அயோத்தி- விமர்சனம்
அயோத்தியில் பல்ராம் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார் அவர் அவர் தனது மனைவி, மகள், மகனுடன் ராமேஸ்வரத்திற்கு யாத்திரை பயணம் மேற்கொள்கிறார். ரயிலில் மதுரை வந்து அங்கிருந்து ராமேஸ்வரத்திற்கு வாடகை காரில் அவர்கள் குடும்பத்துடன் செல்லும் வழியில் கார் விபத்துக்குள்ளாகிறது. அந்த விபத்தில் நாயகியின் அம்மா உயிர் இழக்கிறார். அந்த உடலை சொந்த ஊருக்கு அவர்கள் கொண்டு செல்ல வேண்டிய நிலையில், அந்தக் கார் டிரைவரின் நண்பனான சசிகுமார், இறந்த உடலை விமானத்தில் கொண்டு செல்ல தனது நண்பர்களின் மூலம் முயற்சிக்கிறார்.இறுதியில் அந்த உடலுக்குப் பிரேத பரிசோதனை நடந்ததா? அந்த உடல் அயோத்திக்கு கொண்டு செல்லப்பட்டதா?. என்பதுதான் இப்படத்தின் மீதி கதை.
கதையின் நாயகனாக ஆனால் வழக்கமான பாணியிலிருந்து மாறுபட்ட கதாபாத்திரத்தில், யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் சசிகுமார் .ப்ரீத்தி அஸ்ராணி, கதைக்கு தேவையான எமோஷனல...









