Monday, April 20

ஹிட்லர்- திரை விமர்சனம்

தனா.இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள ஹிட்லர் படம் ஹிட் கொடுக்குமா?

அமைச்சர் சரண்ராஜுக்கு தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றால் அடுத்த முறை முதலைமைச்சர் ஆகும் வாய்ப்பு உள்ளதால் எப்பாடுபட்டாவுது மீண்டும் தேர்தலில் வெற்றிக்கனியை பறிக்க வேண்டும் என்ற முனைப்புடன் கோடிக்கணக்கில் பணத்தை மக்களுக்கு வாரிஇறைக்க அவர் முடிவு செய்கிறார்.ஆனால் அந்தப் பணம் கைமாறும் நேரத்தில் களவாடப்படுகிறது .மேலும் மூன்று நபர்கள் சுட்டுக்கொல்லப்படுகின்றனர்.இதனை கண்டறிய போலீஸ் அதிகாரியான கௌதம் வாசுதேவ் மேனன் நியமிக்கப்படுகிறார்.இதற்கிடையில் சென்னைக்கு வேலை தேடிவருகிறார் செல்வா ( விஜய் ஆண்டனி). பணம் கொள்ளையடிக்கப்பட்டதற்கும் செல்வாவிற்கும் தொடர்பு உள்ளதா ? அந்த கொலைகளை யார் செய்து இருக்கக்கூடும் ?போன்ற பல புதிர்களுகான விடையினை `ஹிட்லர்’ படத்தின் மீதி கதை சொல்லும்.

கதையின் நாயகனாய் புதிய ஆக்ஷன் களத்தில் விஜய் ஆண்டனி களமிறங்கியுள்ளார் அவருக்கென்று அவர் அமைத்துள்ள நடிப்பு பாணியில் இந்த முறையும் அவர் வெற்றி பெற்றுள்ளார் என்றே சொல்லலாம், நாயகியாக ரியா சுமன் தோற்றத்திலும், நடிப்பிலும் பாஸ்மார்க் வாங்கியுள்ளார்.

மேலும் படத்தில் ரசிகர்களின் தனி கவனத்தை பெறுபவர் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள கௌதம் வாசுதேவ் மேனன் இவரது அனுபவ நடிப்பு திரையில் மிளிர்கிறது.மேலும் மீண்டும் வில்லனாகநடித்துள்ள சரண்ராஜ், விவேக் பிரசன்னா,,ஆடுகளம் நரேன் ஆகியோரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாப்பாத்திரங்களில் நல்ல நடிப்பை கொடுத்துள்ளார்கள்.

மணிரத்தினத்தின் உதவி இயக்குனராக இருந்த தனா, இந்த படத்தை தெளிவான திரைக்கதை காட்சிகளுடன் பொருத்தமான நடிகர்களை கொண்டு சிறப்பான படமாக உருவாக்கியுள்ளார் . இசை அமைப்பாளர் விவேக் -மெர்வினின் இசையில் பாடல்களை காட்டிலும் பின்னணி இசை சிறப்பு . ரயில் காட்சிகளில் நவீன் குமாரின் ஒளிப்பதிவு குறிப்பிட்டு சொல்லும் வகையில் நன்றாக உள்ளது.

ஹிட்லர் -ஹிட் அடிப்பார்.

Spread the love