Friday, April 17

Red Label – விமர்சனம்

 மாற்றம் ஒன்றே மாறாதது அந்த மாற்றத்தை நாம் உருவாக்க வேண்டும் என தமிழ் சினிமாவின் வெற்றி பெற்றவர்களும், தமிழ் திரைக்கு அறிமுகபடுத்தி தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள நினைப்பவர்களும் ஒரு புது மாற்றத்தையும் மற்றவர்களிடமிருந்து தங்களை தனித்துவமாக வித்தியாசப்படுத்திக் கொள்வதற்கும் முயற்சிகளை மேற்கொள்வார்கள். அந்த வகையில் ரெட் லேபிள் படக் குழுவும் தங்களை அடையாளப்படுத்த ஏதோ ஒரு வகையில் தங்களை வித்தியாசப்படுத்திக் கொள்ள முயற்சி செய்திருக்கிறார்கள்.


Revgen film factory banner- ல லெனின் கதாநாயகனாக நடித்தும் அதோடு படத்தை தயாரித்தும் இருக்க, அவருடன் அஸ்மின், R.V உதயகுமார், முனீஸ் காந்த், அனுமோகன் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் Red Label.

 கோவையில் இருக்கிற ஒரு காலேஜ்ல அந்த ஊர் எம் எல் ஏ வா இருக்கிற ஆர் வி உதயகுமார் உடைய மகனும், மகள் அஸ்மின் ரெண்டு பேரும் படிக்கிறாங்க. அந்த காலேஜ்ல படிச்சு முடிச்சுட்டு வெளியே போன லெனினும், அஸ்மினும் காதலிக்கிறார்கள். காலேஜ்ல நடக்கிற சேர்மன் எலக்சன் உடைய மகன் அஜய் குமார் ஜெயிக்கணும்னு நினைக்கிறாரு. தன்னுடைய அப்பாவோடையே அரசியல் அதிகார பலத்த பயன்படுத்த நினைக்கிறார். இதை லெனின் மற்றும் அஸ்மினுடைய Friends எதிர்க்கிறார்கள். லெனின் – அஸ்மினுடைய காதல் விஷயம் R .V உதயகுமார்க்கு தெரிய வருது காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறதோட தன் மகளை மச்சான் சசிகுமாருக்கு கல்யாணம் பண்ணி கொடுக்கணும்னு முடிவு பண்றாரு. இந்த சூழ்நிலையில காலேஜ்ல பங்க்ஷன் நடக்குது.


அந்த ஃபங்ஷனுக்கு வர லெனினுக்கும், சசிகுமாருக்கும் சண்டை ஏற்படுது. இதுல சசிகுமார் இறந்து போறாரு. எதிர்பாராத நடந்த இந்த சம்பவங்களி னால எல்லாரும் என்ன பண்றதுன்னு தெரியாம முழிக்கிறாங்க. இது ஒரு பக்கம் இருக்க, ஈரோட்டில் ஒரு கொலை செஞ்சுட்டு தலைமறைவா சசிகுமார தேடி காலேஜுக்கு போலீஸ் வராங்க . போலீஸ் அவர் காலேஜ்குள்ள இருக்கறான்னு தேட ,இன்னொரு பக்கம் நடந்த கொலையிலிருந்து தப்பிக்க என்ன பண்றதுன்னு தெரியாம இறந்து போன பிணத்தைஅப்புறப்படுத்தவும் முடியாமல் லெனினும் அவர் கூட இருக்கிறவங்களும் பல முயற்சிகளை செய்றாங்க, இது மட்டுமல்லாமல் அஜய்குமார் தன் மாமாவ தேடுறாரு, ஒரு காம்பவுண்டுக்குள் நடக்கின்ற இந்த சம்பவங்களோட திரைக்கதை நகர முடிவு என்ன? என்பதுதான் படத்துடைய கிளைமாக்ஸ்.


இதுதான் தனக்கு அறிமுகப்படம் என்று தெரியாத வகையில் சிறப்பான நடிப்பை கொடுத்துள்ள கதாநாயகனாக நடித்திருக்கின்ற லெனின் அறிமுக நடிகருக்கான எந்த விதமான அடையாளமும் இல்லாமல் தடுமாற்றமும், தயக்கமும், பயமும் இல்லாமல் பல படங்கள் நடித்த அனுபவ நடிகர்களைப் போல் நடித்திருப்பது அவரின் திரைத்துறையை பயணத்திற்கான முதல் படிக்கும், படத்திற்கும் பலம் சேர்த்திருக்கு. கதாநாயகனுக்கு இந்த படத்தின் தலைப்பை போலவே தமிழ் சினிமாவில் ஒரு ரெட் கார்ப்பெட் அதாவது சிவப்பு கம்பள வரவேற்பு கொடுத்து வரவேற்கலாம்.


மலையாளத்தில் பாடகியாக தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகி இருக்கின்ற அஸ்மின் சில காட்சிகளுக்கும் மட்டுமே வராமல் கதையோடு பயணிக்கின்ற அவரின் கதாபாத்திரமும் நடிப்பும் ஆறுதலுக்குரியது, மற்றும் அனுபவம் மிக்க R.V உதயகுமார், முனீஸ் காந்த், அனுமோகன் இவர்கள் மட்டும் இல்லாமல் வில்லனாக வரும் சதீஷ்குமார், அண்ணனாக அடுத்த கட்டத்திற்கு பயணிக்க போகும் அஜித்குமார் என பலரும் கதைக்கு பலம் சேர்த்து, திரைக்கதை ஓட்டத்திற்கு வலு சேர்த்திருக்காங்க.


ஒளிப்பதிவாளர் சதீஷ் மெய்யப்பன்  தனது ஒளிப்பதிவு மூலம்  காட்சிகளை அழகுப்படுத்தி, அறிமுக கலைஞர்களை அழகாக்கி பட்ஜெட்டுக்குள்ளான படம் என்கின்ற எண்ண ஓட்டத்தை மாத்தி red label-, க்கு பலம் சேர்த்திருக்கிறார்.

இசையமைப்பாளர் கைலாஷ் மேனன் ஏற்கனவே மலையாளத்தில் 30 படங்களுக்கு மேல் பணியாற்றியுள்ளார், இது அவருக்கு தமிழில் முதல் அறிமுகப்படம், பாடல்களை கேட்பதற்கு இனிமையாக இந்த படத்தில் அவர் உருவாக்கியுள்ளார்.இவரின் பின்னணி இசை, திரைக்கதைக்கு துணையாக காட்சிகளுக்குள் கலந்திருக்கு.

வெற்றி பெற்ற எழுத்தாளராக இருக்கின்ற பொன் பார்த்திபன் எழுதிய கதைக்கு,திரைக்கதை அமைத்து மாறுபட்ட படமாக கொடுக்க முயற்சி செய்திருக்கிறார் அறிமுக இயக்குனர் வினோத். காதல், அரசியல்,குற்றம்,குற்றவாளிகள் இவற்றை சம அளவில் கலந்து,  அவற்றை காலேஜ் காம்பவுண்டுக்குள் கடக்க வைத்து புது முயற்சி செய்திருக்கிறார்கள்.எதிர்பாராமல் நடக்கும் சம்பவங்களை சரியான இடத்தில் அமைத்து திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தி இருந்துதிருக்கலாம் .

தங்களின் அறிமுக படத்தை பார்ப்பவர்களுக்கு சலிப்பைஏற்படுத்தாத வகையில் கொடுத்திருக்கின்ற இந்த அறிமுகங்களின் புது முயற்சிக்கு மக்களிடம் Green Label கிடைத்து திரைத்துறையில் தொடர்ந்து பயணிக்க இக்குழுவுக்கு வாழ்த்துக்கள்.

Spread the love