Wednesday, April 29

Author: admin

தமிழ் சினிமாவில் ‘ போர் தொழில்’ மூலம் நேரடியாக களமிறங்கும் அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட்

தமிழ் சினிமாவில் ‘ போர் தொழில்’ மூலம் நேரடியாக களமிறங்கும் அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட்

சினிமா
ஆர். சரத்குமார் மற்றும் அசோக் செல்வன் நடிப்பில் தயாராகி இருக்கும் 'போர் தொழில்' எனும் திரைப்படத்தினை தயாரித்திருப்பதன் மூலம், இந்தியாவின் பிரபலமான தயாரிப்பு நிறுவனமான அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட் தமிழ் திரையுலகில் நேரடியாக களமிறங்கியிருக்கிறது. இந்தியாவின் வித்தியாசமான உள்ளடக்கத்துடன் கூடிய படைப்புகளை தயாரிப்பதில் பெயர் பெற்ற நிறுவனம் அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட். இந்நிறுவனம் இ4 எக்ஸ்பிரிமெண்ட்ஸ் மற்றும் எப்ரியஸ் ஸ்டுடியோ ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து புலனாய்வு திரில்லர் ஜானரிலான 'போர் தொழில்' எனும் திரைப்படத்தை தயாரித்து வெளியிடுகிறது. அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தில் அசோக் செல்வன், சரத்குமார், நிகிலா விமல் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். தயாரிப்பாளர்கள் இப்படத்தின் டைட்டிலை இன்று வெளியிட்டிருக்கிறார்கள். இதற்காக ப...
சபரிமலையில் நடைபெற்று வரும் யோகிபாபுவின் ‘சன்னிதானம் PO’ படப்பிடிப்பு

சபரிமலையில் நடைபெற்று வரும் யோகிபாபுவின் ‘சன்னிதானம் PO’ படப்பிடிப்பு

சினிமா
'சன்னிதானம் PO' படப்பிடிப்பில் இணைந்த 'யோகிபாபு'..! விவிகே என்டர்டெயின்மென்ட், சர்வதா சினி கேரேஜ் மற்றும் ஷிமோகா கிரியேஷன்ஸ் சார்பில் வி விவேகானந்தன், மதுசூதன் ராவ் மற்றும் ஷபீர் பதான் ஆகியோர் இணைந்து தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளில் தயாரித்து வரும் படம் 'சன்னிதானம் PO'. இந்தப்படத்தை ராஜீவ் வைத்யா இயக்குகிறார். நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல் தொடர்ந்து கதையின் நாயகனாகவும் வெற்றி பவனி வரும் யோகிபாபு இந்தப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். பிரபல நடிகர் சுரேஷ்கோபியின் மகன் கோகுல் சுரேஷ், வேலராமமூர்த்தி, பிரமோத் ஷெட்டி, மேனகா சுரேஷ், வினோத் சாகர், வர்ஷா விஸ்வநாத், மித்ரா குரியன் ஆகியோர் இந்தப்படத்தில் நடிக்கின்றனர். மேலும் இதில் கன்னட நடிகர் அஸ்வின் ஹாசன் மற்றும் தமிழ் திரைப்பட குழந்தை நட்சத்திரம் ராக்ஸ் ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந...
சர்வதேச ஓவிய கண்காட்சியில் ஷாம்லியின் படைப்புகள்

சர்வதேச ஓவிய கண்காட்சியில் ஷாம்லியின் படைப்புகள்

சினிமா, செய்திகள்
ஓவிய கலைஞராக மிளிரும் ஷாம்லி சிறந்த நடிப்பிற்கான தேசிய விருதை பெற்றவர் பேபி ஷாம்லி. இவர் குமரியான பிறகு கதையின் நாயகியாக பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். பொருத்தமான வாய்ப்பிற்காக காத்திருக்கும் காலகட்டத்தில்.., ஓவியம் மற்றும் நாட்டிய கலைகளை ஆர்வத்துடன் கற்கத் தொடங்கினார். ஓவிய துறையில் மேதையான ஏ. வி. இளங்கோவின் வழிகாட்டலுடன் ஓவியம் வரைவதில் கவனம் செலுத்தினார். இந்தத் துறையில் இடைவிடாத பயிற்சி, விடாமுயற்சி, அர்ப்பணிப்புடன் கூடிய கடின உழைப்பு.. ஆகியவற்றின் காரணமாக அவர் ஏராளமான ஓவிய படைப்புகளை உருவாக்கத் தொடங்கினார். அவர் வரைந்த ஓவிய படைப்புகளை தற்போதைய காலகட்டத்திற்கு ஏற்ற வகையில் வண்ணமயமான சட்டகத்தில் பொருத்தி காட்சிப்படுத்தியிருக்கிறார். ‌ இவரது படைப்புகளில் இடம்பெறும் பெண்கள்.. தங்களின் சுதந்திரமான ஆன்மாவை வெளிப்படுத்துவது போல் உள்ளன. சில படைப்புகளில் பெண்கள் தங்களுடைய சமூக...
‘ருத்ரன்’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை பிருந்தாவனம் முதியோர் இல்லத்தில் பயனுள்ள முறையில் கொண்டாடிய தயாரிப்பாளர்-இயக்குநர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் மற்றும் படக்குழுவினர்

‘ருத்ரன்’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை பிருந்தாவனம் முதியோர் இல்லத்தில் பயனுள்ள முறையில் கொண்டாடிய தயாரிப்பாளர்-இயக்குநர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் மற்றும் படக்குழுவினர்

சினிமா
முன்னணி தயாரிப்பாளர் கதிரேசன் இயக்கி, ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் எல்எல்பி பேனரில் தயாரித்து ராகவா லாரன்ஸ் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘ருத்ரன்’ திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்து ரசிகர்களின் அமோக ஆதரவுடன் அரங்கு நிறைந்த காட்சிகளாக தமிழகம் எங்கும் முத்திரை பதித்து வருகிறது. இந்த வெற்றியை பயனுள்ள வகையில் கொண்டாடும் விதமாக தயாரிப்பாளர்-இயக்குநர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன், கதாசிரியர் திருமாறன் மற்றும் நடிகர் இளவரசு ஆகியோர் சென்னையில் உள்ள பிருந்தாவனம் முதியோர் இல்லத்திற்கு சென்று அங்குள்ளவர்களுடன் உரையாடி உணவும், நன்கொடையும், அத்தியாவசிய பொருட்களும் அளித்து மகிழ்ந்தனர். இது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த ஃபைவ் ஸ்டார் கதிரேசன், "ருத்ரன் திரைப்படத்திற்கு தங்களது மேலான ஆதரவை அளித்த ரசிகப்பெருமக்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இப்படத்தின் மையக்கருவே வயது முதிர்ந்த பெற்றோர்களை...
35 விருதுகளை வென்றுள்ள ‘காகிதம் ‘குறும்படத்தின் டீசரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார்

35 விருதுகளை வென்றுள்ள ‘காகிதம் ‘குறும்படத்தின் டீசரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார்

சினிமா
விஜய் சேதுபதி வெளியிட்டுள்ள 'காகிதம்' குறும்படத்தின் டீசர்! பல்வேறு திரை விழாக்களில் திரையிடப்பட்டு 35 விருதுகளை வென்றுள்ளது காகிதம் என்கிற குறும்படம். இந்த குறும்படத்தை, ஓஷன்ஸ் ட்ராப்ஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் திருமதி தீபா இஸ்மாயில் என்பவர் தயாரித்துள்ளார்.வினோத் வீரமணி இயக்கியுள்ளார்.இதில் முன்னணி கதாபாத்திரத்தில் சிறுமி மதிஹா நடித்து அசத்தியுள்ளார். வினோத் வீரமணி தற்போது வளர்ந்து வரும் ஒரு திறமையான இளம் இயக்குநர். இந்தக் குறும்படம் பற்றித் தயாரிப்பாளர் தீபா கூறும் போது, " உரிமையும் வெற்றியும் இவ்வுலகில் அனைவருக்கும் சமமே; அவ்வாறு ஆற்றலும் திறமையும் அனைவருக்கும் இறைவன் கொடுத்த வரமே. இந்தக் கண்ணோட்டத்தில் இன்றும் கூட நம் சமுதாயத்தில் மிகச் சிறந்த ஆற்றலும் அறிவும் படைத்த பெரும்பாலான மக்கள் குறைந்த பட்ச சமுதாய மதிப்பும் இல்லாமல் வாழ்கிறார்கள். உரிய அடையாளமும் கிடைக்காமல் உழல்கிறார்கள...
ZEE5 தளத்தின் அடுத்த அதிரடி வெளியீடு, “ஒரு கோடை Murder Mystery” திரில்லர் வெப் சீரிஸ் !

ZEE5 தளத்தின் அடுத்த அதிரடி வெளியீடு, “ஒரு கோடை Murder Mystery” திரில்லர் வெப் சீரிஸ் !

சினிமா
“ஒரு கோடை Murder Mystery” திரில்லர் வெப் சீரிஸ், ZEE5 தளத்தில் ஏப்ரல் 21 முதல் !! தமிழில் தொடர்ந்து தரமான படைப்புகளைத் தந்து, ரசிகர்களைக் கவர்ந்து வரும், இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5 தளம், தனது அடுத்த வெளியீடாக, “ஒரு கோடை Murder Mystery” திரில்லர் வெப் சீரிஸை வெளியிடுகிறது. பள்ளி மாணவர்களின் வாழ்க்கைப் பின்னணியில், புதுமையான திரில்லராக இந்த வெப்சீரிஸ் உருவாகியுள்ளது. Sol Production Pvt.Ltd சார்பில் ஃபாசிலா அல்லானா, கம்னா மெனேசஸ் தயாரித்துள்ள இந்த வெப்சீரிஸை, இயக்குநர் விஷால் வெங்கட் இயக்கியுள்ளார். திரைக்கதை வசனத்தை N பத்மகுமார் மற்றும் ரோஹித் நந்தகுமார் எழுதியுள்ளனர். பள்ளியில் படித்து வரும் கூச்ச சுபாவம் கொண்ட இளைஞன் வியோம், அவனுக்கு தன்னுடன் வினாடி வினா நிகழ்ச்சியில் பங்குகொள்ளும் தாரா மீது ஈர்ப்பு வருகிறது. அவனும் தாராவும் சந்திக்கத் திட்டமிட்டிருந்த நாளில் தாரா காணா...
ரசிகர்களின் ஆவலைத் தூண்டும் “அவள் பெயர் ரஜ்னி” டீசர் வெளியீடு !!

ரசிகர்களின் ஆவலைத் தூண்டும் “அவள் பெயர் ரஜ்னி” டீசர் வெளியீடு !!

சினிமா
எதிர்பார்ப்பை எகிற வைக்கும் “அவள் பெயர் ரஜ்னி” டீசர் !! நவரசா ஃபிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் வினில் ஸ்கரியா வர்கீஸ் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம் நடிக்கும் “அவள் பெயர் ரஜ்னி” படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. பரபரப்பான திரில் அனுபவம் தரும் டீசர், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி இளம் நட்சத்திரமாக வலம் வரும் நடிகர் காளிதாஸ் ஜெயராம் நடிப்பில், விக்ரம், நட்சத்திரம் நகர்கிறது படங்களின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு வெளியாகும், அடுத்த திரைப்படம் இதுவென்பது குறிப்பிடதக்கது. தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளில் உருவாகியுள்ள இப்படம், நொடிக்கு நொடி திருப்பங்களுடன் ரசிகர்களை இருக்கை நுனியில் வைக்கும், துப்பறியும் வகை திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ளது. தற்போது வெளியாகியுள்ள டீசரில், ஒரு பரபரப்பான விசாரணை, அதன் பின்னால் அவிழும் பல முடிச்சுகள், காளிதாஸ் ...
பிரசாந்த் வர்மா -தேஜா சஜ்ஜா- பிரைம் ஷோ என்டர்டெய்ன்மெண்ட் கூட்டணியில் தயாராகி வரும் ‘ ஹனு-மேன்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக் குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

பிரசாந்த் வர்மா -தேஜா சஜ்ஜா- பிரைம் ஷோ என்டர்டெய்ன்மெண்ட் கூட்டணியில் தயாராகி வரும் ‘ ஹனு-மேன்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக் குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

சினிமா
படைப்புத்திறன் மிகு இயக்குநர் பிரசாந்த் வர்மாவின் இயக்கத்தில் தயாராகி வரும் 'ஹனு -மேன்' திரைப்படத்தில் தேஜா சஜ்ஜா கதையின் நாயகனாக நடித்து வருகிறார். இந்த படம் வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டபடி நிறைவடைந்திருக்கிறது. படப்பிடிப்பின் இறுதி நாளன்று பிரம்மாண்டமான படப்பிடிப்பு தளக் காணொளியை படக் குழுவினர் வெளியிட்டனர். படத்தின் தயாரிப்பு பணிகளை நிறைவு செய்ய 130 நாட்களாகி இருக்கிறது. இந்த திரைப்படத்திற்கு இந்தியா முழுவதும் படப்பிடிப்பு நடத்தப்பட்டு இருக்கிறது. தற்போது படத்தின் இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இயக்குநர் பிரசாந்த் வர்மா, பார்வையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதற்காகவும், படத்தின் தரத்திற்காகவும் கடுமையாக உழைத்து வருகிறார். இப்படத்தின் டீசர் இணையதளத்தில் வெளியாகி பெரும் அதிர்வையும், தாக்கத்தையும் ஏ...
Etaki Entertainment பெருமையுடன் வழங்கும்  சித்தா படத்தை , S.U. அருண் குமார்  எழுதி இயக்க, பான் இந்தியன் ஸ்டார் சித்தார்த் கதாநாயகனாக நடிக்கிறார்.

Etaki Entertainment பெருமையுடன் வழங்கும் சித்தா படத்தை , S.U. அருண் குமார் எழுதி இயக்க, பான் இந்தியன் ஸ்டார் சித்தார்த் கதாநாயகனாக நடிக்கிறார்.

சினிமா
ஏப்ரல் 17, 2023: 'காதலில் சொதப்புவது எப்படி', 'ஜில் ஜங் ஜக்' மற்றும் 'அவள்' ஆகிய படங்களின் வெற்றியைத் தொடர்ந்து எங்களின் நான்காவது தயாரிப்பு (Production No.4) குறித்து அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். எங்களுடைய முயற்சிக்கு வாழ்த்து தெரிவித்து படத்தின் டைட்டில் மற்றும் முதல் பார்வையை வெளியிட ஒத்துக் கொண்ட லெஜெண்ட் டாக்டர். கமல்ஹாசன் அவர்களுக்கு நன்றி. எங்களுடைய அன்பு எப்போதும் அவருக்கு உண்டு. Etaki Entertainment பெருமையுடன் 'சித்தா' (சித்தப்பா/ Uncle என்பதன் சுருக்கம்) படத்தை வழங்குகிறது. S.U. அருண் குமார் (பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி) இந்தப் படத்தை எழுதி இயக்க, பான் இந்தியன் ஸ்டார் சித்தார்த் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த அற்புதமான இணை கமர்ஷியலாகவும் வர்த்தக வட்டாரத்திலும் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக்குழு குறித்த...
 நடிகர் சித்தார்த்தின் பிறந்தநாளில் ‘டக்கர்’ க்ளிம்ப்ஸ் வெளியாகி உள்ளது

 நடிகர் சித்தார்த்தின் பிறந்தநாளில் ‘டக்கர்’ க்ளிம்ப்ஸ் வெளியாகி உள்ளது

சினிமா
நடிகர் சித்தார்த்தின் 'டக்கர்' திரைப்படம் இந்த வருடத்தின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக உள்ளது. மேலும், இதன் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக, ’நீரா நீரா’ பாடல் தொடர்ந்து அனைவரின் பிளேலிஸ்ட்டிலும் டிரெண்டாகி வருகிறது. இப்படம் மே 26, 2023 அன்று உலகம் முழுவதும் திரைக்கு வரும் என்பதை இப்போது தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளனர் மற்றும் சித்தார்த்தின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் க்ளிம்ப்ஸையும் இன்று (ஏப்ரல் 17, 2023) படக்குழு வெளியிட்டுள்ளது. அடுத்த தலைமுறையை ஈர்க்கும் வகையில் காதல், எமோஷன் மற்றும் ஆக்‌ஷன் காட்சிகளுடனும் இளமை துள்ளலுடனும் பார்வையாளர்களை கவர உள்ளது. சித்தார்த், யோகிபாபு, திவ்யான்ஷா, அபிமன்யுசிங், விக்னேஷ்காந்த், ராம்தாஸ் உள்ளிட்ட பல நட்சத்திர நடிகர்கள் டக்கரில் நடித்துள்ளனர் ’டக்கர்’ தமிழ் மற்றும...