Thursday, April 23

“அயலி ” தமிழ் வெப் சீரிஸ்- விமர்சனம்

“அயலி ” என்ற தொடரை Estrella stories சார்பில் தயாரிப்பாளர் S. குஷ்மாவதி தயாரிக்க, இயக்குநர் முத்துக்குமார் இயக்குயுள்ளார்.. எட்டு தொடர்களான இதில்  அபிநட்சத்திரா , அனுமோல், அருவி மாதவன் , லிங்கா மற்றும் சிங்கம்புலி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர், இது ZEE5 இல் ஜனவரி 26 முதல் ஒளிபரப்பாக இருக்கிறது.

14 நூற்றாண்டுல இருக்குற ஒரு கிராமம் அயலி தெய்வத்தை உருவாக்கி காவல் தெய்வமாக வழிபடுறாங்க. அந்த ஊர்ல இருக்குற ஒரு பொண்ணு வேற ஊர் பையன்கூட ஓடிப்போறாங்க . அதே நேரத்துல மாடுகள் இறந்து போகுது, பொது குளத்துல இருக்குற மீன்கள் எல்லாம் செத்து போகுது , குடிசைகள் எரியுது. ஊர் பொண்ணு ஓடிப்போனதுனாலதான் அயலி அம்மன் கோபத்துனாலதான் ஊர் இப்படி போனதுன்னு ஊர் நம்புறாங்க . அந்த இடத்துல வாழமுடியாததுல எல்லாரும் காலிசெஞ்சிட்டு புதுக்கோட்டை மாவட்டத்துக்கு குடியேறுறாங்க . அயலி மண்ணை எடுத்துவந்து ஒரு கோவில் கட்டுறாங்க .

கதை 1990 வருடத்தில் பயணிக்குது. அந்த ஊர் பொண்ணுக வயசுக்கு வந்ததும் உடனே அந்த ஊர் பையனை தவிர எந்த வெளியூர் பையன்னுக்கு கொடுக்ககூடாது.எந்த பொண்ணும் ஊரைவிட்டு எதுக்காவும் வெளிய போகக்கூடாது மேலும் பெண் பசங்க அதே ஊர்ல 10 வரை மட்டுமே இருக்குற ஸ்கூல்ல மட்டுமே படிக்கணும் என்கிற கட்டுப்பாடும் இருந்தது இந்த கட்டுப்பாட்டை மீறினால் அயலி தெய்வத்துக்கு கோபத்துக்கு ஆளாகிவிடுவோம் என்ற நம்பிக்கையோட பல வருடங்களாக மக்கள்அங்க வாழுறாங்க . பக்கத்துல எந்த ஊருக்கு மாறினாலும் இவங்க அப்படியேதான் இருக்காங்க .இந்த சூழ்நிலையில அந்த ஊர்ல இருக்குற ஸ்கூல்ல படிக்குற தமிழ் செல்வி எப்படியாவது டாக்ட்ர் ஆகணும் என்கிற கனவோட இருக்காங்க . தன்கூட படிக்குற பசங்க வயசுக்கு வர படிப்பை நிறுத்திட்டு கல்யாணம் செஞ்சி வெச்சிடுறாங்க என்பதை தெரிஞ்சுக்கிட்ட தமிழ்செல்வி ,எங்க நாம வயசுக்கு வந்துட்டா தனக்கும் கல்யாணம் பண்ணிடுவாங்கன்னு என்பதால வயசுக்கு வந்த விஷயத்தை மறைச்சுடுறாங்க . ஒருகட்டத்துல அம்மாவுக்குஇந்த விஷயம் தெரியுது . எப்படியாவது டாக்டர் ஆகணும் சொல்லி அம்மாவை சமாதான படுத்தி ரெண்டுபேரும் இந்த விஷயத்தை மறைக்குறாங்க .அந்த ஊரோட 10வதுபடிக்கும் முதல் பெண்ணா தமிழ் செல்வி படிக்கிறாங்க .

ஒரு பக்கம் இன்னுமா வயசுக்கு வரல என்ற மக்கள் பேச்சை பத்தி கவலப்படமா தமிழ்செல்வி படிக்கிறாங்க… இத்தனை ஊர் கட்டுப்பாட்டையும் மீறி அவங்க எண்ணம் நிறைவேறிச்சா இல்லை , வயசுக்கு வந்த விஷயம் தெரிஞ்சிப்போய் கல்யாணம் செஞ்சு வெச்சாங்களா? தமிழ் செல்வி நிலையோட நிலை என்னாச்சி?.என்பதுதான் அயலியோட கதைக்களம்.

பழங்கால பழக்க வழக்கங்களையும் சடங்குகளையும் உடைத்து, தனது தேடலை அடைய போராடும் இளம் பெண்ணின் வாழ்வியல் பயணத்தை கூறும் இந்தத் தொடர் பெண்களின் கல்வி, அதிகாரம் மற்றும் கனவுகளை அடைய அனைத்து முரண்பாடுகளுக்கு எதிராகவும் போராடும் வலிமையை கூறும் வண்ணமாக அமைக்கப்பட்டுள்ளது சமூக கருத்துடன் கூடிய கதை அம்சத்தை கொண்டுள்ள இந்த அயலியை இயக்குனர் முத்துக்குமார் மிக சிறப்பாக இயக்கியுள்ளார்.

Spread the love