Tuesday, April 28

Author: admin

”என் இனிய தனிமையே முதல் பாடல் இன்று வெளியீடு”

”என் இனிய தனிமையே முதல் பாடல் இன்று வெளியீடு”

சினிமா
நடிகர் ஸ்ரீபதி, சகு பாண்டியன் இயக்கத்தில் ஜேம்ஸ் வசந்த் இசையில் உருவாகும் “என் இனிய தனிமையே” என்கிற அவருடைய அடுத்த படத்திற்காக ஆட்டோ புலி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனத்துடன் கைகோர்க்கிறார். இந்த படத்தில் கதாநாயகனாக ஸ்ரீபதி நடித்துள்ளார். நாயகியாக ரீஷா நடிக்கிறார். ஸ்ரீபதி 2023ல் வெளியாக உள்ள சில தமிழ் படங்களில் டைட்டில் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். சதீஷ் சரண் இயக்கத்தில் சைமன் கிங் இசையில் உருவாகியுள்ள 'பெண்டுலம்' திரைப்படத்தில் 'அசுரன்' படப் புகழ் அம்மு அபிராமி மற்றும் நடிகை கோமல் சர்மா ஆகியோருடன் இணைந்து நடித்துள்ளார். மேலும் மோகன் டச்சு இயக்கத்தில் கே.யு கார்த்திக் இசையில் உருவாகியுள்ள 'அங்காரகன்' என்கிற படத்தில் சத்யராஜ் மற்றும் மலையாள நடிகை நியா ஆகியோருடன் இணைந்து நடித்துள்ளார் ஸ்ரீபதி. 'என் இனிய தனிமையே' படம் மூலம் சகு பாண்டியன் இயக்குநராக அடியெடுத்து வைக்கிறார்...
பிரபல சண்டை பயிற்சி இயக்குநர் ஜூடோ ரத்னம் மறைந்தார்

பிரபல சண்டை பயிற்சி இயக்குநர் ஜூடோ ரத்னம் மறைந்தார்

சினிமா
அதிரடி ஆக்ஷன் படங்களின் அடிநாதமாக திகழ்பவர்கள் சண்டை பயிற்சி இயக்குநர்கள் மற்றும் சண்டை பயிற்சி கலைஞர்கள், அந்த வரிசையில் தென்னிந்திய திரையுலகின் புகழ்பெற்ற மற்றும் பழம்பெரும் முன்னணி சண்டை பயிற்சி இயக்குனராக பெரும் பெயர் பெற்றவர் ஜூடோ ரத்தினம் அவர்கள் ஆவார், இவர் தனது 92 வயதில் வயது மூப்பு காரணமாக இன்று உயிரிழந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 1,500 திரைப்படங்களுக்கு மேல் பணியாற்றியுள்ள ஜூடோ ரத்தினம், 2019-ம் ஆண்டு தமிழக அரசின் கலைமாமணி விருதையும் பெற்றவர். குடியாத்தத்தில் உள்ள இல்லத்தில் வசித்து வந்த நிலையில், வயது மூப்பு காரணமாக ஜூடோ ரத்தினம் உயிரிழந்துள்ளார். தமிழ் சினிமாவில் 1959 ஆம் ஆண்டு முக்தா சீனிவாசன் இயக்கத்தில் வெளியான தாமரைக் குளம் படத்தின் மூலம் நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஜூடோ ரத்தினம். அதன்பிறகு 1966 ஆம் ஆண்டு R .சுந்தரம் இயக்கத்தில் மாடர்...
பெண்கள் தான் படைப்பு கடவுள்; என் தாயும், மனைவியும் வணங்க வேண்டியவர்கள்! – நடிகர் சிவகுமார்

பெண்கள் தான் படைப்பு கடவுள்; என் தாயும், மனைவியும் வணங்க வேண்டியவர்கள்! – நடிகர் சிவகுமார்

சினிமா, செய்திகள்
பெண்கள் தான் படைப்பு கடவுள்; என் தாயும், மனைவியும் வணங்க வேண்டியவர்கள்! - நடிகர் சிவகுமார் இன்று பரிசு வாங்கிய சண்முகசுந்தரம் (மரபு விதை சேகரிப்பு) நம்மாழ்வார் ரமேஷ் (இயற்கை வேளாண்மை பயிற்சி செய்தவர்) மாலதி ரமேஷ், ரவிக்குமார், மூர்த்தி, (அண்ணா பல்கலைக்கழகம்) பெண்கள் விவசாய கூட்டுறவு குழு இவர்கள் அனைவருக்கும் எனது நன்றியும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இறுதியில் பெண்கள் கலக்கி விட்டார்கள். ராஜ்கிரன் கூறியது போல், சக்தி இல்லை என்றால் எதுவுமே இல்லை. நானும் அதைப் பற்றி தான் பேசப் போகிறேன். நான் பத்து மாத குழந்தையாக இருக்கும்போது எனது அப்பா இறந்து விட்டார். புகைப்படம் இல்லாததால் அப்பா கருப்பா சிகப்பா என்று தெரியாது. அப்பா இருந்திருந்து அம்மா இறந்திருந்தால் இன்று நான் அனாதையாக இருந்திருப்பேன். இந்த மேடையில் நின்று இருக்க மாட்டேன். சூர்யா கார்த்தி பிறந்திருக்க மாட்டார...
உழவர்களுக்காக அரசாங்கத்திற்கு நடிகர் கார்த்தி கோரிக்கை!

உழவர்களுக்காக அரசாங்கத்திற்கு நடிகர் கார்த்தி கோரிக்கை!

சினிமா, செய்திகள்
சிறு குறு விவசாயிகள் மற்றும் பெண்கள் பயன்படுத்தும் வகையில் விவசாய கருவிகளை உருவாக்கும் போட்டி இந்த ஆண்டு நடைபெறும் - நடிகர் கார்த்தி சிவராமன் சார், அனந்த் சார் மற்றும் இஸ்மாயில் சார் இவர்கள் தான் இந்த என்.ஜி.ஓ-க்கு முதலீடு என்று கூறுவேன். சமூகத்தின் மீது இவர்களுக்கு இருக்கும் அக்கறை, அனுபவம் எல்லாம் சேர்ந்து தான் இதை வழிநடத்தி செல்கிறார்கள். ராஜ்கிரன் ஐயா, பொன்வண்ணன் சார் மற்றும் பாண்டிராஜ் சாருக்கு நான் நன்றி தெரிவிக்க போவதில்லை. ஏனென்றால், என்னுடைய சிந்தனையில் பாதியைக் கொண்டவர்கள். மேலும், எங்கள் அழைப்பை ஏற்று இங்கு வந்து பரிசு பெற்று எங்களைச் சிறப்பித்த விவசாய பெருமக்களுக்கு நன்றி. இது மாதிரி நிகழ்ச்சிகள் அடிக்கடி நிகழ்வதில்லை. எந்த விஷயங்களையும் நாம் தேடி தெரிந்து கொள்வதும் இல்லை. தினேஷ்-ன் நவீன உழவனை பின்பற்றுபவர்களுக்கு நிறைய விஷயங்களைப் பற்றி தெரிந்து கொண்டிருக்கலாம். உழவன...
Padmaja Films Private Ltd, Old Town Pictures வழங்கும் சத்யதேவ், தாலி தனஞ்செயா நடிக்கும் பான் இந்திய திரைப்படம் “ஜீப்ரா” !!!

Padmaja Films Private Ltd, Old Town Pictures வழங்கும் சத்யதேவ், தாலி தனஞ்செயா நடிக்கும் பான் இந்திய திரைப்படம் “ஜீப்ரா” !!!

சினிமா
இளம் முன்னணி நடிகர் சத்யதேவ் மற்றும் கன்னட நட்சத்திரம் தாலி தனஞ்சயா இணைந்து இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் பான் இந்திய க்ரைம் ஆக்‌ஷன் எண்டர்டெயினர் திரைப்படத்தில் நடிக்கிறார்கள். இந்த இரு நடிகர்களின் 26வது திரைப்படம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. (ஜனவரி 26) குடியரசு தினமான இன்று தயாரிப்பாளர்கள் படத்தின் தலைப்பை அறிவித்தனர். ஜீப்ரா என்ற தலைப்பே ஆர்வத்தை அதிகப்படுத்துகிறது. தலைப்பு அறிவிப்பு போஸ்டரில் லோகோவுடன் ஒரு வேகமானி இணைக்கப்பட்டுள்ளது, அதில் நாம் செஸ் துண்டுகளைக் காணலாம். சதுரங்க ஆட்டத்தைப் போலவே படமும் திருப்பங்கள் நிறைந்ததாக இருக்கும். போஸ்டரில் உள்ள விஷயங்கள் முன்னணி கதாபாத்திரங்களின் புத்திசாலித்தனமான தன்மையைக் குறிக்கின்றன. போஸ்டரின் அத்தனை விசயங்களும் படைப்பின் மீதான ஆர்வத்தைத் தூண்டுகிறது. Padmaja Films Private Ltd and Old Town Pictures, சார்பில் எஸ்.என்.ரெட்...
விக்டரி வெங்கடேஷ் நடிக்கும் 75 ஆவது படமான ‘சைந்தவ்’ திரைப்படத்தின் தொடக்க விழா ஹைதராபாத்தில் கோலாகலமாக நடைபெற்றது

விக்டரி வெங்கடேஷ் நடிக்கும் 75 ஆவது படமான ‘சைந்தவ்’ திரைப்படத்தின் தொடக்க விழா ஹைதராபாத்தில் கோலாகலமாக நடைபெற்றது

சினிமா
பிரம்மாண்டமாக தொடங்கிய விக்டரி வெங்கடேஷின் 'சைந்தவ்' தெலுங்கின் முன்னணி நட்சத்திர நடிகரான விக்டரி வெங்கடேஷ் நடிக்கும் 75 ஆவது படமான 'சைந்தவ்' திரைப்படத்தின் தொடக்க விழா ஹைதராபாத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இதன் போது தெலுங்கு திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும், திரையுலக பிரபலங்களும் கலந்து கொண்டு பட குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இயக்குநர் சைலேஷ் கொலனு இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படம் 'சைந்தவ்'. இதில் விக்டரி வெங்கடேஷ் கதையின் நாயகனாக நடிக்கிறார். பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். எஸ். மணிகண்டன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். மாஸ் ஆக்சன் என்டர்டெய்னர் ஜானரில் தயாராகும் இந்த திரைப்படத்தை நிஹாரிகா என்டர்டெய்ன்மென்ட் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் வெங்கட் போயனப்பள்ளி பிர...
ஏ.ஆர். முருகதாஸ் புரொடக்சன் தயாரித்துள்ள, இந்தியாவின் சுதந்திரம் குறித்து பரபரப்பாகக் காட்சிப்படுத்தி இருக்கக்கூடிய ‘ஆகஸ்ட் 16, 1947’ படத்தின் எக்ஸ்க்ளூசிவ் போஸ்டரை குடியரசு தினத்தன்று வெளியிடுவதில் படக்குழு பெருமிதம் கொள்கிறது

ஏ.ஆர். முருகதாஸ் புரொடக்சன் தயாரித்துள்ள, இந்தியாவின் சுதந்திரம் குறித்து பரபரப்பாகக் காட்சிப்படுத்தி இருக்கக்கூடிய ‘ஆகஸ்ட் 16, 1947’ படத்தின் எக்ஸ்க்ளூசிவ் போஸ்டரை குடியரசு தினத்தன்று வெளியிடுவதில் படக்குழு பெருமிதம் கொள்கிறது

சினிமா
'ஆகஸ்ட் 16, 1947' படத்தின் டீசர் ஆன்லைனில் வெளியானதில் இருந்து, இந்த எபிக் பீரியட் ட்ராமா குறித்து மேலும் தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர். கெளதம் கார்த்திக் நடித்துள்ள இந்தப் படத்தின் புதிய போஸ்டரை படக்குழு குடியரசு தினத்தன்று வெளியிட்டுள்ளது. அற்புதமான கதை சொல்லியான ஏ.ஆர். முருகதாஸ் இந்த முறை தயாரிப்பாளராக மீண்டும் 'ஆகஸ்ட் 16, 1947' படத்தில் களம் இறங்கி இருக்கிறார். பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்கு எதிராக தைரியமாக  வெகுண்டெழுந்த இந்தியர்கள் பற்றி இந்தக் கதை கூற இருக்கிறது. கண்ணைக் கவரும்படி அமைந்துள்ள இந்த போஸ்டர் தேசபக்தி மற்றும் படத்துடைய ஆன்மாவை தாங்கி நிற்கிறது. படத்தின் முன்னணி கதாநாயகன் கையில் டார்ச்சுடனும் கண்ணில் எரியும் தாய்நாட்டு தேசபக்தியுடனும் இருக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த நெருப்பு ஒரு பெரிய புரட்சிக்கு வித்திட்டதா அல்லது இந்த நாயகர்களுக்கு சோகமான முடிவை ...
“அயலி ” தமிழ் வெப் சீரிஸ்- விமர்சனம்

“அயலி ” தமிழ் வெப் சீரிஸ்- விமர்சனம்

சினிமா
“அயலி ” என்ற தொடரை Estrella stories சார்பில் தயாரிப்பாளர் S. குஷ்மாவதி தயாரிக்க, இயக்குநர் முத்துக்குமார் இயக்குயுள்ளார்.. எட்டு தொடர்களான இதில்  அபிநட்சத்திரா , அனுமோல், அருவி மாதவன் , லிங்கா மற்றும் சிங்கம்புலி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர், இது ZEE5 இல் ஜனவரி 26 முதல் ஒளிபரப்பாக இருக்கிறது. 14 நூற்றாண்டுல இருக்குற ஒரு கிராமம் அயலி தெய்வத்தை உருவாக்கி காவல் தெய்வமாக வழிபடுறாங்க. அந்த ஊர்ல இருக்குற ஒரு பொண்ணு வேற ஊர் பையன்கூட ஓடிப்போறாங்க . அதே நேரத்துல மாடுகள் இறந்து போகுது, பொது குளத்துல இருக்குற மீன்கள் எல்லாம் செத்து போகுது , குடிசைகள் எரியுது. ஊர் பொண்ணு ஓடிப்போனதுனாலதான் அயலி அம்மன் கோபத்துனாலதான் ஊர் இப்படி போனதுன்னு ஊர் நம்புறாங்க . அந்த இடத்துல வாழமுடியாததுல எல்லாரும் காலிசெஞ்சிட்டு புதுக்கோட்டை மாவட்டத்துக்கு குடியேறுறாங்க . அயலி மண்ணை எடுத்துவந்து ஒரு கோவில் கட்...
“பல பெண்களின் முழு வாழ்க்கையும் சமையலறையிலேயே கழிந்து விடுகிறது..” – தி கிரேட் இந்தியன் கிச்சன் ஐஸ்வர்யா ராஜேஷ்.

“பல பெண்களின் முழு வாழ்க்கையும் சமையலறையிலேயே கழிந்து விடுகிறது..” – தி கிரேட் இந்தியன் கிச்சன் ஐஸ்வர்யா ராஜேஷ்.

சினிமா
இயக்குநர் ஆர்.கண்ணன் இயக்கத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் "தி கிரேட் இந்தியன் கிச்சன்"படத்தை துர்காராம் சௌத்ரி மற்றும் நீல் சௌத்ரி தயாரித்துள்ளார்கள். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அப்படக்குழுவினர் பேசியதாவது.. நடிகை சுஹாசினி மணி ரத்னம் பேசும்போது, இந்த விழாவிற்கு கண்ணன் அழைக்கும்போது, அவர் அழைத்து எப்படி வராமல் இருப்பேன் என்று ஒப்புக் கொண்டேன். இப்போது இருக்கும் புது இயக்குநர்கள் அனைவரும் இவரிடம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். ஒரு காட்சியை 12 நாட்கள் படப்பிடிப்பு எடுக்கும்போது, ஒரு படத்தையே 12 நாட்களிலேயே எடுத்து விடுகிறார். சென்னையில் நல்ல ரசனையான நிகழ்ச்சி நடந்தால் நிச்சயம் போய் பாருங்கள். அப்போது தான் நாம் வளர முடியும். எனக்கு திறமை இருக்கிறது என்று நினைக்காமல் எல்லாவற்றையும் போய் பாருங்கள், கற்றுக் கொள்ளுங்கள். மெட்ராஸ் டாக...
விக்டரி வெங்கடேஷ் நடிப்பில் பான் இந்திய திரைப்படமாக தயாராகும் ‘சைந்தவ்’

விக்டரி வெங்கடேஷ் நடிப்பில் பான் இந்திய திரைப்படமாக தயாராகும் ‘சைந்தவ்’

சினிமா
விக்டரி வெங்கடேஷ் நடிக்கும் 'சைந்தவ்' தெலுங்கில் முன்னணி நட்சத்திர நடிகர் விக்டரி வெங்கடேஷ் நடிப்பில் தயாராகும் ' வெங்கி 75' என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருந்தப் படத்திற்கு 'சைந்தவ்' என பெயரிடப்பட்டு, டைட்டிலுக்கான காணொளியும், படத்திற்கான பிரத்யேக காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது. 'ஹிட்' பர்ஸ்ட் கேஸ் மற்றும் 'ஹிட்' செகண்ட் கேஸ் திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் சைலேஷ் கொலனு இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படம் 'சைந்தவ்'. இதில் தென்னிந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர் விக்டரி வெங்கடேஷ் கதையின் நாயகனாக நடிக்கிறார். எஸ். மணிகண்டன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இப்படத்தின் படத்தொகுப்பு பணிகளை பி. ஹெச். கேரி கவனிக்கிறார். அவினாஷ் கொல்லா தயாரிப்பு வடிவமைப்பாளராகவும், கிஷோர் தல்லூர் இணை தயாரிப்பாளராகவும் பணியாற்றுகிறார்கள். தமிழ்,...