Friday, April 24

சார் – திரை விமர்சனம்

போஸ் வெங்கட் இயக்கத்தில் விமல் நடித்துள்ள திரைப்படம் சார்.  மேலும் இத்திரைப்படத்தில் சாயா தேவி , சிராஜ் , சரவணன் , ரமா , ஜெயா பாலன், உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள்.இப்படத்தின் இசை சித்து குமார்

கிராமம் ஒன்றில் இருக்கும் நடுநிலைப் பள்ளியில் சரவணன் ஆசிரியராக உள்ளார். சரவணன். தனது தந்தைக்கு பிறகு தானும் ,தனக்கு பிறகு தன் மகனும், என் அந்த பள்ளியின் வளர்ச்சிக்கு பெரிதும் பங்களிப்பை தரவேண்டும், மேலும் .அந்த பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக உயர்த்த வேண்டும் என்னும் பெரும் இலட்சிய கனவுடன் உள்ளார் , அவரது மகன் விமல் படிப்பை முடித்த பின் அதே ஊருக்கு ஆசிரியராக வருகிறார் ,இந்த நிலையில் ஆதிக்க சாதியை சேர்ந்த தலைவர் ஜெயபாலன் அனைத்து மக்களுக்கும் கல்வி கிடைக்க கூடாது என்றெண்ணி அந்த பள்ளிக் கூடத்தை தகர்ப்பதற்க்கு திட்டமிடுகிறார் இறுதியில் .விமல் தன் தந்தையின் இலட்சிய கனவை நனவாக்கினாரா ? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை.

கதையின் நாயகனாய் விமல் சிவஞானம் என்னும் கதாபாத்திரத்தில் இயல்பாக நடித்துள்ளார் அவ்ருக்குப்பின் படம் முழுவதும் பொன்னரசன் என்னும் கதாபாத்திரத்தில் நடித்துள்ள சரவணனுக்கு இந்த படத்தில் நல்லதொரு கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது அவரும் தனக்கு கொடுக்கப்பட்ட பாத்திரத்தினை நன்கு பயன்படுத்தி சிறப்பாக நடித்துள்ளார்

நாயகியாக நடித்துள்ள சாயா தேவி கண்ணனுக்கு படத்தில் பெரிய அளவில் ஸ்கோப் இல்லையென்றாலும் கொடுக்கப்பட்ட காட்சிகளில் அவர் நன்கு நடித்துள்ளார் மேலும் சிராஜ்.எஸ் ,ரமா .ஜெயபாலன் ,சரவண சக்தி என அனைவரும் குறைவின்றி நடித்துள்ளார்கள்

இனியன் ஜெ. ஹரீஷின் ஒளிப்பதிவும் சித்துகுமாரின் இசையும் கதைக்கேற்ற பின்புலங்களை கொடுத்து இயக்குனருக்கு பக்க பலமாய் நின்றுள்ளது. வாழ்ககைக்கு கல்வி மிகவும் இன்றியமையாதது அதை கொடுக்கவிடாமல் தடுக்க நினைக்கும் சக்திகள், அதனுடன் எப்படி போராடி வெல்ல வேண்டும் என்ற கதைக்களத்தில் நிறைவான படமாக இயக்குனர்போஸ் வெங்கட் இந்த சார் படத்தை கொடுத்துள்ளார்.

மொத்தத்தில் இந்த சாருக்கு-பாஸ்மார்க் தாராளமாய் கொடுக்கலாம் .

Spread the love