Tuesday, April 28

ஒரு தவறு செய்தால்- விமர்சனம்

மணி தாமோதரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ஒரு தவறு செய்தால் திரைப்படத்தில் எம். எஸ். பாஸ்கர், நமோ நாராயணன், ராம், உபாசனா, பாரி, ஸ்ரீதர் சுரேந்தர் சந்தோஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.

சினிமாவில் வெற்றிபெற வேண்டும் என்ற கனவுடன் உதவி இயக்குநராக வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் ராம், தங்கியுள்ள வீட்டுக்கு வாடகை கொடுக்க இயலாத சூழலில் வீட்டின் உரிமையாளரால், நண்பர்களுடன் வெளியே அனுப்பப்படுகிறார் .இதனால் தங்க இடம் தேடும் சூழலில் ஒருவரை சந்திக்கின்றனர். அதன்பின் அவரின் ஐடியாவின்படி அங்கு நடக்கும் தேர்தலைப் பயன்படுத்தி பணம் சம்பாதிக்க நினைக்கிறார்கள். அவர்கள் நினைத்தபடி நடந்ததா ? என்பது தான் படத்தின் மீதி கதை.

படத்தில் நடித்துள்ள ராம், ஸ்ரீதர்,உபாசனா ஏற்றுக்கொண்ட கதாபாத்திரங்களுக்கு தேவையான நடிப்பை கொடுத்துள்ளார்கள் ,M .S. பாஸ்கர் ,நமோநாராயணன்  இருவரின் நடிப்பிலும் அனுபவ முத்திரை பளிச்சிடும் வண்ணமாக நன்கு நடித்துள்ளார்கள் ..

எடுத்துக்கொண்ட கதைகளத்துக்கு தேவையான காட்சிகளையும், பொருத்தமான நடிகர்களையும் கொண்டு படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் மணி தாமோதரன்.விஜயகிருஷ்ணா மற்றும் மகேஷ் ஸ்ரீதரின் ஒளிப்பதிவும்N ராயனின் இசையும்N இயக்குனருக்கு பக்க பலமாய் அமைந்துள்ளது.

தேர்தல் காலத்துக்கு பொருத்தமான படம்..

Spread the love