மாஸ்டர் படத்திற்காக ‘சந்தோஷம்’ சிறந்த துணை நடிகர் விருதை வென்ற மாஸ்டர் மகேந்திரன்!!
தமிழ் சினிமாவில் இளம் நடிகரான மாஸ்டர் மகேந்திரன் ஆந்திர முன்னணி இதழ் வழங்கும் சந்தோஷம் விருதுகளில், சிறந்த துணை நடிகருக்கான விருதை ‘மாஸ்டர்’ படத்திற்காக பெற்றுள்ளார்.
நாட்டாமை படத்தின் மூலம் தமிழக மக்களின் மனங்களில் அழுத்தமான இடத்தைப் பிடித்தவர் மாஸ்டர் மகேந்திரன். தற்போது தமிழில் நாயகனாக பல படங்களில் நடித்து வருகிறார். வளர்ந்து வரும் இளம் நடிகரான இவருக்கு தளபதி விஜய்யின் “மாஸ்டர்” படத்தில் நடித்த கதாப்பாத்திரம், பெரும் புகழை பெற்றுத்தந்தது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த ‘மாஸ்டர்‘ படத்தில் விஜய் சேதுபதியின் இள வயது பாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார் மாஸ்டர் மகேந்திரன். இந்த பாத்திரம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.
பெரும் ப்ளாக்பஸ்டராக மாறிய ‘மாஸ்டர்’ படம் ஆந்திராவிலும் வெற்றிக்கொடி நாட்டியது. தற்போது ஆந்திராவின் முன்னணி இதழ் வருடாவர...









