குடும்ப கதை திரைப்படங்களில் குறைந்துவிட்ட காலகட்டத்தில் , குடும்ப கதை என்பதைவிட இந்திய குடும்ப ங்களை பிரதிபலிக்கும் கதை என்ற வகையில் உருவாகியுள்ளது இந்த‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’
சமையல்தொடங்கி அன்றாடவாழ்வியலில் நடைமுறைகள் என அனைத்திலும் பழைய பஞ்சாங்கமான ராகுல் ரவீந்திரனை மணந்து கணவன் வீட்டுக்கு வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ் ,கணவர் தொடங்கி, குடும்ப
உறுப்பினர்களுக்கு காலை முதல் இரவு வரை சமைப்பதும் , பரிமாறுவதும் , வீட்டை சுத்தம் செய்வதுமாய் ஓயாத உழைப்பை தரும் விதமாக அவரது வாழ்கை நகர்கிறது ,இந்த சூழ்நிலையிலிருந்து விடுபட அவர் எடுக்கும் முடிவு என்ன? என்பது இந்த படத்தின் மீதி கதை .

வீட்டைச் சுற்றியே கதை பயணித்தாலும் பார்க்கும் ரசிகர்களுக்கு எந்த வித சலிப்பும் தராத வகையில் சிறப்பான கேமரா கோணங்களை கொண்டு கண்களுக்கு விருந்து கொடுத்துள்ளார் ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியம். படத்தொகுப்பில் லியோ ஜான் பாலும், பின்னணி இசையை பொருத்தமட்டில் ஜெர்ரி சில்வஸ்டர் வின்சன்ட்டின் பங்களிப்பும் நிறைவானது, சின்ன சின்ன ஒலி குறிப்புகளையும் அழகுற அமைத்துள்ள ஒலிப்பதிவும் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறது.

திருமணமாகி புகுந்த வீட்டுக்குள் ஆயிரம் கனவுகளுடன் நுழையும் கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் பண்பட்ட நடிப்பை கொடுத்துள்ளார். இந்த படம் அவருக்கு பல புதிய ரசிகர்களை குறிப்பாக பெண் ரசிகைகளை ஏற்படுத்தி கொடுக்கும் என்பது உண்மை. பல குடும்ப பெண்களின் குரலை அவரது குரல் இந்த படத்தில் ஒலித்துள்ளது.

மலையாளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற `தி கிரேட் இண்டியன் கிச்சன்’ (The Great Indian Kitchen) படத்தைத் தமிழில் ரீமேக் செய்திருக்கும் இயக்குநர் ஆர்.கண்ணன்,.அசல் பதிப்பின் சாயலும் வராத வண்ணமுமாய் அதே சமயத்தில் அசலின் சாராம்சம் மாறாத வண்ணுமுமாய் சிறப்பாய் படத்தை இயக்கியுள்ளார் .
ஆணாதிக்கம் அரசாளும் இந்தியக் குடும்ப அமைப்புகளின் பாரபட்ச கட்டமைப்புகளை காட்சி வடிவில் பதிவு செய்துள்ள இந்த படம் பெண்கள் பார்க்க வேண்டிய படம் என்றால் அதைவிட ஒவ்வொரு இந்திய ஆண்களும் கட்டாயம் பார்க்க வேண்டிய படம் என்பதை சித்தரிக்கும் விதத்தில் ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’ உருவாக்கப்பட்டுள்ளது
