கடந்த கால காதலை நோக்கி நிகழ்காலத்தில் பயணிக்கும் இரண்டு இளம் உள்ளங்களின் தேடல்.
சென்னையில் இன்டிரியர் டிசைன் என்ஜினீயராக உள்ள அபிஷனுக்கு ஏனோ கல்யாணத்துல விருப்பம் இல்லை ஆனால் எப்படியாவது அவருக்கு கல்யாணம் செஞ்சி வைக்கவேண்டும் என்று அவரோட அக்கா ஆனந்தி முடிவு செய்யுறாங்க . மேட்ரிமோனி வழியாக ஒரு பெண்ணை (அனஸ்வரா ராஜன்)தேர்வு செய்து, அந்த பெண்ணை சந்திக்க அனுப்புறாங்க அக்காவோட பிடிவாதத்துனால காபிஷாப்- ல அனஸ்வரா ராஜனை சந்திக்க போறாரு அபிஷன் . இருவரும் சகஜமா பேச, அபிஷன் ஸ்கூல்ல தன்கூட படிச்ச காவ்யா அனிலை காதலித்த விஷயத்தை சொல்ல ,அப்பதான் அதே ஸ்கூல்ல தானும் படிச்சன்னு அனஸ்வரா சொல்ல இரண்டு பேரும் ஆச்சரிய படுறாங்க. ,இப்படி அபிஷன் காவ்யாகிட்ட தன்னோட காதலை சொல்லாமல் காதலித்த கதையை சொல்ல, அனஸ்வராயும் தன்கூட ஒரே கிளாஸ் படிச்ச ஹரிஷ் குமாரிடம் காதலை வெளிப்படையாக சொல்லவில்லைன்னு சொல்லுறாங்க. கல்யாணம் செய்துகொள்ள இருந்த இவர்களின் சந்திப்பு அவர்களின் முன்னாள் காதலர்களை இந்நாளில் சந்தித்து, இப்போது அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் முடிய ,அதன்படி இருவரும் திருச்சிக்கு போறாங்க.அதன் பின் நடைந்தவை என்ன என்பதுதான் மீதி கதை.

வெற்றிப்படம் கொடுத்த இயக்குனர்கள் திரையில் வெற்றி நாயகர்கள் ஆகவும் வலம் பெற துவங்கியுள்ள கால வரிசையில் தற்பொழுது நாயகனாக வெள்ளித்துறையில் கால் தடம் பதித்துள்ளவர் டூரிஸ்ட் ஃபேமிலி படைப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்த அபிஷன் ஜீவிந்த்.இவர் சத்தியசீலன் என்னும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இவர் தன்னுடைய அறிமுகப்படத்திலேயே சமகால இளம் ரசிகர்களை மிகவும் கவரும் வகையில் இயல்பாக தன நடிப்பை இந்த படத்தில் வெளிப்படுத்தியுள்ளார் .மோனிஷா என்னும் கதாபாத்திரத்தில் கதையின் நாயகியாக அனஸ்வரா ராஜன் நடித்துள்ளார். தன்னுடைய அழகான தோற்றத்தின் மூலமும் , இயல்பான நடிப்பின் மூலமும் தான் ஏற்றுக் கொண்ட கதாபாத்திரத்திற்கு ஏற்ற வகையில் தன் எண்ண உணர்வுகளை வெளிப்படுத்தும் சிறப்பான நடிப்பை அவரும்இந்த படத்தில் ,வெளிப்படுத்தி உள்ளார் அதேபோல சிறியதொரு கதாபாத்திரத்தில் நடித்துள்ள காவியா அனிலும் ,அனிஷா என்னும் கதாபாத்திரத்தில் நிறைவான நடிப்பு வெளிப்படுத்தி உள்ளார். மற்றும் பள்ளி ஆசிரியராக நடித்திருக்க கூடிய சரவணன், நாயகனின் தந்தையாக நடித்திருக்க கூடிய தேனி முருகன் மேலும் சகோதரியாக எடுத்திருக்கக்கூடிய ஆர் ஜே ஆனந்தி ,பள்ளி நட்பு வட்டாரங்களாக ஹரிஷ் குமார்,சச்சின் நாச்சியப்பன் ,சாச்சனா, டிம்பிள் கண்ணா, சித்தார்த் போன்றவர்களும் அவரவர் கதாபாத்திரங்களில் குறைவில்லாத நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.

ஜான் ரோல்டனின் இசையில், மோகன் ராஜன், உமா தேவி, மதன் வரிகளில் ,பாடல்கள் பார்ப்பதற்கும் கேட்பதற்கும் மிகவும் இனிமையாக உள்ளன மேலும் தன் பின்னணி இசை மூலம் காதல் உணர்வுகளுக்கு இணக்கமான பங்களிப்பினை படம் முழுவதும் இசையமைப்பாளர் கொடுத்துள்ளார். ஒளிப்பதிவாளர் ஸ்ரேயாஸ் கிருஷ்ணாவின் கேமரா , இழையோடிச் சொல்லும் காதலின் உணர்வுகளை காட்சிகளுக்கும் கதாபாத்திரங்களுக்கும் ஏற்ற வண்ணத்தில், கோணங்களையும், ஒளி அமைப்புகளையும் கொண்டு ,கண்கவரும் வகையில் படமாக்கி பதிவு செய்துள்ளது.
படத்தினை எழுதி வைத்திருப்பவர் மதன். எத்தனையோ விதவிதமான காதல் கதைகளை தமிழ் சினிமா கடந்து வந்திருக்கிறது, அந்த வரிசையில் முந்தைய காதலை தேடி பயணிக்கும் இரண்டு இளம் உள்ளங்களின் உணர்வுகளை பதிவு செய்யும் கதையை எடுத்துக்கொண்டு, அதற்கு பக்கபலமாக தொய்வில்லாத திரைக்கதை காட்சிகளை நகர்த்தி, கதைக்கு பாங்கான நடிகர்களையும், தேர்வு செய்து நடிக்க வைத்து, ஒரு இளமை ததும்பும் படமாக இந்த படத்தை இயக்குனர் உருவாக்கி இருக்கிறார்.
காதலர்களுக்கு நெருக்கமான காதலர் தினம் வரக்கூடிய இந்த பிப்ரவரி மாதத்தில் சிறப்பான காதல் ட்ரீட்டாக இந்த படம் அமைந்துள்ளது.
