YNOT ஸ்டுடியோஸ் எஸ். சஷிகாந்த் தயாரிப்பில், ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் சமுத்திரக்கனி, கதிர், வசுந்தரா நடிக்கும் ‘தலைக்கூத்தல்’
'தமிழ்ப் படம்' தொடங்கி, 'இறுதி சுற்று', 'விக்ரம் வேதா' உள்ளிட்ட வித்தியாசமான முயற்சிகள் கொண்ட பல வெற்றிப் படங்களை தயாரித்த திரு எஸ். சஷிகாந்த் தலைமையிலான YNOT ஸ்டுடியோஸ், சிறந்த அறிமுக இயக்குநருக்காக தயாரிப்பாளருக்கு வழங்கப்படும் இந்திரா காந்தி விருது மற்றும் சிறந்த வசனத்திற்காக தேசிய விருது ஆகியவற்றை வென்ற 'மண்டேலா' திரைப்படத்தை தயாரித்ததன் மூலம் தேசிய கவனம் பெற்றது. ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் 'தலைக்கூத்தல்' என்கிற புதிய படத்தை YNOT ஸ்டுடியோஸ் தற்போது தயாரித்துள்ளது.
தொடர்ந்து 14 வருடங்களாக கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் திறமையான இயக்குநர்களின் உருவாக்கத்தில் பல படங்களை YNOT ஸ்டுடியோஸ் தயாரித்து வருகிறது. இந்த வரிசையில் அடுத்த நேர்மையான படைப்பாக தலைக்கூத்தல் வெளியாகவுள்ளது.
அமெரிக்காவில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றிய ஜெயப்பிரகாஷ், அறிமுக இயக்குநர்களுக்க...









