரில்லர் திரைப்படத்தை பிப்ரவரி 10 ஆம் தேதி வெளியிடுகிறது

சினிமா
பிரைம் வீடியோ ஷாஹித் கபூர் மற்றும் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிப்பில் உருவான மிகவும் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட ராஜ் & டிகேயின் ஃபார்ஸி, கிரைம் த்ரில்லர் திரைப்படத்தை பிப்ரவரி 10 ஆம் தேதி வெளியிடுகிறது ராஜ் மற்றும் டிகே உருவாக்கிய இந்த, க்ரைம் த்ரில்லர் ஷாஹித் கபூர் மற்றும் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் டிஜிட்டல் அறிமுகமாக அமைகிறது .மேலும் இந்தத் தொடரில் கே கே மேனன், ராஷி கண்ணா, அமோல் பலேகர், ரெஜினா காசண்ட்ரா மற்றும் புவன் அரோரா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றுகின்றனர் , மற்றும் இது பிப்ரவரி 10 முதல் இந்தியாவிலும் 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்கள் முழுவதும் ஸ்ட்ரீம் செய்யப்பட உள்ளது. வரம்புகள் இல்லாத வகையில் புத்தம் புதிய, மற்றும் தனித்துவமான திரைப்படங்கள், டிவி ஒளிபரப்புக்கள், ஸ்டாண்ட் அப் நகைச்சுவை, அமேசான் ஒரிஜினல்கள் , விளம்பரங்கள் இல்லாத அமேசான் பிரை...
இயக்குநர் ஜெகன் திறமையானவர்; பிகினிங் படத்தை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறேன்! – இயக்குநர் லிங்குசாமி

இயக்குநர் ஜெகன் திறமையானவர்; பிகினிங் படத்தை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறேன்! – இயக்குநர் லிங்குசாமி

சினிமா
திருப்பதி பிரதர்ஸ் சார்பில் இயக்குநர் லிங்குசாமி வெளியிடும் படம் #பிகினிங். ஆசியாவின் பிளவு திரையில் எடுக்கப்பட்ட திரைப்படம். இப்படத்தை அறிமுக இயக்குநர் ஜெகன் விஜயா இயக்க, வினோத் கிஷன், கௌரி மற்றும் பலர் நடித்திருக்கிருக்கிறார்கள். அப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் படக்குழுவினர் பேசியதாவது: இயக்குநர் லிங்குசாமி பேசும்போது, இப்படத்தில் பணியாற்றிய ஒவ்வொருவரும் அதாவது, ஒளிப்பதிவாளர் இந்த லென்ஸை உபயோகப்படுத்தினேன் என்றார், கலை இயக்குநர் புதியதாக ஒன்றை பயன்படுத்தினோம் என்றார். அது தான் புதியதாக படம் எடுப்பவர்களுக்கு கிடைக்க வேண்டிய அனுபவம். ஆனந்தம் படம் எடுத்தபோது என்ன உணர்ந்தேனோ, அதை இந்த படத்திலும் உணர்கிறேன். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த படத்தை வெளியிடுவதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். மிக சவாலாக இந்த படத்தை எடுத்திருக்கிறார்கள் என்பது நன்றாக தெரிகிறது. மிகவும் திறமையான இயக்...
“கட்டில்” திரைப்பட சிங்கிள் டிராக் வெளியீடு !!!

“கட்டில்” திரைப்பட சிங்கிள் டிராக் வெளியீடு !!!

சினிமா
Maple Leafs Productions தயாரிப்பில், பிரபல எடிட்டர் B.லெனின் கதை, திரைக்கதையில், EV கணேஷ்பாபு, இயக்கி தயாரித்து கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் “கட்டில்”. இப்படத்தின் முதல் சிங்கிள் டிராக் பாடல் வெளியீட்டு விழா இன்று பிரபலங்கள் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இயக்குநர் நடிகர் EV கணேஷ் பாபு பேசியதாவது… நானும் பத்திரிக்கையாளனாக இருந்து வந்தவன் தான். 2023ல் முதல் பத்திரிகையாளர் சந்திப்பில் நான் கலந்துகொள்வது மகிழ்ச்சி. நான் இங்கு இன்று இந்த மேடையில் இருக்க முக்கிய காரணம் எடிட்டர் லெனின் அவர்கள் தான் அவரது ஊக்கத்தில் தான் இந்த திரைப்படம் நடந்தது. செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்கள் இந்த நிகழ்விற்கு வந்து வாழ்த்துவது மிக மகிழ்ச்சி. ஶ்ரீகாந்த் தேவா இப்படத்தில் அருமையான இசையைத் தந்துள்ளார். சித் ஶ்ரீராம் மிக அரிதாக தேர்ந்தெடுத்து பாடல்கள் பாடுகி...
ஜான்வி கபூரின் சமீபத்திய வெளியீடான ‘மிலி’ ஓடிடி சார்ட்டில் நம்பர் 1 இடத்தில் இருக்கிறது

ஜான்வி கபூரின் சமீபத்திய வெளியீடான ‘மிலி’ ஓடிடி சார்ட்டில் நம்பர் 1 இடத்தில் இருக்கிறது

சினிமா
சினிமாத்துறையில் ஒருவர் தரும் கடின உழைப்பு என்றும் வீண் போகாது என்பதற்கு உதாரணமாக நடிகை ஜான்வி கபூரின் உழைப்பும் அவரது சமீபத்திய திரைப்படங்களின் தேர்வும் இருக்கிறது என பாராட்டுகள் குவிந்து வருகிறது. சவாலான கதாபாத்திரங்கள் மற்றும் திரைக்கதையில் நடிப்பதற்கு ஜான்வி கபூர் எப்போதும் தயங்கியதும்  கிடையாது, அதுபோன்ற படங்களை அவர் தவிர்த்ததும் கிடையாது. அந்த வகையில் அவர் தற்போது, தன்னுடைய சமீபத்திய படமான ‘மிலி’யில் மீண்டும் தனது திறமையை நிரூபித்து இருக்கிறார். சர்வைவல் ட்ராமாவாக நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் வெளியாகிய ‘மிலி’ கதை பார்வையாளர்களையும் சினிமா ஆர்வலர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் ஜான்வி கபூரின் திறமையான நடிப்புக்கும் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. பார்வையாளர்கள் மற்றும் சினிமா ஆர்வலர்களிடம் இருந்து கிடைத்து வரும் நேர்மறையான வரவேற்பைத் தொடர்ந்து ‘மிலி’ திரைப்படம் இந்தியன் ஓடி...
சில்லறை விற்பனை ஊழியர்கள் கொண்டாட்ட நிகழ்வு 2022

சில்லறை விற்பனை ஊழியர்கள் கொண்டாட்ட நிகழ்வு 2022

செய்திகள்
சென்னை, ஸ்ரீ ஷங்கர்லால் சுந்தர்பாய் ஷசுன் ஜெயின் மகளிர் கல்லூரியின் சார்பில் சில்லறை வர்த்தக சிறப்பு மையத்தினர்(Centre of Excellence - Retail) 22.12.2022 அன்று காலை 9.00 மணியளவில் ஊழியர்களை மகிழ்விக்கும் வகையில் சில்லறை விற்பனை ஊழியர்கள் கொண்டாட்டம் 2022 என்ற நிகழ்ச்சியைக் கல்லூரி வளாகத்தில் கொண்டாடினர். கல்லூரியின் முதல்வர் முனைவர் சா.பத்மாவதி அவர்கள் நிகழ்ச்சியைத் தொடங்கி வைக்க, நடிகர் மற்றும் விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு புகழ் திரு.திருச்சி சரவணக்குமார் அவர்களும் எல்.கே.எஸ் ஜூவல்லரியின் நிர்வாகப்பங்குதாரர் திரு.சர்ஃபராஸ் சையத் அகமது அவர்களும் விருந்தினர்களாகத் தலைமை தாங்கி நிகழ்ச்சியைச் சிறப்பித்தனர். அந்நிகழ்ச்சியில், ஷசுன் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் இராணி மனோகரன் அவர்கள் திரைக்கதையில், மாணவிகள் நடித்து, காட்சி ஊடகவியல் துறையினரால் எடுக்கப்பட்ட குறும்படம் ஒன்று ஒள...
‘அருவா சண்ட’.-விமர்சனம்

‘அருவா சண்ட’.-விமர்சனம்

சினிமா
ஒயிட் ஸ்கிரீன் புரொடக்ஷன் பட நிறுவனம் சார்பில் வி.ராஜா தயாரித்து, கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘அருவா சண்ட’. கதையின் நாயகனான ராஜா கபடி விளையாட்டில் கில்லியாக உள்ளார் . அவரது அம்மா சரண்யாவுக்கும் தன் மகன் கபடிவிளையாட்டில் சாதனை படைக்கவேண்டும் என்று மிகவும் ஆசை. அதே ஊரில் இருக்கும் ஆடுகளம் நரேனின் மகள் மாளவிகா மேனன் கபடி பற்றி படம் எடுக்க முயற்சி செய்கிறார், கபடி வீரரான நாயகனும் , மாளவிகா மேனனும் காதல் வயப்படுகிறார்கள் ஆனால், இவர்களது காதலுக்கு சாதி தடையாக வருவதோடு ,நரேன் தன தங்கை மகனுக்கு நாயகியை திருமணம் செய்துவைக்க முடிவுசெய்கிறார்,இறுதியில் அவர்கள் காதல் வெற்றி அடைந்ததா? இல்லையா?, நாயகன் அம்மாவின் கனவு நிறைவேறியதா? இல்லையா? என்பதே ‘அருவா சண்ட’.படத்தின் மீதி கதை படத்தை தயாரித்திருப்பதோடு, நாயகனாகவும் வி. ராஜா நடித்துள்ளார் கிராமத்து இளைஞனாக புதுமுகம் என்று தெரியாத அளவிற்கு யதார்...