ராம்சரண் – உபாசனா நட்சத்திர தம்பதிகளின் பிரத்யேக காணொளி படைத்திட்ட புதிய சாதனை
மீண்டும் புதிய சாதனை படைத்திருக்கும் ராம்சரண்- உபாசனா தம்பதிகள்
வேனிட்டி ஃபேர் எனும் சர்வதேச அளவில் பிரபலமான யூடியூப் சேனலில் ஆஸ்கார் விருதினை பெறுவதற்காக நட்சத்திர தம்பதிகளான ராம்சரண்- உபாசனா, தங்கி இருந்த அறையில் தயாராகும் காணொளி வெளியானது. இந்த காணொளி மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களை பெற்று புதிய சாதனை படைத்திருக்கிறது.
உலகம் முழுவதும் மில்லியன் கணக்கிலான ரசிகர்களை வசப்படுத்தி இருக்கும் முன்னணி இந்திய நட்சத்திரமான ராம்சரண் தொடர்பான பிரத்யேக காணொளி, வேனிட்டி ஃபேர் என்னும் யூட்யூப் சேனலில் வெளியானது. 'ஆர். ஆர். ஆர்' நட்சத்திர நடிகர் ராம்சரண் ஆஸ்கார் விருதுக்கு தயாராகிறார்' என்ற பெயரில் வெளியான இந்த காணொளி, ஆறரை மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு புதிய சாதனை படைத்திருக்கிறது. இதுவரை இந்த வேனிட்டி ஃபேர் எனும் யூட்யூப் சேனலில் அதிகம் பார்வையிடப்பட்ட காணொள...









