Monday, April 27

Author: admin

ஒலிம்பியா மூவிஸ் எஸ். அம்பேத் குமார் வழங்கும் கணேஷ் கே பாபு இயக்கத்தில் கவின் – அபர்ணாதாஸ் நடிக்கும் ‘டாடா’ திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிப்ரவரி 10 வெளியாகிறது

ஒலிம்பியா மூவிஸ் எஸ். அம்பேத் குமார் வழங்கும் கணேஷ் கே பாபு இயக்கத்தில் கவின் – அபர்ணாதாஸ் நடிக்கும் ‘டாடா’ திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிப்ரவரி 10 வெளியாகிறது

சினிமா
ஒரு படத்துடைய வெற்றி இளைஞர்களின் நாடித்துடிப்பைக் கொண்டுதான் நிர்ணயம் ஆகிறது என்றால் கவின் -  அபர்ணாதாஸ் நடிக்கும் ‘டாடா’ திரைப்படம் அதை மிகச்சரியாக செய்துள்ளது. அதன் முதல் பார்வையில் இருந்து, அற்புதமான நடிகர்கள் தேர்வு, ட்ரெண்டியான பாடல்கள் ஆகியவை பார்வையாளர்களிடையே குறிப்பாக இளைஞர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. கவின், அபர்ணாதாஸ் படத்தின் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து இருப்பதால் இந்தப் படம் இளைஞர்களின் முதல் தேர்வாக இருப்பதில் ஆச்சரியமில்லை. ‘டாடா’ திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிப்ரவரி 10, 2023-ல் வெளியாகிறது என்பதை படக்குழு உறுதி செய்துள்ளது. ஒரு படத்தின் வெற்றிக்கு பாடல்களும் முக்கிய காரணம் எனும்போது ‘டாடா’ படத்தின் பாடல்கள், இசை ரசிகர்களைக் கவர்ந்திருக்கிறது. இதன் முதல் பாடலான ‘டாடா பாடல்’, ‘நம்ம தமிழ் ஃபோக்’ சமீபத்தில் வெளியான ’கிருட்டு கிருட்டு’ ஆகியவை பிப்ரவரி 10, 2...
44 கி.மீ தூரத்தை தனிநபராக குறைவான நேரத்தில் கடந்து சாதனை படைத்த 15 வயது மாணவி ஏ.ஜே.ரபியா சக்கியா

44 கி.மீ தூரத்தை தனிநபராக குறைவான நேரத்தில் கடந்து சாதனை படைத்த 15 வயது மாணவி ஏ.ஜே.ரபியா சக்கியா

விளையாட்டு
அதிவிரைவு தனிநபர் ஸ்கேட்டிங் மராத்தான்! - உலக சாதனை நிகழ்த்திய சென்னை மாணவி ஏ.ஜே.ரபியா சக்கியா ”ஓடி விளையாடு பாப்பா, நீ ஓய்ந்திருக்க லாகாது பாப்பா, கூடி விளையாடு பாப்பா, ஒரு குழந்தையை வையாதே பாப்பா” என்று பாரதியார் விளையாட்டின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் எழுதிய கவிதை, இன்று ஒவ்வொரு குழந்தைகளுக்கும் விளையாட்டு எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்துகிறது. படிப்பு மட்டும் ஒருவர் முன்னேற்றத்திற்கு போதாது, அவற்றுடன் கூடுதல் திறன் வேண்டும், அதிலும் விளையாட்டு திறன் என்பது மிக மிக முக்கியம், என்பதை தற்போதைய காலக்கட்டம் நிரூபித்து வருகிறது. இத்தகைய காலக்கட்டத்தில் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் இளைஞர்கள், வெற்றி, தோல்விகளை தாண்டி, சாதிக்க வேண்டும் என்ற துடிப்புடன் செயல்படுகிறார்கள். அந்த வகையில், சென்னையை சேர்ந்த 9ம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவி ஏ.ஜே.ரபியா சக்கியா, தனிநபர் ...
இயக்குனர் பா.இரஞ்சித் தயாரிப்பில் கவனத்தை ஈர்க்கும் யோகிபாபு வின் பொம்மை நாயகி பிப்ரவரி 3 வெளியீடு.

இயக்குனர் பா.இரஞ்சித் தயாரிப்பில் கவனத்தை ஈர்க்கும் யோகிபாபு வின் பொம்மை நாயகி பிப்ரவரி 3 வெளியீடு.

சினிமா
நடிகர் யோகிபாபு கதாநாயகனாக நடித்திருக்கும் படம் பொம்மை நாயகி. இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் இந்த படம் பிப்ரவரி 3 ம் தேதி வெளியாகிறது.தந்தை மகள் கதையாக இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. அறிமுக இயக்குனர் ஷான் இயக்கத்தில் யோகிபாபு, சுபத்ரா, ஹரி,ஜி என் குமார், அருள்தாஸ், ஜெயச்சந்திரன், லிசி ஆண்டனி, நடித்திருக்கிறார்கள் , யோகிபாபுவின் மகளாக ஸ்ரீமதி நடித்திருக்கிறார். எளிய குடும்பத்து தகப்பனுக்கும் மகளுக்கும் இந்த சமூகத்தால் ஏற்படும் ஒரு சம்பவமும், அதை எதிர்கொள்ளும் தகப்பனின் உணர்வுப்பூர்வமான கதைதான் பொம்மை நாயகி. யோகிபாபு இந்த படத்தில் தனது தனித்தன்மையான ஒரு நடிப்பை வழங்கியிருக்கிறார். கடலூர் மற்றும் சுற்றுவட்டாரங்களில் படப்பிடிப்பு நடைபெற்றிருக்கிறது. பிப்ரவரி 3 ம் தேதி தியேட்டரில் வெளியாகவிருக்கும் படம் யோகிபாபுவின்...
தணிக்கை குழுவினரின் பாராட்டை பெற்ற ‘மெய்ப்பட செய்’ திரைப்படம் ஜனவரி 27 ஆம் தேதி வெளியாகிறது

தணிக்கை குழுவினரின் பாராட்டை பெற்ற ‘மெய்ப்பட செய்’ திரைப்படம் ஜனவரி 27 ஆம் தேதி வெளியாகிறது

சினிமா
பாலியல் குற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வரும் ‘மெய்ப்பட செய்’! - ஜனவரி 27 ஆம் தேதி வெளியாகிறது ஹர்ஷித் பிக்சர்ஸ் (S R HARSHITH PICTURES) சார்பில் பி.ஆர்.தமிழ்செல்வம் தயாரிப்பில், வேலன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மெய்ப்பட செய்’. அறிமுக நடிகர் ஆதவ் பாலாஜி நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில், மதுனிகா நாயகியாக நடித்திருக்கிறார். இவர்களுடன் தயாரிப்பாளர் தமிழ்செல்வம், ஆடுகளம் ஜெயபாலன், ஓ.ஏ.கே.சுந்தர், இயக்குநர் ராஜ்கபூர், ராகுல் தாத்தா, சூப்பர் குட் சுப்பிரமணி, விஜய கணேஷ் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். முழுக்க முழுக்க குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ள ’மெய்ப்பட செய்’ பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்கள் குறித்து பேசியிருப்பதோடு, வேகமான காட்சிகளோடும், விறுவிறுப்பான திரைக்கதையோடும் அனைத்து தரப்பினருக்கும் பிடிக...
இரட்டை வேடத்தில் கலக்கும் ஜோஜு ஜார்ஜ்! வெளியானது இரட்டா ட்ரைலர்!

இரட்டை வேடத்தில் கலக்கும் ஜோஜு ஜார்ஜ்! வெளியானது இரட்டா ட்ரைலர்!

சினிமா
ஜோஜு ஜார்ஜ் நடிப்பில் உருவாகியுள்ள "இரட்டா" படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. பல சஸ்பென்ஸ்களை கொண்டு இந்த த்ரில்லர் உள்ளது. இந்த படத்தில் ஜோஜு ஜார்ஜ் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். ஜோஜு இரட்டை சகோதரர்களான வினோத் மற்றும் பிரமோத் ஆக நடித்துள்ளார். அறிமுக இயக்குனர் ரோஹித் எம்.ஜி.கிருஷ்ணன் இப்படத்தை இயக்கி உள்ளார். இப்படத்தில் தமிழ் - மலையாள நடிகை அஞ்சலி கதாநாயகியாக நடிக்கவுள்ளார். ஜோஜு ஜார்ஜுக்கு சொந்தமான அப்பு பாத்து பப்பு புரொடக்ஷன்ஸ், மார்ட்டின் பிரகாட் பிலிம்ஸ் மற்றும் சிஜோ வடகன் ஆகியோர் இப்படத்தை தயாரிக்கின்றனர். ஏற்கனவே மாநில மற்றும் தேசிய விருதுகளை பெற்றுள்ள ஜோஜு ஜார்ஜ் தனது கேரியரில் இன்னொரு திருப்புமுனையாக அமையும் என்பதை ட்ரைலர் உறுதிப்படுத்துகிறது. பல படங்களில் போலீஸ் வேடங்களில் நடித்திருக்கும் ஜோஜுவின் கேரியரில் இன்னொரு பவர்ஃபுல் போலீஸ் ரோலாக இருக்கும்...
வ.கெளதமன் இயக்கத்தில் தமிழர்களின் வீரம், அறம், ஈரத்தை சொல்லும் “மாவீரா” படப்பிடிப்பு விருத்தாசலம் அருகே தொடக்கம்!

வ.கெளதமன் இயக்கத்தில் தமிழர்களின் வீரம், அறம், ஈரத்தை சொல்லும் “மாவீரா” படப்பிடிப்பு விருத்தாசலம் அருகே தொடக்கம்!

சினிமா
சந்தன வீரப்பனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து 'சந்தனக்காடு' தொலைக்காட்சி தொடரை இயக்கியவர் இயக்குனர் கவுதமன். மண் மணமிக்க திரைப்படங்களை தமிழுக்கு தந்துள்ள படைப்பாளியான வ.கௌதமன், "கனவே கலையாதே" "மகிழ்ச்சி" திரைப்படங்களுக்கு பிறகு கதை, திரைக்கதை எழுதி இயக்கும் படத்திற்கு "மாவீரா" என்று பெயரிடப்பட்டிருக்கிறது. வி.கே புரடக்க்ஷன் குழுமம் தயாரிக்கும் இந்த படத்தில் வ.கௌதமன் நாயகனாக நடிக்க உடன் சமுத்திரக்கனி, ராதாரவி, மன்சூரலிகான், சரண்யா பொன்வண்ணன், அஸ்வினி சந்திரசேகர், இளவரசு, ஆடுகளம் நரேன், கிங்ஸ்லி, "பாகுபலி" பிரபாகர், தமிழ் கௌதமன், தீனா உள்ளிட்டவர்கள் நடிக்கிறார்கள். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். "கவிப்பேரரசு" வைரமுத்து உணர்வுமிக்க பாடல்களை எழுதுகிறார். ஒளிப்பதிவை வெற்றிவேல் மகேந்திரன் கையாள்கிறார். வசனங்களை பாலமுரளி வர்மன் தீட்ட, கலை இயக்கம் மோகனும், சண்டைப் பயிற்சியை "ஸ்டண்ட்...
ஓப்பன் ஸ்கிரீன் பிக்சர்ஸ் & ஜி பிக்சர்ஸ் ஆகியவை இணைந்து S.K. கனிஷ்க், GK. G. மணிகண்ணன்  வழங்கும் கார்த்தி இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிக்கும் ‘ரெய்டு’

ஓப்பன் ஸ்கிரீன் பிக்சர்ஸ் & ஜி பிக்சர்ஸ் ஆகியவை இணைந்து S.K. கனிஷ்க், GK. G. மணிகண்ணன்  வழங்கும் கார்த்தி இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிக்கும் ‘ரெய்டு’

சினிமா
நடிகர் விக்ரம் பிரபு தன்னுடைய தேர்ந்தெடுத்த சிறந்த கதைகள் மூலம் நல்ல படங்களைக் கொடுத்து வருகிறார். கடந்த வருடம் வெளியான 'டாணாக்காரன்' படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனை அடுத்து இப்போது 'ரெய்டு' படத்துடன் வருகிறார். தயாரிப்பாளர் S.K. கனிஷ்க் & GK. G. மணிகண்ணன் பேசியதாவது, "கன்னட படமான 'டகரு'-வை நாங்கள் பார்த்தபோது அந்த கதை பிடித்துப் போய் அதை தமிழில் ரீமேக் செய்ய முடிவெடுத்தோம். ஆனால், அதற்கு முன்பே இயக்குநர் முத்தையா சார் இதன் உரிமத்தை பெற்றுவிட்டார் என்பதை அறிந்தோம். நாங்கள் அவரை அணுகி பேசினோம். ஆனால், அப்போது 'விருமன்' பட வேலைகளில் பிஸியாக இருந்ததால் உடனடியாக ரீமேக் வேலைகளில் அவரால் ஈடுபட முடியவில்லை. ஆனால் அவர், நாங்கள் விருப்பப்பட்டால் அவருடைய அசிஸ்டெண்ட் கார்த்தியை வைத்து படம் இயக்கவும் இந்தப் படத்திற்கு வசனங்கள் எழுதவும் ஆர்வம் காட்டினார். இயக்குநரை முதலில் நாங்கள் பார்த்தப...
பிரத்யேக ஸ்டைலில் ஆடை அணிந்ததற்காக பாராட்டுகளை குவிக்கும் ராம் சரண்

பிரத்யேக ஸ்டைலில் ஆடை அணிந்ததற்காக பாராட்டுகளை குவிக்கும் ராம் சரண்

சினிமா
ஃபேஷன் ஐகானான ராம் சரண் இன்று இந்திய திரையுலகம், தெலுங்கு திரையுலகத்தை வியந்து பார்க்கும் காலகட்டம் இது. பிரம்மாண்டமான படைப்புகளால் உலக அளவிலான ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கும் தெலுங்கு திரையுலகம், அதில் பணியாற்றும் கலைஞர்களும் தங்களை சர்வதேச அளவில் உயர்த்திக் கொண்டிருக்கிறார்கள். சர்வதேச அளவில் புகழ்பெற்ற திரைப்பட விழாக்களில் நவீன பாணியிலான உடைகளை அணிந்து சிறப்பாக தோன்றும் நட்சத்திரங்களைப் பட்டியலிட்டு, அவர்களை பாராட்டும் மரபும் ஹாலிவுட்டில் உண்டு. அந்த வகையில் அண்மையில் நடைபெற்ற சர்வதேச விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்ட நட்சத்திரங்களுக்கு வழங்கப்படும் சிவப்பு கம்பள வரவேற்பில் தனித்துவமான முறையில் வடிவமைக்கப்பட்ட ஆடையுடன் தோன்றிய நட்சத்திரங்களின் பட்டியலில் இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரமான ராம் சரண் இடம் பிடித்திருக்கிறார். இதற்காக அவருக்கு பலர் சமூக ஊடகங்களில் மூலமாகவு...
 சத்யஜோதி ஃபிலிம்ஸ் T.G. தியாகராஜன் வழங்கும் பிளாக்பஸ்டர் வெற்றிக்கூட்டணி நடிகர் விஷ்ணு விஷால் & இயக்குநர் ராம்குமார் மூன்றாவது முறையாக இணையும் திரைப்படம் 

 சத்யஜோதி ஃபிலிம்ஸ் T.G. தியாகராஜன் வழங்கும் பிளாக்பஸ்டர் வெற்றிக்கூட்டணி நடிகர் விஷ்ணு விஷால் & இயக்குநர் ராம்குமார் மூன்றாவது முறையாக இணையும் திரைப்படம் 

சினிமா
சத்ய ஜோதி ஃபிலிம்ஸ், இந்தியத் திரையுலகின் மிகவும் மதிப்புமிக்க மற்றும் பெருமை மிகு தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக, உலகளாவிய பார்வையாளர்களின் ரசனைக்கு ஏற்றவாறு எண்ணற்ற பிளாக்பஸ்டர் மற்றும் விருதுகள் பெற்ற திரைப்படங்களை வெளியிட்டு நம்பமுடியாத சாதனை படைத்துள்ளது. திரு. T.G. தியாகராஜன் 20 க்கும் மேற்பட்ட மாநில அரசு வென்ற படங்கள் மற்றும் 4 தேசிய விருது பெற்ற படங்களை தயாரித்துள்ளார். இந்நிறுவனத்தின் தயாரிப்பில் 'மரகத நாணயம்' புகழ் ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கத்தில், ஹிப்ஹாப் தமிழாவின் 'வீரன்' மற்றும் தென்னிந்தியாவின் மிகப்பெரிய திரைப்படங்களில் ஒன்றான 'கேப்டன் மில்லர்' உள்ளிட்ட நம்பிக்கைக்குரிய திரைப்படங்கள்  உருவாக்கத்தில் உள்ளன. கேப்டன் மில்லர் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ், கன்னட சூப்பர் ஸ்டார் டாக்டர் சிவ ராஜ்குமார், தெலுங்கு இண்டஸ்ட்ரியின் ம...
மனோஜ்குமார் மஞ்சு, 6ix Cinemas , வருண் கொருகொண்டா இணையும் “வாட் த ஃபிஷ்” !!

மனோஜ்குமார் மஞ்சு, 6ix Cinemas , வருண் கொருகொண்டா இணையும் “வாட் த ஃபிஷ்” !!

சினிமா
தெலுங்கு திரையுலகின் முன்னணி இளம் நாயகன் ராக்கிங் ஸ்டார் மனோஜ்குமார் மஞ்சு ஆறு வருடங்களுக்குப் பிறகு, திரை ரசிகர்களை உற்சாகம் கொள்ள வைக்கும்படி அதிரடி ஆக்சனோடு களம் இறங்குகிறார். 6ix Cinemas தயாரிப்பில் அறிமுக இயக்குனர் வருண் கதை திரைக்கதையில் உருவாகும், இப்படத்திற்கு வித்தியாசமாக 'வாட் தி ஃபிஷ்' 'WHAT THE FISH' என பெயரிடப்பட்டுள்ளது. இந்தப்பெயரே படத்தின் மீதான ஆர்வத்தை தூண்டுவதாக அமைந்துள்ளது. உலகத்தரத்தில் அமைந்துள்ள இப்படத்தின் அறிவிப்பு போஸ்டர் ரசிகர்களிடம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. படத்தின் போஸ்டர் படத்தின் மையத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. தெரியாத பல அமானுஷ்யங்களை மனோஜ்குமார் மஞ்சு எதிர்கொள்ளத் தயாராகி வருவதாகத் தெரிகிறது. போஸ்டரில் இருக்கும் பல வகை சித்திரங்கள் நமக்குள் பெரும் ஆவலைத் தூண்டுவதாக அமைந்துள்ளது. மனோஜின் இந்த புதிய அவதாரம் ரசிகர்களுக்கு விருந்தாக அமை...