நிகில் அத்வானியின் இயக்கத்தில் ஜான் ஆபிரகாம் , ஷர்வரி அபிஷேக் பானர்ஜி மற்றும் ஆஷிஷ் வித்யார்த்தி ஆகியோர் நடித்துள்ள படம் வேதா.
கதையின் நாயகிக்கு அதிகாரங்களை கையில் கொண்டுள்ள ஆதிக்க வாதிகளிடம் வரும் இடையூறுகளையும் அந்த தடைகளெல்லாம் , ராணுவ வீரர் ஒருவரின் உதவியுடன் எப்படி முறியடிக்க அவள் போராடினாள் என்பதுதான் வேதா கதை..
இராணுவ வீரரின் கதாபாத்திரத்தில் கதையின் நாயகனாக நடித்துள்ள ஜான் ஆபிரகாம் தான் ஏற்று கொண்ட கதாபாத்திரத்துக்கு பொருந்தும் உடல் மொழியுடன் நன்கு நடித்துள்ளார் ஆக்ஷன், எமோஷன் என அனைத்து காட்சிகளிலும் இன்னுடைய அனுபவ நடிப்பின் முத்திரை பதிய அவரது நடிப்பு அமைந்துள்ளது
முழுக்கதையினையும் தாங்கி சுமக்கும் கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ள நாயகி ஷர்வாரிகாட்சிகளுக்கு தேவையான அளவுக்கு நன்கு நடித்துள்ளார் மேலும் படத்தின் தனி அடையாளமாக சிறப்பு தோற்றத்தில் தமன்னாவும், மற்றும் எதிர்மறைக்கதாபாத்திரத்தில் நடித்துள்ள அபிஷேக் பானர்ஜி,ஆஷிஷ் வித்யார்த்தி போன்றோரின் பாத்ரபடைப்புகளும் அவற்றை அவர்கள் வெளிபடித்துள்ள விதமுமும் சிறப்பாக உள்ளது
அசிம் அரோரா எழுத்தில் படைக்கப்பட்டுள்ள இப்படத்தை நிகில் அத்வானி இயக்கியுள்ளார். உண்மைச் சம்பவங்களிலிருந்து எடுக்கப்பட்ட கதை களத்துக்கு பொருத்தமான காட்சிகளை இயக்குனர் அமைத்து உள்ளார் அதுமட்டுமின்றி மேலும் .கதாபாத்திரங்களுக்கு ஏற்ற நேர்த்தியான நட்சத்திரத்தேர்வினையும் இயக்குனர் செய்துள்ளது பாராட்டுக்குரியது .
ஒளிப்பதிவாளர் மலாய் பிரகாஷின் கேமரா கோணங்கள் மற்றும் ஒளிஅமைப்பும், கார்த்திக் ஷாவின் பின்னணி இசையும் கதையோட்டத்துடன் பயணித்து இயக்குனருக்கு பக்க பலமாய் நின்றுள்ளன அமல் மாலிக் ,யுவா,ராகவ் அர்ஜூன், மனன் பரத்வாஜ் இசையில் பாடல்கள் ரசிக்கும் படி உள்ளன .
வேதா – அதிரடி ஆக்ஷன் நிறைந்த படம்.
