‘வெள்ளிமலை’ ட்ரைய்லர் வெளியீட்டு விழா
இயக்குநர் ஓம் விஜய் இயக்கத்தில் சூப்பர் குட் சுப்ரமணி கதையின் நாயகனாக நடித்திருக்கக்கூடிய 'வெள்ளிமலை' படத்தின் ட்ரைய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் இயக்குநர்கள் பேரரசு, கே.எஸ். ரவிக்குமார், சீமான் உள்ளிட்டப் பலர் கலந்து கொண்டனர்.
இயக்குநர் மிஷ்கின் பேசியதாவது, “இந்தப் படத்தைப் பார்க்கும்போது என்னுடைய முதல் படம் வந்தது போல எளிமையாக உள்ளது. இந்தப் படத்தில் நடித்த சுப்ரமணி என் மனதுக்கு நெருங்கிய நண்பர். ’பிசாசு’ உட்பட என்னுடைய பல படங்களில் நடித்திருப்பார். இயக்குநரை நான் பார்த்தபோது வேட்டியுடன் வந்திருந்தார். தயாரிப்பாளர் படித்து முடித்து சம்பாதித்த பணத்தை சினிமாவில் கொண்டு வந்தார். அவருக்கு பாராட்டுகள். இந்த வாழ்க்கையில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கிறது. எப்படி வாழ்ந்து தீர்ப்பது எனத் தெரியவில்லை. நாம் மகிழ்ச்சியாக இருக்கக்கூடிய ஒரே இடம் திரையரங்குதான். அதனால், இந்தத் தய...









